பிப்ரவரி 15 - வியாழன் கிழமை 


நல்ல நேரம்:


காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


கௌரி நல்ல நேரம்:


காலை 12.30 மணி முதல் காலை 01.30 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு:


நண்பகல் 1.30 மணி முதல் நண்பகல் 3.00 மணி வரை


குளிகை:


காலை 9.00 மணி முதல் மதியம் 10.00 மணி வரை


எமகண்டம்:


காலை 6.30 மணி முதல் காலை 7.00 மணி வரை


சூலம் - தெற்கு


இன்றைய ராசிபலன்கள்:


மேஷம்


வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


ரிஷபம்


உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் விவேகம் வேண்டும். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். 


மிதுனம்


குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபார பணிகளில் உள்ள சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.


கடகம்


எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். கால்நடை தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். வாகனப் பயணங்களால் லாபம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். 


சிம்மம்


எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் தடைகள் தோன்றி மறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விவேகமான சிந்தனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறு தூர பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.


கன்னி


குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செய்கின்ற செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். 


துலாம்


மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.


விருச்சிகம்


நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனம் நிமிர்த்தமான செலவுகள் உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வியாபாரத்தில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வாழ்க்கை துணைவரிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.


தனுசு


மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். இலக்கினை அடைவதற்கான பயிற்சிகளை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். 


மகரம்


சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் கனிவு வேண்டும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும்.


கும்பம்


எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களில் நன்மைகள் உண்டாகும். வீட்டு தேவைகள் நிறைவேறும். வரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். 


மீனம்


விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். திடீர் பயணங்களின் மூலம் புதிய மாற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த இலக்குகளை உருவாக்குவீர்கள். புதிய தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும்.