நாள்: 06.09.2022


நல்ல நேரம் :


காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை


இராகு :


காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். பிடித்தவர்களிடம் இருந்து பரிசுகள் கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதில் புதுவித சந்தோஷம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் வசூலாகும். சம்பள பாக்கி கைக்கு வரும். சிவபெருமானை வணங்கி சிறப்பு அடையலாம். 


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான நாள் ஆகும், குடும்பத்தில் புதிய வரவு உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் தானாக வந்து சேருவார்கள். குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும். காதலர்கள் இடையே இருந்த மனக்கசப்பு அகலும். மனம் விட்டு பேசுவீர்கள்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு பணவரவு உண்டாகும். தொழிலில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். மனைவி வழியில் மகிழ்ச்சியான செய்தி வரும். பிள்ளைகள் நலன் கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத ஆலய பயணம் மேற்கொள்வீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும்.


கடகம் :


கடக ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு வீண் செலவு உண்டாகும். தேவையற்ற அலைச்சல் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிடித்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. விட்டுக்கொடுத்துச் செல்வதால் பெரிய பிரச்சினைகளை தவிரக்கலாம். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு பணவரவு உண்டாகும். சொத்து பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும் சூழல் உண்டாகும். தொலைபேசி வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பெரியவர்கள் பேச்சைக் கேட்டு செயல்படுவீர்கள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,


இந்த நாள் மிகவும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்டநாட்களாக மனதில் நீடித்து வந்த குழப்பம் அகலும். புதிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வியாபாரத்தில் பல விஷயங்களை கற்றுத்தேர்வீர்கள். இந்த நாள் ஏராளமான அனுபவம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே,


இந்த நாள் மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். வீண் சலனம் மனதில் வந்து, வந்து போகும். திங்கிட்கிழமையான இன்று சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நல்லது. மாலை நேரங்களில் ஆலயத்திற்கு செல்வது நல்லது. தொழில் விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்திவைப்பது நல்லது.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே,


தொழில் சார்ந்த புதிய முயற்சியில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். புதிய நபர்களால் தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். விருத்தி நிறைந்த நாள். 


தனுசு :


தனுசு ராசி நேயர்களே,


மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். செயல்பாடுகளில் மந்தத்தன்மையும், ஒருவிதமான உடல் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். வெளியூரில் இருந்து புதிய வேலை தொடர்பான செய்திகள் கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். தடைகள் விலகும் நாள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே,


பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான சில விஷயங்களுக்கு தீர்வு காண்பீர்கள். பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். அறிமுகம் கிடைக்கும் நாள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே,


மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வீட்டில் மனதிற்கு பிடித்தவாறு சில மாற்றத்தை செய்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே,


செய்தொழிலில் மேன்மையான சூழல் அமையும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். மனை தொடர்பான கடன் உதவி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.