RasiPalan Today July 10: 


நாள்: 10.07.2023 - திங்கள் கிழமை


நல்ல நேரம் :


காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


சூலம் - கிழக்கு


இன்றைய ராசிபலன்கள் 


மேஷம்


எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் மேம்படும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனக்குழப்பங்கள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.


ரிஷபம்


வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள் குறையும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


மிதுனம்


எதிலும் பொறுமையுடன் செயல்படவும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.


கடகம்


உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் பொறுப்புகள் மேம்படும்.  தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆலய வழிபாடுகளின் மூலம் மனதெளிவு உண்டாகும். தடையாக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். தெளிவு நிறைந்த நாள்.


சிம்மம்


பயின்ற பேச்சுக்களை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் பொறுமை வேண்டும். வெளியூர் சார்ந்த பயணங்களில் மாற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். அனுபவம் மேம்படும் நாள்.


கன்னி


மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்பத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்கள் மீதான கண்ணோட்டங்களில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூகம் பற்றிய புதிய பார்வை உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வர்த்தக துறையில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.


துலாம்


கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரர் வகையில் ஆதரவு ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாகும். பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். தடங்கல் விலகும் நாள்.


விருச்சிகம்


திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வாக்குறுதிகளை தவிர்க்கவும். பூர்வீகத்தால் ஆதாயம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான தெளிவு பிறக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படும். கவலைகள் விலகும் நாள்.


தனுசு


வியாபார ரீதியான பயணங்கள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் ஏற்படும்.  தனவரவுகளில் திருப்தி உண்டாகும். தாமதம் குறையும் நாள்.


மகரம்


சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முடிவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.


கும்பம்


எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். தனவரவுகள் தாரளமாக இருக்கும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.  நெருக்கமானவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வரவுகள் நிறைந்த நாள்.


மீனம்


நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். கலைப் பொருட்களில் கவனம் வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்கவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் மலரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கால்நடை விஷயங்களில் தெளிவு ஏற்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.