நல்ல நேரம்:


காலை- 10:30 மணி முதல் 11:30 மணி வரை


கெளரி நல்லநேரம்:









இரவு - 6:30 மணி முதல் 7:30 மணி வரை


ராகுகாலம்: 


பகல்- 1:30மணி முதல் 3 மணி வரை


குளிகை:


பகல் 9:00 மணி முதல் 10:30 மணி வரை 


எம கண்டம்:


காலை 6 மணி முதல் 7:30 மணி வரை


சூலம், பரிகாரம்:


தெற்கு , தைலம்


சந்திராஷ்டமம்:


உத்திராடம்


இன்றைய ராசிபலன்கள்:


மேஷம்:


வீண் செலவுகள் வந்து சேரும். தேவையற்ற முயற்சிகளை எடுக்க வேண்டாம். ஒரு ரூபாய் செலவு செய்யும் இடத்தில் 5 ரூபாய் செலவிட நேரிடலாம். நினைத்ததை முடிக்க கடும் சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதம் வந்து போகும். 


ரிஷபம்:


கடன், பாக்கி வராமல் நெருக்கடியை சந்திக்கலாம். வழக்கு , வியாதி பயம் வரும். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தாரிடம் கனிவாக பேசி பழகவும். பிள்ளைகள் மீது அக்கறை செலுத்தவும். சுபச் செலவுகள் வந்து போகும். 


மிதுனம்:


எதிர்பார்த்தவை தள்ளிப்போகும். நினைத்தது நடக்கவில்லையே என்கிற கவலை சூழ்ந்து கொள்ளும். இறைவழிபாடு மன நிம்மதி தரும். உங்கள் சூழலை குடும்ப உறவோடு இணைத்து குழப்ப வேண்டாம். நல்லதே நடக்கும் என ஓரிரு நாள் காத்திருக்கலாம்.


கடகம்: 


பெற்றோர், நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும். கடனில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவீர்கள். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் சூழல் உருவாகும். 


சிம்மம்:


அதிகாரிகளிடம் பணிவாக நடக்கும் சூழல் உருவாகும். பணிவு உங்களை உயர்த்தும். குடும்பத்தார் உங்களை நினைத்து பெருமை கொள்வார்கள். உங்கள் எண்ணங்கள், வெற்றியை நோக்கி செல்லும். கீழ் பணியாற்றுபவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


கன்னி:


எதிர்பார்த்த வெற்றி கை கூடும். நீண்ட நாள் காத்திருந்த, எதிர்பார்த்த தகவல் தொலைபேசி வந்து சேரும். வியாபார ரீதியாக நீங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவீர்கள். உங்கள் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். வீண் கோபத்தை குறைத்து முன்னேற்றத்தை பற்றி சிந்தியுங்கள். 


துலாம்: 


உங்களுக்கு இன்று நன்மையான நாள். முதலீடுகள் நல்ல முன்னேற்றம் தரும். புதிய தொழில் சிந்தனை மேலோங்கும். வெளியூர் பயணங்கள், வெளிநாடு பயணங்கள் செய்ய அழைப்பு வரலாம். கடல் கடந்த தொழில் ஸ்தானம் மேலோங்கும். 


விருச்சிகம்: 


முடிந்த வரை இன்று அமைதியாக இருப்பது நல்லது. கோபத்தை தூண்டும் செயல்கள் நடைபெறலாம். அனைத்திற்கு பொறுமை மட்டுமே உங்கள் பதிலாக இருக்க வேண்டும். உங்கள் முயற்சிகள் உங்களுக்கு பயனளிக்கிறதோ இல்லையோ, உங்கள் நிறுவனத்திற்கு பயனளிக்கும். 


தனுசு:


இன்று சுறுசுறுப்பாக நீங்கள் செயல்பட வேண்டும். தேவையற்ற தாமதத்தால் பொருள் இழப்புகளை சந்திக்கலாம். உயர் அதிகாரிகள் கடிந்து கொள்வார்கள். பண இழப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சி தரும். குழந்தைகள் உங்களுடன் அன்பாக இருப்பார்கள். 


மகரம்: 


ஆன்மிக பணிகளில், தானம் தர்மம் போன்ற நற்செயல்களை செய்வீர்கள். எளியோருக்கு உதவும் சூழல் ஏற்படலாம். பெற்றோர் உங்களை எண்ணி பூரிப்பார்கள். பண வரவு இருக்கும். மனதில் நிம்மதி குடிகொள்ளும். பிள்ளைகள் உங்கள் வழி நடப்பர்.


கும்பம்: 


தொழிலில் மேன்மை அடையும் நாள் இன்று. வாகன போக்குவரத்தில் கவனம் வேண்டும். வம்பு வழக்குகளில் எளிதில் சிக்க வாய்ப்புள்ளது. கவனமாக செயல்படவும். வீண் ஜாமின் கையெழுத்துக்கள் போட வேண்டாம். உங்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்


மீனம்:


உங்கள் பணி மீதான பாராட்டு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். உங்கள் புதிய முயற்சிக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். முதலாளிகள், மேலதிகாரிகள் உங்களை அழைத்து பாராட்டுவார்கள். உறவினர்கள் வீடு தேடி வரலாம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண