நல்ல நேரம்:


காலை- 6:30 மணி முதல் 7:30 மணி வரை


மாலை- 4:30 மணி முதல் 5 மணி வரை



கெளரி நல்லநேரம்:









இரவு - 7:30 மணி முதல் 8:30 மணி வரை





ராகுகாலம்: 




பகல்-  7:30 மணி முதல் 9 மணி வரை


குளிகை:


பகல் 1:30 மணி முதல் 3 மணி வரை 


எம கண்டம்:


பகல் 10:30 மணி முதல் 12 மணி வரை


சூலம், பரிகாரம்:


கிழக்கு , தயிர்


சந்திராஷ்டமம்:


பூரட்டாதி


இன்றைய ராசிபலன்கள்:


மேஷம்:


வீண் வாதங்களில், பிறர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். முடிந்த வரை அமைதியாக இருப்பது நன்று. வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. குடும்பத்தார் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலனில் சிறிது கவனம் செலுத்தவும்.


ரிஷபம்:


பிறருக்கு கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். மற்றவர்கள் எதிர்ப்பை எளிதில் வென்று முடிப்பீர்கள். ஆன்மிகம், குலதெய்வ வழிபாட்டில் அதிக நாட்டம் இருக்கும். வெளியூர் பயணங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.


மிதுனம்:


உடல் நலக்குறைவு ஏற்படலாம். வீட்டில் நல்ல ஓய்வு உடல்நிலையில் முன்னேற்றம் தரும். வீண் வதந்திகளை நம்பி பதட்டம் கொள்ள வேண்டாம். குடும்பத்தார் அரவணைத்து உங்களுக்கு ஆதரவு தருவார்கள். பணிபுரியும் இடத்தில் சிறுசிறு நெருக்கடி இருக்கலாம்.


கடகம்: 


தேவையற்ற மறதியால் பெரிய சிக்கல்களை சந்திக்க நேரிடும். உயர் அதிகாரிகள் கடிந்து கொள்வார்கள். பண விவகாரங்களில் கொஞ்சம் கவனம் தேவை. வெளியூரிலிருந்து வரும் தகவல்கள், மகிழ்ச்சி தரலாம். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துங்கள். 


சிம்மம்:


உங்கள் செயல்பாடுகள் பிறரால் கவரப்படும். உங்களை ஊக்கப்படுத்த பலரும் முன்வருவார்கள். நீண்ட நாட்கள் இழுத்துக் கொண்டிருந்த வேலையை முடித்துவிடுவீர்கள். திட்டமிட்டபடி ஷாப்பிங் செல்ல வாய்ப்புள்ளது. விருந்து உண்டு மகிழலாம். 


கன்னி:


நன்மை கை கூடி வரும். பெற்றோர் வழி, பூர்வீக வழி சொத்துக்கள் கைக்கு வரும். கல்வி, தொழில் முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் வழி இடையூறுகள் வரலாம். உறவினர்கள் பகையை சம்பாதிக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தார் உங்களை கண்டு பெருமை கொள்வர். 


துலாம்: 


மனதில் கவலை குடிகொள்ளும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறும் சூழல் உருவாகும். கடன் நெருக்கடிக்கு ஆளாகலாம். தெய்வ வழிபாடு மன நிம்மதியை தரும். முடிந்த வரை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுடன் தகராறு வேண்டாம். 


விருச்சிகம்: 


ஆதாயமான நாளாக இன்றைய நாள் இருக்கும். விரையம் இருந்தாலும் பாதிப்பு இருக்காது. சொத்து சேர்க்கும் படலம் தொடங்கியுள்ளதால், அது தொடர்பான அலைச்சல் இருக்கலாம். கை கூடி வரும் நிலையில் சுப நிகழ்ச்சிகள் இருக்கும். பணத்தேவைகள் இருக்கும். 


தனுசு:


எல்லாம் கூடி வரும் நாள். சுகமான அனுபவத்தை பெறுவீர்கள். குடும்பம், தொழில் எல்லாம் மகிழ்வாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். தொலைபேசி வழி தகவல்கள் புத்துணர்வு அளிக்கும். விரைவில் சுபச் செய்திகள் தேடி வரும்.


மகரம்: 


விலை போகாத பொருட்கள் கூட விலை போகும். எதிர்பார்த்ததை விட தன வரவு இருக்கும். இழுத்தடித்த சூழல் பனி போல் விலகும். திட்டமிட்ட அனைத்தும் நடந்தேறும். குடும்பத்தாருடன் வீண் வாதங்கள், சண்டைகள் வேண்டாம். 


கும்பம்: 


குழந்தைகள், பெற்றோர் உடல் நலன் கருதி அச்சம் கொள்வீர்கள். கவலை வேண்டாம்... எல்லாம் சீராகும். பண வரவு இருக்கும். தொழிலில் சின்ன நெருக்கடிகள் வந்து போகலாம். முடிந்தவரை பிறர் ஆலோசனைகளை தவிர்க்கவும்.


மீனம்:


அன்னதானம், நன்கொடை போன்றவற்றில் நாட்டம் செல்லும். இறைவழிபாடு மீது அதீத நம்பிக்கை எழும். புதிய வரவுகள் வரலாம். பாக்கிகள் வசூலாகும். கடன் தொல்லைகள் விலகும். எலக்ட்ரிக் பொருட்கள் வாங்க வாய்ப்பு உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண