நல்ல நேரம்:
காலை- 10:30 மணி முதல் 11:30 மணி வரை
கெளரி நல்ல நேரம்:
பகல் - 12:30 மணி முதல் 1:30 மணி வரை
இரவு - 6:30 மணி முதல் 7:30 மணி வரை
ராகுகாலம்:
காலை- 1:30 மணி முதல் 3 மணி வரை
குளிகை:
மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை
எம கண்டம்:
பகல் 9 மணி முதல் 10:30 மணி வரை
சூலம், பரிகாரம்:
தெற்கு , தைலம்
சந்திராஷ்டமம்:
சித்திரை , சுவாதி
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்:
வீண் அலைச்சலை சந்திக்கும் நாள் இன்று. தலையை சுற்றி மூக்கை தொடும் நிலை. எளிதில் கிடைக்க வேண்டியது போராடி கிடைக்கும். ஆனால், கிடைக்கும். இறைவழிபாடு நன்மை தரும். வீண் கோபங்களை தவிர்க்கவும்.
ரிஷபம்:
நல்ல அனுகூலமான நாள் இன்று. எதிர்பார்த்த வரவு இருக்கும். முதலீடுகள் திருப்தி தரும். கடன் தீரும். புதிய முயற்சிகள் கைகூடும். பயணத்தில் இனிப்பான செய்திகள் வரலாம். உறவினவர்கள் வழி நற்செய்திகள் வரும். உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மிதுனம்:
வியாபாரம், தொழில் அனைத்திலும் நல்ல ஆதாயம் கிடைக்கும். கடந்த கால கசப்பான அனுபவங்கள் தவிர்க்கப்படும். நீண்ட நாள் நிலவிய பிரச்சனை முடிவுக்கு வரும். குடும்பத்தார், உடன்பிறந்தோம் நிதி உதவி செய்ய வாய்ப்புள்ளது.
கடகம்:
வீண் செலவுகள் வந்து சேரும். பெற்றோர், குழந்தைகள் நலனில் அக்கறை வேண்டும். நீண்ட திடீர் பயணங்கள் வரலாம். தேவையற்ற குழப்பங்கள் சூழ்ந்து கொள்ளும். புதிய முயற்சிகளை இன்று ஒரு நாள் தவிர்ப்பது நல்லது. வாகன செலவுகள் வரலாம்; கவனமாக செல்லவும்.
சிம்மம்:
பணிபுரியும் இடம், குடும்பம், கல்வி நிறுவனம், தொண்டு நிறுவனங்களில் உள்ளோர் அவர்கள் இருக்கும் இடத்தில் மேன்மை பெறுவார்கள். நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். உறவினர்கள் சந்திப்பு கிடைக்கும். கோபத்தை குறைத்து, நிதானமாக பேசவும்.
கன்னி:
புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று. முன் கோபத்தால், வீண் முடிவுகளை எடுக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார் சொல்லும் அறிவுரைகளில் உண்மை இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். புதிய ஒப்பந்தங்களை சிந்தித்து செயல்படுத்தவும்.
துலாம்:
வீண் செலவுகள் வந்து சேரும். அமைதியாக வீட்டில் இருப்பது நல்லது. இறை வழிபாடு மனதிருப்தி தரலாம். சுபச்செலவுகளை தவிர்க்க முடியாது. குடும்பத்தலைவர், குடும்பத் தலைவி நலனில் அக்கறை வேண்டும். வேலை பளு அதிகரிக்கும்.
விருச்சிகம்:
நினைத்த பொருள் வீடு தேடி வரும். மகிழ்ச்சி பொங்கும். நிம்மதியாக உணர்வீர்கள். பொருளாதா தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். நல்லதை நோக்கி நகர்வீர்கள். நீண்ட நாள் தள்ளிப்போன இறைவழிபாடு கைகூடும். சிறுசிறு மனகசப்புகள் நீங்கும்.
தனுசு:
சில நாட்களாக நிலவி வந்த குழப்பம் நீங்கி, தெளிவான மனநிலை அடைவீர்கள். சுறுசுறுப்பாக புத்துணர்வுடன் இன்றைய நாளை துவக்குவீர்கள். பணியில் இருந்த தொல்லைகள் நீங்கும். உயர்அதிகாரிகள் பாராட்டுவார்கள். பணத்தை கவனமாக கையாளவும்.
மகரம்:
நல்ல விருந்து, நண்பர்களுடன் மகிழ்ச்சி, குடும்பத்தாருடன் சுற்றுப்பயணம் என மகிழப் போகும் நாள். எதிர்பாராத வசதிகள் வந்து சேரும். புதிய அனுபவங்கள் கிடைக்கும். செலவு இருக்கும்; அதற்கான பயனும் இருக்கும்.
கும்பம்:
தொழில், கல்வி ரீதியான உயர்வான இடத்தை பெறும் நாள். காத்திருந்த முடிவுகள் வெளியாகலாம். எதிர்பார்த்த தகவல் வந்து சேரலாம். புதிய பதிவி உயர்வு குறித்த பரிசீலனை தொடங்கலாம். பல வழிகளில் இன்று மேன்மையான உணர்வை பெற வைக்கும்.
மீனம்:
உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பணியில் வேகம் அதிகரிக்கும். நல்ல மனநிலையில் பணிச்சூழல் இருக்கும். அதே நேரத்தில் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். பணத்தேவை போதிய அளவு இருக்கும். ஆனாலும், நெருக்கடி இருப்பதை போன்ற ஒரு உணர்வு உள்ளோடும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்