தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் பழனி மலைக்கோயிலுக்கு ரோப்கார் மூலமாக வருகை புரிந்தார். அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்த பின் ரோப்கார் மூலமாகவே மலையடிவாரத்தை வந்தடைந்தார். 


இதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் வாக்குப் பதிவுகள் அமைதியாக நடைபெற்றதையொட்டி முருகனுக்கு நன்றி செலுத்த வந்ததாகவும், தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமையும் என கூறினார்.  


மேலும், எத்தனை அபாண்டமான பழிகளை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தூக்கி வீசினாலும், அத்தனையும் சின்னாபின்னமாகி  தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி  என தெரிவித்தார்.