அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,  டிசம்பர் மாதத்தில் 5 கிரகங்கள் பெயர்ச்சியாக இருக்கின்றன.  உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.


சிம்ம ராசி:


சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் கேதுவும், எட்டாம் இடத்தில் ராகுவும் அமர்ந்து குடும்பத்தில்  அவ்வப்போது மகிழ்ச்சியை கொண்டு வந்தாலும்.  சிறு, சிறு சலசலப்புகளை நீங்கள் சமாளிக்க தான் வேண்டும்.  எவ்வளவுதான் உங்களுக்கு வருமானம் வந்தாலும் போதவில்லையே என்ற கலங்கி நிற்கும் உங்களுக்கு டிசம்பர் மாதத்தில் வரப்போகும் ஐந்து கிரக பெயர்ச்சி மிகவும் சாதகமான நிலையை கொண்டு வந்து சேர்க்கும்.


சூரியன் பெயர்ச்சி :


டிசம்பர் 16ஆம் தேதி சூரியன் பெயர்ச்சி நடக்க வருகிறது சிம்ம ராசிக்கு அதிபதியான சூரிய பகவான் ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சியாவதால் ஒளி கிரகமான சிம்மத்திற்கு சூரியனின் பலம் கிடைத்து நிச்சயமாக மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையப் போகிறீர்கள்.  மூன்று நட்சத்திரத்தில் சூரியன் பயணம் செய்வதால் சிம்ம ராசிக்கு என்ன விதமான  பலன்கள்  நடைபெறும் என்பதை பார்க்கலாம். 


சிம்ம ராசிக்கு  சூரிய பகவான் தனுசு ராசியில் மூன்று நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.  முதலாவது மூல நட்சத்திரத்தில்  சூரியன் பயணம் செய்யும்பொழுது  இரண்டாம் அதிபதி  இரண்டாம் வீட்டில் அமர்ந்த கிரகமான கேது  போன்றவற்றின் சக்தியை ஐந்தாம் வீடு மூளையுமாக  அதாவது உங்கள் புத்தி கூர்மை மூலமாக அனைத்து பிரச்சனைகளுக்கும் நீங்கள் தீர்வு காண்பீர்கள்.  அடுத்ததாக சூரியன் சுக்கிரனுடைய நட்சத்திரமான பூராடத்தில் பயணம் செய்யும்பொழுது  தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கின்ற அத்தனை காரியங்களும் வெற்றி பெறும்.  குறிப்பாக அரசு, அரசு சார்ந்த துறைகள், கலைத்துறையைச் சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு ஏற்றமான காலகட்டமாக அமையும்.  சூரியன் தன்னுடைய சொந்த நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் பயணம் செய்யும்பொழுது எதிலும் வெற்றி, எல்லாவற்றிலும் வெற்றி என்ற ஒரு மிகப்பெரிய சாதனையை நீங்கள் படைக்கப் போகிறீர்கள்.


சுக்கிரன் பெயர்ச்சி :


டிசம்பர் 25ம் தேதி சுக்கிரன்  துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் சுக்கிரன் உங்களுக்கு மூன்றாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் ஆகி நான்காம் வீட்டில் பிரவேசிப்பதால் உடலில் இருந்த நோய் எல்லாம் தீர்ந்து  ஆரோக்கியமாக உணரப் போகிறீர்கள். புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று எண்ணியிருந்த உங்களுக்கு நல்ல செய்தி காதுக்கு வந்து சேரப் போகிறது. 


விருச்சக ராசியில் சுக்கிரன் மூன்று நட்சத்திரத்தில் பிரயாணம் செய்யப் போகிறார். விருச்சகத்தில் குருவினுடைய நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணம் செய்யும்பொழுது சிம்ம ராசிக்கு ஏற்றமாகவே அமையும் சூரியனும் குருவும் நட்பு கிரகங்கள் என்பதால் நிச்சயமாக ஐந்தாம் பாவம் கூர்மையாக வேலை செய்யும். 


அதேபோல சனியினுடைய நட்சத்திரத்தில் சுக்கிரன் பிரவேசிக்கும் போது ஏழாம் வீட்டில் வீட்டிற்குரிய சனி   திருமண காரியங்களை வெற்றிகரமாக முடித்து தருவார்.  சுபச் செலவுகளுக்காக நீங்கள் கையிருப்புகளை கரைக்க வேண்டி வரலாம்.  சுக்கிரன் உங்களுக்கு பத்தாம் அதிபதி நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கும் பொழுது வீடு வண்டி வாகனம் ட்ரான்ஸ்போர்ட் போன்ற அனைத்து காரியங்களிலும் வெற்றியை தரப் போகிறார்.


செவ்வாய் பெயர்ச்சி :


செவ்வாய் பகவான் சிம்மத்திற்கு யோகாதிபதி நான்காம் வீட்டிற்கும் ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதி உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பிரவேசிப்பது  எதிலும் வெற்றி எல்லாவற்றிலும் வெற்றி என்ற முழக்கத்துடன் டிசம்பர் மாதத்தில் செயல்பட போகிறீர்கள்.  செவ்வாய் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது  வீடு மனை தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும்.  தாய் தந்தையின் உடல் ஆரோக்கியம் கூடும்.  செவ்வாய் பகவான் பூராட நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது உங்களுக்கு இதுவரை இருந்த  தொழில் போட்டிகள் விலகும். 


தொழில் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் வெளிநாடு சென்று வருவீர்கள். புதிய முதலீடுகளை தொழிலில்  ஏற்படுத்தி அதன் மூலம் நல்ல லாபம் பார்க்க போகிறீர்கள். பணக்கையிருப்பு இரண்டு மடங்காக உயிரும்.  செவ்வாய் பகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது,  தன வரவு தாராளமாக இருக்கும் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி பொங்கும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.  நினைத்த எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். 


உங்களுடைய நான்காம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் பிரவேசிப்பதால்  பழைய வீட்டை புதுப்பிக்கும் எண்ணம் எழலாம்.  மனையை விற்று வேறு ஒரு இடத்தில் மனை வாங்க வேண்டும் என்று எண்ணியிருந்த உங்களுக்கு நிச்சயமாக அந்த எண்ணங்கள் ஈடேறி முடியும்.  அழகு சாதன பொருட்கள் மர வேலைபாடுகள்  கற்கள் நிறைந்த பகுதியில் வேலை செய்வோர்  போன்றவர்களுக்கான சிறப்பான காலகட்டம் இது.


புதன் பெயர்ச்சி :


புதன் பகவான் உங்களுடைய ராசிக்கு 11 ஆம் அதிபதி இரண்டாம் அதிபதியாகி ஐந்தாம் வீட்டில் பிரவேசிப்பதுமிகப்பெரிய யோகத்தை கொண்டு வரும். குறிப்பாக தொலைக்காட்சி திரைத்துறை என்று சதா அதில் சாதிக்க வேண்டும் என்று நினைத்திருப்பவர்களுக்கு, இந்த காலகட்டம் ஒரு பொற்காலமாகவே அமையும்.  அரசு அரசு சார்ந்த துறைகளில் நீங்கள் வேலையில் அமர்வீர்கள்.  புத்திரர்கள் வழியில் நன்மை பிறக்கும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று கூறுவீர்கள் .  போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் வம்பு வழக்கு என்று சதா எந்நேரம் வழக்குகளில் சிக்கி இருக்கும் உங்களுக்கு மிகப்பெரிய விடுதலை கிடைக்கப் போகிறது. சனிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதம் இருந்து வர நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நினைத்தது  நடக்கும்.