அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,  டிசம்பர் மாதத்தில் 5 கிரகங்கள் பெயர்ச்சியாக இருக்கின்றன.  உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.


புதன் பெயர்ச்சி :


டிசம்பர் 13ம் தேதி புதன் பகவான் தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் உங்கள் ராசி அதிபதி நான்காம் வீட்டில் பெயர்ச்சியாவது உங்களுக்கு இருந்த நோய் நொடிகள் இருந்த இடம் தெரியாமல் செல்லும்.  நிலம், வீடு, மனை போன்றவை சாதகமாக அமையும். புதிய வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருந்த உங்களுக்கு இந்த புதன் பயிற்சி மிகவும் சாதகமாக அமையப் போகிறது.  உங்கள் ராசியாதிபதி பத்தாம் அதிபதி ஆகிய  புதன் உங்களுக்கு நான்காம் வீட்டில் மூன்று நட்சத்திரத்தில் பிரவேசிக்கப்போகிறார்.  புதன் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது கன்னி ராசியிலேயே அமர்ந்திருக்கும் கேது போலவே செயல்படுவார். நீங்கள் நினைத்த காரியம் நடத்துவீர்கள். விநாயகர் வழிபாடு மூலமாக உங்களுக்கு வருகின்ற சிக்கல்களை நீங்கள் தீர்த்துக் கொள்ள முடியும் .


சூரிய பெயர்ச்சி :


டிசம்பர் 16ம் தேதி சூரிய பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு பெயர்ச்சியாக போகிறார். சூரியன் உங்களுக்கு நிறைய அதிபதி அது நான்காம் வீட்டில் பிரவேசிக்கும் பொழுது  சுபச் செலவுகளுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.  எதிர்பாராத தன வரவு இருக்கும்.  நீண்ட தூர பயணம் மேற்கொள்ளப் போகிறீர்கள்.  வெகு நாட்களாக நீண்ட தூர பிரயாணம் மேற்கொள்ள வேண்டும். குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று மிகப்பெரிய எண்ணத்தை வைத்திருந்த உங்களுக்கு அந்த எண்ணங்கள் ஈடேறக்கூடிய காலமாக இது அமையப்போகிறது. 


சூரியன் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது தடைபட்ட காரியங்கள் நடைபெறும். சூரியன் பூராட நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது கன்னி ராசிக்கு இரண்டுக்கும் ஒன்பதிற்கும் அதிகபதி  நட்சத்திரம் நிச்சயமாக நன்மையை செய்யும். வெளிமாநிலம், வெளிநாடு என்று இருந்த இடத்தை விட்டு உங்களை நகர்த்தி செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்.  சூரியன் தன்னுடைய சொந்த நட்சத்திரமான உத்திராட நட்சத்திர பிரவேசிக்கும்போது, உடலில் இருந்த வியாதிகள் மருத்துவமனையில் செலவுகள் மூலமாக குணமாகும்.


சுக்கிரன் பெயர்ச்சி :


டிசம்பர் 25ஆம் தேதி சுக்கிர பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.  விருச்சிக ராசி நீரும் மழையும் நிறைந்த ராசி.  உங்களுடைய கன்னி ராசிக்கு இரண்டிற்கும் 9க்கும் அதிபதி  மூன்றாம் வீடான வெற்றி ஸ்தானத்தில் பிரவேசிக்கும் பொழுது உங்களின் பேச்சுக்கு மரியாதை கூடும்.  உங்களுடைய எண்ணங்களும் செயல்களும் புத்துணவு பெறும்.  வாழ்க்கையில் நீங்கள் எதை சாதிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தீர்களோ? அதற்கான முயற்சி மேற்கொள்வீர்கள்.  வெற்றி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது.


விருச்சிக ராசியில் குரு பகவானுடைய நட்சத்திரம் அனுஷ நட்சத்திரம், கேட்டை நட்சத்திரம் என்று மூன்று நட்சத்திரங்கள் உள்ளது.  சுக்கிரன் குருவின் உடைய நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது  தடைப்பட்ட திருமணங்கள் காண பேச்சுவார்த்தை நடைபெறும். நீண்ட நாட்களாக காத்திருந்த  வம்பு, வழக்குகள்  முடிவுக்கு வரும்.  அனுஷ நட்சத்திரமான சனி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது  கடன் பிரச்சினைகள்  தீர்வதற்கான வழி வகையை ஏற்படுத்திக்  கொடுக்கும். அதேபோல சுக்கிரன்  கேட்டை நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது உங்களுடைய ராசி அதிபதி சுகஸ்தானத்தில் வீற்று இருப்பதால்,  வீடு, வண்டி, வாகனம்  போன்றவற்றின் சிறப்பான முன்னேற்றங்களை கொண்டு வரும்.  சுக்கிரனுடைய பெயர்ச்சியால் ஒரு  நல்ல முன்னேற்றமான படங்களை நீங்கள் பெறப் போகிறீர்கள்.


செவ்வாய் பெயர்ச்சி:


டிசம்பர் 27ஆம் தேதி செவ்வாய் பகவான் விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.  உங்களுடைய ராசிக்கு 3 இருக்கும் எட்டாம் அதிபதியுமான செவ்வாய் நான்காம் வீட்டில் பிரவேசிக்கும் போது  சற்று கவனமாக இருப்பது நல்லது.  சாலையில் வாகனங்களை ஓட்டி செல்லும் பொழுது  நிதானமாக கவனமாக செல்வது  சிறந்தது.  சாலை வளைவுகளிலும் குறுகலான பாதைகளிலும் வாகனத்தை இயக்கும் பொழுது நிதானமாக இயக்குனர். 


எட்டாம் அதிபதி செவ்வாய் நான்காம் வீட்டில் பிரவேசிக்கும் பொழுது சிறு விபத்து கண்டங்களை கொண்டு வரக்கூடும்.  அதேபோல  வீடு மனை போன்ற விஷயங்களிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது.  ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கன்னி ராசி அன்பர்கள் ஒரு நிலத்தை வாங்கி விற்க  போகிறீர்கள் என்றால், அதற்கான பட்டா மற்றும்  முறையான பத்திரங்கள் இருக்கிறதா? என்று பார்த்து அதை மற்றவர்களிடத்தில் கைமாற்றி விடுவது நல்லது.  செவ்வாய் 3 நட்சத்திரங்களில் அமரப் போகிறார்  செவ்வாய் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது நீங்கள் வேலை விஷயமாக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி வரலாம். 


அதேபோல செவ்வாய் பூராட நட்சத்திரத்தில் அமரும்போது புண்ணிய சித்திரங்களுக்கு சென்று வருவதற்கான சிறப்பான காலகட்டம்.  செவ்வாய் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது  மனதிற்கு மகிழ்ச்சியான காரியங்கள் நடைபெறும்.  கெட்டவன் கேட்டில் கிட்டிடும் ராஜயோகம் என்ற பழமொழிக்கு  ஏற்ப 12 ஆம் அதிபதியின் நட்சத்திரத்தில் எட்டாம் அதிபதி அமரும் பொழுது நிச்சயமாக அது ராஜயோகத்தை கொண்டு வரும்.  டிசம்பர் மாதம் பொதுவாகவே உங்களுக்கு ஏற்ற இறக்கமான  பலன்களையும் கொண்டு வரப் போகிறது.


விருச்சிக ராசியில் நுழையும் புதன் :


டிசம்பர் 28ஆம் தேதி வக்ரகதியில் புதன் பகவான் விருச்சக ராசிக்கும் நுழைகிறார். உங்கள் ராசி அதிபதி புதன்  வீட்டில் நுழையும் பொழுது  தைரியம் தன்னம்பிக்கை கூடும்.  காரியங்கள் வெற்றியாக முடியும்.  வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.  இந்த டிசம்பர் மாதம் முழுக்க உங்களுக்கு ஏற்ற இறக்கமான காலகட்டமாகவே அமையப் போகிறது.  வாழ்த்துக்கள் வணக்கம் !!!