மயிலாடுதுறை மாவட்ட புண்ணிய ஸ்தல நீர்நிலைகளில் 2 ஆண்டுக்கு பிறகு ஆடி அமாவாசை வழிபாடு

மயிலாடுதுறையில்  காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் அமைந்துள்ள புனித துலாக்கட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்காக திதி கொடுத்து பலிகர்ம பூஜைகள் செய்து, பொதுமக்கள் வழிபாடு செய்தனர். 

Continues below advertisement

ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பது  ஐதீகம். ஆடி அமாவாசையை முன்னிட்டு புண்ணியஸ்தலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கூட்டம் கூட அனுமதி  இல்லை என்பதால் நீர் நிலைகளில் அமாவாசை வழிபாடு செய்ய அரசு தடை விதித்ததிருந்தது. ஆனால் இந்தாண்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நீர்நிலைகளில் ஆடி அமாவாசை வழிபாடு நடந்த தடையேதும் இல்லை.

Continues below advertisement


ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோயில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் மற்றும் பிரசித்திபெற்ற காவிரி துலா கட்டத்திலும் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கும், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலும் ஏராளமானோர் படை எடுப்பார்கள். 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு ஓடுகின்றது. காசிக்கு நிகராக மயிலாடுதுறை காவிரி துலாகட்டம் திகழ்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக வரலாறு. இங்கு 16 தீர்த்தகிணறுகள்  உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.


காவிரி ஆற்றில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடி அமாவாசை பக்தர்கள் கொண்டாட  தடை விதிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இந்த ஆண்டு தடை நீக்கப்பட்டதுடன், காவிரியில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் ஆடி அமாவாசையான  நூற்றுக்கணக்கானோர் அதிகாலை முதல் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola