2024 ஆம் ஆண்டு கடக ராசி வருட பலன்:


அன்பார்ந்த வாசகர்களே,  கடக ராசிக்கு எத்தனை துன்பங்கள், எத்தனை துயரங்கள், 2023 ஆம் ஆண்டில் சந்தித்த எத்தனை பிரச்சனைகள், உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் என்பதை அனைத்து ஜோதிடர்களும் நன்றாக அறிவார்கள்.  காரணம் 12 ராசிக்காரர்களின்  கடக ராசிக்காரர்களே அதிகமான பிரச்சனை உடன் ஜோதிடர்களை சந்தித்தார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.  அப்படி என்றால் மத்த ராசிக்கு பிரச்சனை இல்லையா என்று கேட்பீர்கள்.  அந்தந்த ராசிக்கு ஏற்றார் போல பிரச்சினைகள் பெரிதாகவோ சின்னதாகவோ அவர்கள் வாழ்வில் நடக்கக்கூடும்.  கடக ராசியின் கடந்த இரண்டு வருட காலம் மிக வனவாச காலம் என்றே கூற வேண்டும்.  குறிப்பாக தொழில ஸ்தானத்தில் அமர்ந்த ராகு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலவிதமான தொழில் மாற்றங்களையும் தொழில் ஏற்ற இறக்கங்களையும் தொழிலில் நிலை இல்லாத தன்மையும் கொடுத்து உங்களை மிகவும் அழச்சலில் ஆட்படுத்தி இருப்பார்.  உங்களுடைய ராசிக்கான பலன்களை 2024 ஆம் ஆண்டில் இரண்டாகப் பிரிக்கிறேன்.


2024-ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்கள் : தொழிலில் இருந்து வந்த சிக்கல் அகலும் !!!


ஏற்கனவே தொழில் ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வந்த நீங்கள் 2023 ஆம் ஆண்டு வருடத்தின் கடைசி மூன்று மாதங்கள் ஏதோ ஓரளவுக்கு மூச்சுவிடும் அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையை  நகர்த்த ராகு பகவான் இடம் கொடுத்திருப்பார். காரணம் ராகு உங்கள் தொழில் ஸ்தானத்திலிருந்து ஒன்பதாம் இடமான உங்கள் பாக்கியஸ்தானத்திற்கு இடம்பெயர்ந்தார்.  பத்தாம் இடத்தில் ராகு பகவான் இருந்தால் என்ன செய்வார்.  தொழிலில் இரட்டிப்பு லாபம் பெற வேண்டும் என்பதற்காக பல தொழில்களை ஆரம்பிப்பதோ அல்லது இருக்கும் தொழிலில் இருந்து உங்களை வெளிக்கொண்டு வருவதோ அல்லது முதலீடு செய்து புதிய தொழில்களை பிரம்மாண்டமாக விரிவு படுத்தலாம் என்ற எண்ணத்தையே கொடுத்திருப்பார்.  இப்படி பல வியூகங்களை வகுத்து உங்களுடைய தொழிலில் லாபம் பார்ப்பதற்காக எடுத்த முடிவுகள் வெற்றி அடைந்திருக்குமா என்றால் நிச்சயமாக அது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 


காரணம் ராகு தான் அமர்ந்த வீட்டின் அதிபதி போலவே செயல்படுவார் ராகு அமர்ந்த வீடு மேஷம் மேஷத்திற்கு அதிபதி செவ்வாய் 45 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் ஒவ்வொரு ராசி கட்டமாக பெயர்ந்து இருப்பார் அப்படி பார்த்தால் கடக ராசிக்கு பத்தாம் இடத்திற்கும் ஐந்தாம் இடத்திற்கும் ஆன  செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை ராசியில் நகரும்போது ராகுவும் அதே போலவே உங்களுக்கு 45 நாட்களுக்கு ஒரு முறை ஏற்றமான இறக்கமான பிரச்சனைக்குரிய மிக பிரம்மாண்டமான வெற்றி போன்ற ஏற்ற இறக்கமான சிக்கல்களை மாறி மாறி கொண்டு வந்து இருப்பார்.  தொழில் கிடைக்காதா என்ற இயக்கத்தை உருவாக்கி இருப்பார். 


இப்படிப்பட்ட ராகு பகவான் அக்டோபர் 30ஆம் தேதி 2023ல் உங்களுடைய பத்தாம் வீட்டிலிருந்து பெயர்ச்சியாகி உங்களுடைய பாகிஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அதாவது மீன வீட்டில் பரவேசித்திருப்பார்.  இந்த காலகட்டம்  உங்களுக்கு சில ஏற்றங்களை கொண்டு வந்திருக்கும்.  கவலை வேண்டாம்  2024 ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்களில்  குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் அமரப்போகிறார் பாகிஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகு குருவினுடைய வீட்டில் அமர்ந்திருப்பதால் பாக்கிய குருவாகவே  செயல்பட போகிறார் அப்படி என்றால் 9ஆம் இடத்தில் ராகு ராகுவுக்கு வீடு கொடுத்த கிரகம் குரு அவர் பத்தாம் இடத்தில்  உங்களுக்கு தொழிலில் ராஜயோக வாழ்க்கை அமையப்போகிறது


வீடு, மனை,வாகன யோகம் உண்டு:


கடக ராசிக்கு கடந்த ஒன்றை வருடங்களில் 4-ம் இடத்தில் கேது பகவான் அமர்ந்திருந்தார். கேது தடையை கொண்டு வருவார். குறிப்பாக வீடு, மனை, வாகனம், தாயார் போன்ற விஷயங்களில் உங்களுக்கு சற்று சுணக்கமான பலன்களை கொடுத்திருப்பார். எடுத்துக்காட்டாக நீங்கள் தொழில் வேலை பார்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள், அப்போது உங்களுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று போன் கால் வந்திருக்கும். உடனடியாக அடித்து, பிடித்து வீட்டிற்கு சென்று தாயாரின் உடல் நிலையை கவனித்திருப்பீர்கள் அல்லது வீடு வண்டி வாகனம் சம்பந்தமான  சிக்கல்களால்,  தொழிலில் பிரச்சனைகள் ஏற்பட்டு, இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக தொழிலை விட வேண்டி வந்திருக்கும். இப்படி இருந்த உங்களுக்கு இந்த 2024 ஆம் ஆண்டு ஜாக்பாட் ஆண்டாகவே அமையப்போகிறது.  நான்காம் இடத்தில் இருந்து கேது விலகி உங்களுக்கு  அனைத்திலும் வெற்றியை கொடுக்கப் போகிறார். பத்தாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தை பார்ப்பதால் தனஸ்தானம் உயரப் போகிறது  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.


2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் வரை:  


மற்ற 12 ராசிகளை காட்டிலும்  கடக ராசிக்கு அமோகமான பலன்களை வாரி வழங்கப் போகிறார் குரு பகவான் காரணம் என்னவென்றால் குரு மேஷ ராசியிலிருந்து பெயர்ச்சியாகி ரிஷப ராசிக்கு வந்து உங்களுடைய ராசியின் லாப ஸ்தானத்தில் அமர்வதால் ஆறுக்கும் ஒன்பதாம் இடத்திற்கும் அதிபதி லாப ஸ்தானத்தில் அமரும்போது உங்களுடைய கடன் சல்லி பைசா மிச்சம் இல்லாமல் மொத்தமாக அடையப்போகிறது உங்களுக்கு வர வேண்டிய அனைத்து  நல்ல காரியங்களும் நிகழப் போகிறது.  வீட்டில் சுபகாரிய விசேஷங்கள் வீடு மனை வாகனம் வாங்குதல்,  புதிய தொழிலில் முன்னேற்றம்,   வேலை  ஸ்தலத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.  பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று கூடுவீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.  கேட்ட இடத்தில் உடனடியாக பணம் கிடைக்கும். வாழ்க்கையில் எதிலும் வெற்றி, வெற்றி என்ற ஒற்றைச் சொல்லை நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கப் போகிறீர்கள் !!!


அதிர்ஷ்டமான நிறம் :  வெள்ளை, மஞ்சள் 
அதிர்ஷ்டமான எண் : 5, 9
வணங்க வேண்டிய தெய்வம் :  அம்மன் வழிபாடு