இன்றைய நாள் பஞ்சாங்கம் விவரம் : August 02, 2024
ஆடி மாதம் வெள்ளிக்கிழமை இன்று. மிகவும் விசேசமான நாள். அம்மனுக்கு உகந்த நாள். ஆடி மாதம் முழுவதும் செவ்வாய், வெள்ளி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது பல்வேறு நன்மைகளை தரும் என்று நம்பப்படுகிறது. இன்றைய நாளில் நல்ல நேரம், ராகு உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்களை பார்க்கலாம்.
ராகு காலம் என்பது ராகுவிற்கும் கேதுவிற்கு எமகண்டத்தையும் சொல்கிறார்கள். அதுபோல குளிகை என்பது சனி பகவானின் ஆதிக்க நேரம் என்று சொல்லப்படுகிறது.
குளிகை நேரத்தில் எதை செய்யலாம், செய்யகூடாதது என்ன?
குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் அது வளர்ந்து கொண்டே போகும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதனால், இந்த நேரத்தில் வாழ்விற்கு எதிர்மறையான சக்தியை தரும் எதையும் செய்ய கூடாது. உதாரணமாக கடன் வாங்குவது இறந்தவர் உடலை எடுப்பது உள்ளிட்டவற்றை செய்வதை தவிர்க்கலாம்.
கடனை திருப்பிக் கொடுப்பது, வீடு, நகை வாங்குவது, நகை அணிவது, வீடு கிரகப்பிரவேசம் செய்வது போன்ற சுபநிகழ்ச்சிகளைச் செய்தால், தொடர்ந்து செய்வதாக அமையும். எந்தவித தடையும் இன்றி சுபமாக முடியும். சுப காரியங்கள் தொடர வேண்டும் என்று நினைத்தால் அவற்றை செய்யலாம்.
எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் அதற்கு நல்ல நேரத்தில் செய்ய வேண்டும். இறை வழிபாடு தொடங்கி புதிதாக வீட்டிற்கு ஏதாவது பொருள் வாங்க இருக்கிறீர்கள், வெளியூருக்கு பயணம் மேற்கொள்கிறீர்கள், திருமண நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ், நகை வாங்குவது உள்ளிட்ட சுப காரியங்கள் எதுவாக இருந்தாலும் நல்ல நேரத்தில் அதை தொடங்குவது நல்லது என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். சுப காரியங்கள் எதுவாக இருந்தாலும் அதை நல்ல நேரத்தில் தொடங்குவது மிகவும் நல்லது. ராகு காலம், எம கண்டம் ஆகிய நேரங்களில் யாரும் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள். ஆனால், பலரும் குளிகை காலத்தை தேர்வு செய்து சில முக்கியமான விஷயங்களை செய்து வருவது நடைமுறையில் உள்ளது.
நல்ல நேரம், கௌரி நல்ல நேரம், இராகு காலம், எமகண்டம், குளிகை , சூலம் , பரிகாரம் ,சந்திராஷ்டமம் ஒரு நாளில் எந்த நேரத்தில் வருகிறது என்பதை கவனித்து செயல்படவும்.
தமிழ் ஆண்டு - குரோதி வருடம் : ஆடி மாதம் 17, வெள்ளிக்கிழமை
சூரியோதயம் - 5:58 AM
சூரியஸ்தமம் - 6:31 PM
ராகு காலம் : 10:30 AM முதல் 12:00 PM வரை
திதி : திரயோதசி (03:27 PM வரை) பின்னர் சதுர்தசி
நட்சத்திரம் : திருவாதிரை (10:59 AM வரை) பிறகு புனர்பூசம்
சந்திராஷ்டமம் - விருச்சிக ராசி
யோகம் : ஹர்ஷணம் 11:45 AM வரை - அதன் பின் வஜ்ரம்
(ஹர்ஷணம் - Aug 01 12:49 PM – Aug 02 11:45 AM
வஜ்ரம் - Aug 02 11:45 AM – Aug 03 11:00 AM)
கரணம் : வனசை 03:27 PM வரை பிறகு பத்திரை 03:35 AM
(வனசை - Aug 02 03:25 AM – Aug 02 03:27 PM
பத்திரை - Aug 02 03:27 PM – Aug 03 03:35 AM)
சூலம் - மேற்கு ( பரிகாரம் - வெல்லம் )
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை
இராகு - 10:30 AM – 12:00 PM
எமகண்டம் - 3:23 PM – 4:57 PM
குளிகை - 7:32 AM – 9:06 AM
துரமுஹுர்த்தம் - 08:29 AM – 09:19 AM, 12:40 PM – 01:30 PM
தியாஜ்யம் - 11:29 PM – 01:09 AM