ஆவணி தேதி 1 முதல் 15 வரை ராசிபலன் :
தனுசு ராசி முதல் மீன ராசி வரை:
அன்பான தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார் ஏற்கனவே உங்கள் ராசி அதிபதி குரு ஆனபடியால் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்து அதன் மூலம் புகழ்பெருவீர்கள் என்ற ஒரு கூற்று உண்டு தற்பொழுது சூரியன் ஒன்பதாம் வீட்டில் ஒளியை பிரகாசித்து அடுத்தவர்களுக்காகவே உங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான சில முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டி வரும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் உங்களுடைய நற்பெயர் உயரும்... குறிப்பாக ஒரு வழிகாட்டியாக ஆசிரியராக கூட நீங்கள் இல்லாமல் இருக்கலாம்... ஆனாலும் உங்கள் துறையில் ஒரு வழிகாட்டியாக இருந்து அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள் அதன் மூலம் நன்மதிப்பையும் பெறுவீர்கள்... குருமார்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்... தெய்வங்களின் அனுக்கிரகம் உண்டு.... நீங்கள் என்றோ சொன்ன ஒரு நல்ல வாக்கியம் உங்கள் வீட்டிலோ அல்லது நண்பர்கள் மத்தியில் உறவினர்கள் மத்தியிலும் அது பெரிய தாக்கத்தை உண்டாக்கலாம்.... அது உங்களுக்கு புகழைத் தரலாம்.... பூர்விக தொடர்பு ஏற்படும்... குலதெய்வத்தின் அனுக்கிரகம் உண்டு... வேலையில் நல்ல முன்னேற்றமும் அதன் மூலம் பெயர் புகழும் கிடைக்கும்.. சிலர் வேலை நிமித்தமாக நீண்ட தூரங்களுக்கு சென்று வர வாய்ப்பு உண்டு... உங்களுடைய அதிர்ஷ்டமான நிறம் பச்சை....
மகர ராசி:
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்தில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார் எட்டில் மறைந்து விட்டாரே அல்லது கெட்டுவிட்டாரே என்று யாரேனும் சொன்னால் அல்லது உங்களுக்கு தோன்றினால் அது தவறு சூரியன் எட்டில் ஒளி வீசும் போது நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை பற்றி நன்றாக புரிந்து கொள்வீர்கள்... எதிரிகள் உங்களை தாக்க நினைத்தால் அவர்கள் அழிவார்கள்... குறிப்பாக வழக்குகளில் வெற்றி பெறப் போகிறீர்கள்.... இதனால் வரை உங்கள் பின்னால் பேசிக் கொண்டிருந்தவர்கள் வெட்கி தலை குனிவார்கள்.... உங்களுடைய குடும்பத்திலும் வாழ்க்கைத் துணையின் குடும்பத்திலும் உங்களது அந்தஸ்து உயரும்... புதிய காரியங்களை மேற்கொள்வீர்கள் அதன் மூலம் நல்ல மதிப்பும் உண்டா தொழில் ரீதியான வளர்ச்சி உண்டு குறிப்பாக தொழிலில் இதுவரை லாபம் பெறாதவர்கள் கூட இந்த காலகட்டங்களில் லாபம் அனுபவிக்கலாம்.... உங்களுடைய அதிர்ஷ்டமான நிறம் கருப்பு....
கும்ப ராசி :
அன்பார்ந்த கும்ப ராசி அன்பர்களே உங்களுடைய ராசிக்கு ஏழாம் இடத்தில் சூரியன் நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப் போட்டவர்களுக்கு எல்லாம் இது ஒரு வாய்ப்பு... உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக அமைந்திருந்தால் நிச்சயமாக திருமண பந்தத்தில் இணைய வாய்ப்புண்டு.... ஐந்தாம் இடத்தில் குரு இருந்து காதல் விவகாரங்களில் உங்களை முன்னெடுத்து சென்றாலும் திருமண ரீதியாக அவற்றை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்க்க சூரியன் உதவி புரிவார்... தெரிந்திருந்த தம்பதிகள் ஒன்று கூட இது ஏற்ற காலம்... கும்ப ராசி பொருத்தவரை நீண்ட தூர பிரயானங்கள் உங்களுக்கு எப்போதுமே இந்த காலகட்டங்களில் சாதகமாக அமையும்.... யாரைப் பற்றி கவலைப்படாமல் ஒரு இடத்தில் பிடிக்கவில்லை என்றால் நகர்ந்து கொண்டே இருப்பீர்கள்.. நண்பர்கள் தலைவர்கள் ஆனாலும் உங்களைப் புரிந்து கொண்டு பேச வருவார்கள்... பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு... உங்களுடைய அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு...
மீன ராசி :
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு... இதனால் அடுத்தவர்கள் பொறாமைப்பட்டு உங்கள் பின்னால் பேச ஆரம்பித்து இருப்பார்கள்... கவலை வேண்டாம் ஆவணி மாதத்தில் சூரியன் ஆறாம் இடத்தில் பிரவேசித்து எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுவார்... மனதிற்கு பிடித்தவர்கள் நெருங்கி வந்து பேச முயற்சிப்பார்கள்.... பிடித்தவர்களோடு நீண்ட தூரப் பிரயாண மேற்கொள்ள வாய்ப்பு அதிகம்.... கடன்கள் அதிகமாக இருக்கிறது என்று சிந்தித்தாலும் கூட அதை எப்படி அடைப்பது என்பதற்கான வழிகள் திறக்கும்.... உடல் ரீதியாக சற்று கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.... தெய்வத்தினுடைய அனுக்கிரகத்தால் உடல்நிலை சீராகும்... யார் எவ்வளவு என்ன பேசினாலும் அமைதியாக செல்வது நல்லது... சிறிய பேச்சுவார்த்தை கூட தீப்பொறி சண்டையாக மாற வாய்ப்புண்டு... எந்த பஞ்சாயத்து வந்தாலும் உங்களை வெல்ல முடியாது.... உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்... அதிர்ஷ்டமான எண்கள் 3,5,9