மாசி மகத்தின் சிறப்புகள் :


மாசி மாதத்தில் வரக்கூடிய மக நட்சத்திரத்தில் சந்திரன் பயணம் செய்யும்போது  பௌர்ணமியுடன் கூடிய சுபதினத்தில் மாசி மகம் கொண்டாடப்படுகிறது.  27 நட்சத்திரங்களில் மகம் நட்சத்திரம் ஒரு சிறப்பான நட்சத்திரம்.  இந்த நட்சத்திரம் சிம்ம ராசியில் அமைந்திருக்கிறது.  ஒரு பழமொழி உண்டு


“மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்”


இந்த வாசகத்திற்கு ஏற்ப மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  ஜகத்தை ஆளக்கூடிய வல்லமை பெற்றவர்களாக விளங்குவார்கள்.  குறிப்பாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் தான் நம்முடைய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  என்பது நம்மில் பல பேருக்கு தெரியும். அவர் எப்படி தமிழ்நாட்டை ஆண்டார் என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. 


இப்படி மகம் நட்சத்திரத்தின் சிறப்புகள் ஒருபுறம் இருக்க,  மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பிரவேசிக்கிறார்.  இந்த மாதத்தில் வடநாட்டில் கும்பமேளா என்றும் கொண்டாடுகிறார்கள்.  சூரியன் கும்ப ராசியில் அமர்ந்து தன்னுடைய சொந்த ராசியான சிம்மத்தை பார்வையிடுகிறார்.  இந்த மாசி மக நாளில் எந்த ராசியினர் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.


மேஷ ராசி :


அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு மாசி மகத்தன்று  சிவபெருமான் கோவிலுக்கு சென்று மனம் உருகி பக்தியுடன் அவரை வழிபட்டு வர வேண்டும்.  அதுமட்டுமல்லாமல்  சிவபெருமானுக்கு வில்வ இலையினால் அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி செய்தால் மாசி மகத்தன்று உங்களுக்கு சிவபெருமானின் அருள் கிடைத்து வாழ்வில் எல்லா நலமும் வளமும் கிடைக்கும்.


ரிஷப ராசி :


அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு மாசி மகத்தன்று ஆஞ்சநேயர் வழிபாடு சிறந்தது.  மாசி மகத்தன்று உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று  ஏழு அகல் விளக்கினால் அவருக்கு தீபம் ஏற்ற வேண்டும்.  ஏழேழு ஜென்மத்திற்கும் மேற்பட்ட சாபம் நீங்கி  குடும்பம் தழைக்கும். பணவரவு உண்டாகும்.


மிதுன ராசி :


அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  மாசி மகத்தன்று முருகன் கோவிலுக்கு சென்று, கோவிலில்  மூன்று நெய் தீபம் வாங்கி  கிழக்கு முகமாய்  ஒன்றாக  திரித்து விளக்கை ஏற்ற வேண்டும். அது மட்டும் இல்லாமல்  விளக்கை ஏற்றிய பின்பாக முருகன் கோவிலை ஏழு முறை சுற்றிவர வேண்டும்.  இப்படி செய்தால் உங்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்படும்.  பணவரவு மூன்று மடங்காக உயரும்.


கடக ராசி :


அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே  மாசி மகத்தன்று அம்மன் கோவிலுக்கு சென்று  எலுமிச்சம் பழத்தை இரண்டாக பிளந்து  அவற்றில் இருக்கும் சாறை வெளியே எடுத்துவிட்டு  பழத்தின் தோல் பகுதியின் மேல் எண்ணெயை ஊற்றி  இரண்டு  எலுமிச்சையில் விளக்குகள் போட வேண்டும்.  இப்படி செய்தால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.   தடைபட்ட சுப காரியங்கள் நடைபெறும்.  வாழ்க்கை ஒளிமயமாகும்.


சிம்ம ராசி :


அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  நீங்கள்  பரமேஸ்வரன்,  எம்பெருமான் சிவபெருமானின் கோவிலுக்கு சென்று  அங்கே ஒரு ஏழு நிமிடம்  சிவபெருமானை நினைத்து  அமைதியான முறையில் மனதை ஒருநிலைப்படுத்தி  கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ஈடுபட்டால்.  நம்மைப் பிடித்த தரித்திரம் விலகும்.  வீட்டில் லட்சுமி கடாக்ஷம் பெருகும்.  நினைத்த காரியம் நடைபெறும்.  கோடீஸ்வர யோகம் உண்டாகும்.


கன்னி ராசி :


அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  நீங்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று  துளசி மாலையை அவருடைய பாதத்தில் சமர்ப்பித்து.  கோவிலின் பிரகாரத்தை  ஐந்து முறை சுற்றிவர வேண்டும்.  இப்படி மாசி மகத்தன்று நீங்கள் செய்யும் பட்சத்தில்  வீட்டில் தடைபட்ட சுப காரியங்கள் நிறைவேறும்.  பணவரவு உயரும்.  நினைத்த காரியங்களை நடத்திட முடியும்.


துலாம் ராசி :


அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  பெருமாள் கோவிலில் இருக்க கூடிய சக்கரத்தாழ்வாரை சென்று  தரிசனம் செய்யுங்கள்.  அப்படி மாசி மகத்தன்று சக்கரத்தாழ்வார் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள்,  வீட்டிலேயே பூஜையறையில்  சக்கரத்தாழ்வார்  படங்களை வைத்து  மலர்களால் பூஜை செய்துவர  உங்களை பிடித்த தரித்திரம் விலகும்.  பிரபஞ்சத்தில் தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்.  குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.  நிலைத்த பணவரவு  கிடைக்கும்.


விருச்சக ராசி :


அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  மாசி மகத்தன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.  முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும்  கொடிமரத்து அருகில்  ஆறு  நெய் தீபம் ஏற்றி வர வேண்டும்.  அப்படி செய்யும் பட்சத்தில்  சகல நன்மைகளும் உங்களுக்கு உண்டாகும்.  எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.  வீட்டில் லட்சுமி கடாக்ஷம் உண்டாகும்.


தனுசு ராசி :


அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே மாசி மகத்தன்று நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபட வேண்டும்.  சிவலிங்கத்தை 11 முறை சுற்றிவர வேண்டும்.  11 முறை சுற்றி வந்த பின்பாக  சிவன் சன்னதியை பார்த்தவாறு அமர்ந்து  ஒன்பது நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட வேண்டும்.  இப்படி செய்யும் பட்சத்தில்  மாசி மகத்தன்று இறைவன் அருளால் உங்களுக்கு  கோடீஸ்வர யோகம் உண்டாகும்.  தடைபட்ட சுப காரியங்கள் நடந்திரும்.  பின்பு நடப்பவை அனைத்தும் நன்மையாகவே முடியும்.


மகர ராசி :


அன்பான மகர ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  மாசி மகத்தன்று சிவன் கோவிலுக்கு சென்று  நவகிரக வழிபாடு செய்ய வேண்டும்.  நவகிரகத்தை ஒன்பது முறை சுற்றிவர  உங்களுக்கு  ஏற்பட்ட நஷ்டங்கள் அனைத்தும் விலகி லாபம் உண்டாகும்.  வாழ்க்கையில் அடுத்த படி எடுத்து வைப்பதற்கான வழிகள் திறக்கும்.  திடீர் தன வரவு உண்டு.  செல்வ செழிப்போடு வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்.


கும்ப ராசி :


அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு மாசி மகத்தன்று  பார்வதியுடன் காட்சியளிக்க கூடிய சிவபெருமானை வணங்கினால்  வீட்டில் செல்வம் சேரும்.  வீட்டின் பூஜையறையில் சிவபெருமான் படத்திற்கு முன்பாக அமர்ந்து  பத்து நிமிடம் தியானத்தில் ஈடுபட வேண்டும்.  அப்படி செய்யும் பட்சத்தில் உங்களுக்கு செல்வம் பெருகும்.  வீட்டில் உள்ளவர்களின் தேக ஆரோக்கியம் கூடும்.  லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்.  வங்கிக் கணக்கில் சேமிப்பு  உயரும்.  இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் அகலும்.


மீன ராசி :


அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு மாசி மகத்தன்று  சிவன் கோவிலுக்கு சென்று  சிவபெருமானை தேங்காய்  மற்றும்  மலர்களால் அர்ச்சனை செய்து  பின்பு அங்கேயே சிவன் சன்னதி முன்பாக அமர்ந்து  ஏழு நிமிடத்திற்கு தியானத்தில் ஈடுபட வேண்டும்.  இப்படி மாசி மகத்தன்று சிவன் சன்னதிக்கு  முன்பாக  அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டால்  உங்களைப் பிடித்திருந்த  தரித்திரம் விலகும்.  லட்சுமி கடாக்ஷம்  வீட்டில் உண்டாகும்.  கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.  நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுப காரியங்கள் வீட்டில் நடக்கும்.  கோடீஸ்வர யோகம் உண்டாகும்.