அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே, அவர்களை மாதத்தில் மார்கழி மாதத்தில் உங்களுக்கு என்ன பலன் நடக்கப் போகிறது என்று பார்த்தால் இரண்டாம் அதிபதி  ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். குடும்பத்தாரின் ஆதரவு கிட்டும். உங்களுக்கு  நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்றால், ஏழுமலையானை தரிசிக்க வேண்டும்.  இக்கட்டான சூழ்நிலையில் சிலர் வேலை மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கலாம். அவர்களுக்கு நல்ல செய்தி வரும். இடம், நிலம் தொடர்பான சிக்கல்கள் இருந்தால், அது விலக வாய்ப்பு உண்டு.


பெருமை வந்து சேரும்:


காரணம் நான்காம் அதிபதிக்கு இரண்டாம் வீட்டில் ராசிக்கு இரண்டாம் அதிபதி அமர்ந்து நல்ல பல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கப் போகிறார். எதிரிகள் தொல்லை இருந்தால், அவை இருந்த இடம் தெரியாமல் போகும் அளவிற்கு அழிவார்கள். எதற்கெடுத்தாலும் உங்களைப் பற்றி குறை கூறுபவர்கள் கூட,  மார்கழி மாத  காலங்களில்  நல்ல அறிய பல கருத்துக்களை உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள்.


வழக்குகளில் சிக்கி இருக்கும் அன்பர்களுக்கு உங்களுடைய எதிரிகளிடமிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏன் எதற்கு என்று எப்பொழுதும் கேள்வி எழுப்பும். உங்களின் பார்வை  நேர்மையாக இருப்பதால்  பணத்தைப் பற்றி பெரிதாக கவலைப்பட மாட்டீர்கள். ஒரு காரியம் நடப்பது போல இருக்கும். ஆனால், கைக்கு வராது. இந்த சூழ்நிலையில் தெய்வ பக்தியோடு  காலத்தை நகர்த்துங்கள்.  கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்.

கடன் தொல்லை நீங்கும்:


புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது  உங்களின்  தேவை அறிந்து வாழ்க்கை துணை உங்களுக்கு உதவுவார்கள். பணத்தட்டுப்பாடு சிறிதளவு ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி வரும் சமயத்தில் பிறர் உங்களுக்கு உதவ முன் வருவார்கள். தெரிந்த நண்பர்கள் ஆயிற்றே எப்படி  பணம் பற்றி கேட்பது? என்று தயக்கம் வேண்டாம் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.


உற்றார் உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். அதிகமான கடன் இருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை? என்பது போன்ற கஷ்டங்களோடு காலத்தை நகர்த்துகிறீர்களா?  கவலை வேண்டாம். கடன் தொல்லை விரைவில் அடையும். அதற்கான வழி வகைகளை தற்போது நீங்கள் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். 

தள்ளிப்போட வேண்டாம்:


ஆன்மீகத்தில் மனம் செல்லும், குலதெய்வ வழிபாடு சேர்த்து இஷ்ட தெய்வ வழிபாடையும் மேற்கொள்ளுங்கள்.  கஷ்டம் வருகின்ற காலங்களில் சங்கரனை நினையுங்கள். புதிய காரியங்களை செய்ய ஏற்ற நேரம் தான் இந்த மார்கழி மாதம். கடகத்தை பொறுத்தவரை மூன்றில் கேது இருப்பதால்  செய்யும் காரியங்களை இன்றே செய்யுங்கள். அதையும் நன்றே செய்யுங்கள். நாளை பார்த்துக் கொள்ளலாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காரியங்களை தள்ளி போடுவதால் நல்ல வாய்ப்புகளை நழுவ விட ஏதுவாக அமைந்து விடும்.