மேஷம்
விடாப்பிடியாகச் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே.. இந்த மாதத்தில் சூரியன் 11ல் இருப்பதால் மனதில் நினைத்த பணிகளை செய்வதில் அலைச்சல்கள் ஏற்படும். 15ஆம் தேதி முதல் சூரியன் 12ல் இருப்பதால் இனம்புரியாத சிந்தனைகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக நிறைவு பெறும். வெளியூர் தொடர்பான பயணங்கள் செல்வதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.
செவ்வாய் 2ல் இருப்பதால் நிதானமான செயல்பட்டு உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். 14 ஆம் தேதி முதல் செவ்வாய் 3ல் இருப்பதால் தொழில்நுட்ப கருவிகள் தொடர்பான தேடல் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். புதன் 11ல் இருப்பதால் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். 09ஆம் தேதி முதல் புதன் 12ல் இருப்பதால் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் ஏற்படும்.
சுக்ரன் 12ல் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். 13ஆம் தேதி முதல் சுக்ரன் ராசியில் இருப்பதால் தனவரவை மேம்படுத்துவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். குரு 12ல் இருப்பதால் மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். சனி 10ல் இருப்பதால் சமூக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உலோகம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
ராகு ராசியில் இருப்பதால் எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். செய்யும் செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். கேது 7ல் இருப்பதால் தொழிலில் மந்தமான சூழல் உண்டாகும். போட்டி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும்.
வழிபாடு : ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர தொழில் சார்ந்த நன்மைகள் மேம்படும்.
ரிஷபம்
பக்குவம் நிறைந்த ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதத்தில் சூரியன் 10ல் இருப்பதால் உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். 15ஆம் தேதி முதல் சூரியன் 11ல் இருப்பதால் சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கால்நடைகள் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். உயர்கல்வியில் குழப்பமான சூழல் உண்டாகும். செவ்வாய் ராசியில் இருப்பதால் பங்கு வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கை துணைவரை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். 14ஆம் தேதி முதல் செவ்வாய் 2ல் இருப்பதால் இணையம் சார்ந்த வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும்.
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். புதன் 10ல் இருப்பதால் பொழுது போக்கு தொடர்பான செயல்பாடுகளால் விரயம் உண்டாகும். குடும்ப நபர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். 09ஆம் தேதி முதல் புதன் 11ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு விவாதம் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். நேர்மையான பேச்சுக்கள் நன்மதிப்பை மேம்படுத்தும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். சுக்ரன் 11ல் இருப்பதால் உத்தியோகம் சார்ந்த பணிகளில் அலைச்சலும் பொறுப்புகளும் அதிகரிக்கும்.
13ஆம் தேதி முதல் சுக்ரன் 12ல் இருப்பதால் வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எண்ணிய செயல்பாடுகள் சிறு காலதாமதத்திற்கு பின் நிறைவேறும். குரு 11ல் இருப்பதால் தனவரவு தாராளமாக இருக்கும். புதிய முதலீடுகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். சனி 9ல் இருப்பதால் வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் வாய்ப்புகள் சாதகமாக அமையும். ராகு 12ல் இருப்பதால் முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். விதண்டாவாத சிந்தனைகள் அதிகரிக்கும். கேது 6ல் இருப்பதால் எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். புதிய நபர்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.
வழிபாடு : மகாலட்சுமியை வழிபாடு செய்து வர மனதில் இருந்துவந்த கவலைகள் அகலும்.
மிதுனம்
புத்திசாலித்தனமாக செயல்படும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதத்தில் சூரியன் 9ல் இருப்பதால் தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுகமாக இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். 15ஆம் தேதி முதல் சூரியன் 10ல் இருப்பதால் வியாபார பணிகளில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். செவ்வாய் 12ல் இருப்பதால் உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மற்றவர்கள் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். 14ஆம் தேதி முதல் செவ்வாய் ராசியில் இருப்பதால் புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். புதன் 9ல் இருப்பதால் வாக்கு சாதுரியத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். விவசாய பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். 09ஆம் தேதி முதல் புதன் 10ல் இருப்பதால் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய மனை மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். தொழில் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சுக்ரன் 10ல் இருப்பதால் கலை சார்ந்த பணிகளில் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.
13ஆம் தேதி முதல் சுக்ரன் 11ல் இருப்பதால் உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். குரு 10ல் இருப்பதால் தவறிப்போன சில பொருட்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சனி 8ல் இருப்பதால் வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். ராகு 11ல் இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான விஷயங்கள் கைகூடும். மனதில் இருந்த சோர்வு படிப்படியாக குறையும். கேது 5ல் இருப்பதால் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
வழிபாடு : துர்க்கை அம்மனை வழிபாடு செய்து வர மேன்மையும், ஆதரவும் கிடைக்கும்.
கடகம்
தாயுள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே, இந்த மாதத்தில் சூரியன் 8ல் இருப்பதால் காப்பீடு சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். 15ஆம் தேதி முதல் சூரியன் 9ல் இருப்பதால் மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை குறைத்து கொள்ளவும். தந்தைவழி உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். செவ்வாய் 11ல் இருப்பதால் தயக்க உணர்வை குறைத்து கொள்வதன் மூலம் வெற்றி பெற முடியும்.
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். 14ஆம் தேதி முதல் செவ்வாய் 12ல் இருப்பதால் மனதில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனைகளில் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதன் 8ல் இருப்பதால் முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். 09ஆம் தேதி முதல் புதன் 9ல் இருப்பதால் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் சில மாற்றம் ஏற்படும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனத்துடன் இருக்கவும். சுக்ரன் 9ல் இருப்பதால் மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள்.
உறவினர்கள் வழியில் அலைச்சலுக்கு பின்பு ஒத்துழைப்பு கிடைக்கும். 13ஆம் தேதி முதல் சுக்ரன் 10ல் இருப்பதால் சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். வாசனை திரவியம் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். குரு 9ல் இருப்பதால் உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். நீதி துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சனி 7ல் இருப்பதால் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு மேம்படும். ராகு 10ல் இருப்பதால் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கேது 4ல் இருப்பதால் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
வழிபாடு : லட்சுமி நாராயணரை வழிபாடு செய்து வர தடைகள் விலகும்.
சிம்மம்
எதிலும் தன்னிச்சையாகச் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே, களத்திர ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் உங்களைப் பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்பு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த உபாதைகள் குறையும். புதன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாலின மக்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மாசி 09ஆம் தேதி முதல் புதன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
நண்பர்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும். மாசி 25ஆம் தேதி முதல் புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். அஷ்டம ஸ்தானத்தில் குரு இருப்பதால் குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் புதிய கலை சார்ந்த முயற்சிகள் மேம்படும். மனை தொடர்பான காரியங்களில் லாபம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.
சத்ரு ஸ்தானத்தில் சனி இருப்பதால் கடன் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வித்தியாசமான முயற்சிகளும், அணுகுமுறைகளும் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதர ஸ்தானத்தில் கேது இருப்பதால் சிறு தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மேலும், புதிய வாய்ப்புகளும் அமையும்.
வழிபாடு: ஆண்டாளை வழிபாடு செய்து வர முயற்சிகள் ஈடேறும்.
கன்னி
கனிவாக பழகும் குணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதத்தில் சூரியன் 6ல் இருப்பதால் நீண்ட நாட்களாக செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 15ஆம் தேதி முதல் சூரியன் 7ல் இருப்பதால் சுதந்திர போக்குடன் செயல்படுவீர்கள். சமூக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். செவ்வாய் 9ல் இருப்பதால் எந்தவொரு காரியத்தையும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் செய்து முடிப்பீர்கள்.
14ஆம் தேதி முதல் செவ்வாய் 10ல் இருப்பதால் புதிய ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய தொழில் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புதன் 6ல் இருப்பதால் மனதில் ஏற்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 09ஆம் தேதி முதல் புதன் 7ல் இருப்பதால் வாழ்க்கை துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் உள்ள நுணுக்கமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுக்ரன் 7ல் இருப்பதால் விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். 13ஆம் தேதி முதல் சுக்ரன் 8ல் இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். குரு 7ல் இருப்பதால் உடல் ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சனி 5ல் இருப்பதால் பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ராகு 8ல் இருப்பதால் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கேது 2ல் இருப்பதால் தனவரவை மேம்படுத்துவது சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புதிய கண்ணோட்டம் உண்டாகும்.
வழிபாடு : சிவபெருமானை வழிபாடு செய்து வர சிரமங்கள் குறையும்.