மதுரை ஆதினம் உடல்நலத்தில் முன்னேற்றம் உள்ளது, திருஞானசம்பந்தர் தென்மண்டல அறக்கட்டளை தம்புரான் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

 

கடந்த சில வருடங்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார், மதுரை ஆதீனத்தின்  292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர். அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் சற்று அமைதியானார். அதிமுக- பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றபின் அவரை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசிவிட்டு மதுரை திரும்பினார்.  ஓ.பி.எஸ் தியானத்துக்கு பின் அதிமுக-வுக்குள் ஏற்பட்ட பிளவை அடுத்து யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிக்காமல் பொறுமை காத்து வந்தார். தொடர்ந்து அரசியலில் பெரியளவு ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார்.



 

 

இந்நிலையில், கடந்த திங்கள் அன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை  தற்போது மோசமடைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆதீனம். அவரை கவனித்து வரும் மடத்துப் பணியாளர்களை தவிர்த்து வேறு யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.



இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மதுரை ஆதினத்தை இன்று  தருமபுர ஆதினம் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களை சந்தித்து கேட்டறிந்தார். இதனையடுத்து தருமபுர ஆதினம் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட விபூதியை மதுரை ஆதினத்தில் நெற்றியில் இட்டார்.



மேலும் மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !

 

இன்று தருமபுர ஆதினம் மௌன விரதம் என்பதால், தகவல் தெரிவிக்கும் விதமாக திருஞானசம்பந்தர் தென்மண்டல அறக்கட்டளையின் தம்புரான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது....," மதுரை ஆதினம் உடல்நலத்தில்  தற்போது முன்னேற்றம் உள்ளதால் நலமாக இருப்பதாகவும், விரைவில் பூரண குணமடைந்து மதுரை ஆதினத்திற்கு திரும்புவார் எனவும், தருமபுர ஆதினம் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் விபூதிகள் ஆதினத்திற்கு வழங்கினோம்" என தெரிவித்தார்.


 

 




மதுரை மீனாட்சியம்மன் கோவில் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - குறைந்தது உள்ளூர் பக்தர்களின் வருகை ; பொலிவு பெறுமா மீனாட்சியம்மன் கோவில் !