வார ராசிபலன் ( Feb 19 to Feb 25 ) :


மேஷ ராசி:


அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு அற்புதமான வாரம். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, நிலம் தொடர்பான காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று இருந்த நபரை சந்திப்பீர்கள்.  மன அமைதி உண்டு.  பன்னிரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் சற்று அலைச்சல் இருக்கும்.  மொத்தத்தில் இந்த வாரம் உங்களுக்கு ஏற்றமான வாரமே.


ரிஷப ராசி:


அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீட்டில் குரு இருப்பதால், நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.  இடம்,  வாகனம் தொடர்பான காரியங்களில்  நாட்டம் ஏற்படும்.  யாரேனும் உங்களை மரியாதை குறைவாக நடத்தினால்  அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்  கடந்து செல்வது நல்லது.  ஏப்ரல் 30 ஆம் தேதி வரை சற்று  ஏற்ற இறக்கங்களை நீங்கள் சந்திக்க வேண்டி வரலாம்.  கவலை வேண்டாம் எதிர்காலம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.


மிதுன ராசி:


அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால்  வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சற்று  படபடப்புடன் காணப்படலாம். இருப்பினும் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டு.  வேலை சம்பந்தமாக சற்று அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.  வயிறு சம்பந்தமான  உபாதைகளில்  இருந்து உங்களை காத்துக் கொள்வது நல்லது.  எதிர்பாராத தன வரவு உண்டு.  வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.  புதிய தொழில் தொடங்க  ஏதுவான காலகட்டம்.  இந்த வாரம் சிறப்பான  வாரம்.


கடக ராசி:


அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுக்கு 20 மற்றும் 21ஆம் தேதிகளில்  ராசிக்குள் சந்திரன் செல்வதால்  பேசும்போது சற்று நிதானமாக பேசுங்கள்.  எந்த ஒரு காரியத்தையும் பக்குவமாக அணுகுங்கள்.  முடிந்தவரை இந்த தினங்களில் நீங்கள் கோயில் சென்று வருவது நல்லது.  பண தேவைகள் பூர்த்தியாகும்.  விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.  நகை ஆபரணங்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.  தொழிலில் சில இறக்கமான கஷ்டங்களை சந்தித்தாலும் எதிர்காலம் சிறப்பாக உண்டு.


 சிம்ம ராசி:


அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  வாரத்தின்  இறுதி மூன்று நாட்களில் சந்திரன்  ராசியிலேயே பிரவேசிப்பதால்  எந்த ஒரு முடிவையும் அடுத்த வாரம் எடுப்பது நல்லது.  முக்கியமான நபர்களை சந்திக்கும் போது சற்று  நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.  சிறிய விஷயத்தை பெரிதாக்க வேண்டாம்.  உங்களைத் தேடி மக்கள் வருவார்கள்.  எதிரிகள் அடங்குவார்கள்.  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.  நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். இந்த வாரம் சற்று ஏற்றமான வாரம்.


 கன்னி ராசி:


அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  இந்த வாரம் மிகுந்த  நன்மை பயக்கக் கூடியதாய் இருக்கும்.  ராசிக்கு ஐந்தாம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெறுகிறார்.  புத்தி கூர்மை அதிகரிக்கும்.  உங்கள் சொல்லுக்கு வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ மரியாதை உண்டு.  சில நேரங்களில்  மனம் படபடப்பாக இருக்கும் போது  உங்களுக்கு பிடித்த தெய்வத்தை மனதில் வையுங்கள்.  கஷ்டங்கள் விலகி சந்தோஷங்கள் பெருகும்.


துலாம் ராசி:


அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  பன்னிரெண்டாம் வீட்டில் கேது இருப்பதால்  நிம்மதியான உறக்கம் உண்டு.  திருமணத்திற்காக காத்திருக்கும் துலாம் ராசி வாசகர்களுக்கு நல்ல திருமண பேச்சு வார்த்தைகள் கைக்கூடும்.  வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.  எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.  மொத்தத்தில் இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான வரமே.


 விருச்சக ராசி:


அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே  வாரத்தின் முதல் இரண்டு நாட்களிலேயே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்.  எந்த முக்கியமான காரியத்தையும் சற்று தள்ளிப் போடுவது நல்லது. வீண் வம்பு வழக்குகளில்  சிக்க வேண்டாம்.  உங்களைக் குறித்து யார் என்ன பேசினாலும் சற்று பொறுமை காப்பது நல்லது.  நிதானமாக இருக்க வேண்டிய வாரம் இது.


 தனுசு ராசி:


 அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே  வாரத்தின் மத்திய பகுதியில் உங்களுக்கு சந்திராஷ்டமம் செல்வதால்.  யார் என்ன உங்களைப் பற்றி கூறினாலும் பொறுமை காப்பது நல்லது  சிறிய பிரச்சனை கூட பெரிய பிரச்சினையாக தோன்றலாம்.  இந்த காலகட்டத்தில் ஆன்மீகத்தில் மனம் சென்றால் மனம் கட்டுக்குள் வரும்.  சுய தொழில் செய்பவர்கள்  இந்த வாரத்தில் ஏதேனும் முதலீடு செய்ய இருந்தால் அதை அடுத்த வாரத்திற்கு தள்ளி போடுங்கள்.  கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது.


மகர ராசி:


அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு வார இறுதி நாட்களில்  சந்திராஷ்டமம் இருப்பதால்  சற்று கவனமாக இருப்பது நல்லது.  வாரத்தின் முதல் நான்கு நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சியாகவும்.  வாரத்தில் இறுதி இரண்டு நாட்கள் சற்று  ஏற்றம் இறக்கமாகவும் காணப்படும்.  உங்களுடைய  ராசியில் செவ்வாய் உச்ச பலத்துடன் இருப்பதால் எதையும் சாதிக்கக்கூடிய மனப்பக்குவம் ஏற்படும்.  வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான யோசனைகள் தோன்றும்.  மொத்தத்தில் இந்த வாரம் ஏற்றம் இறக்கமான வாரமாகவே அமையும்.


கும்ப ராசி:


 அன்பான கும்ப ராசி வாசகர்களே உங்களுக்கு இது  அற்புதமான வாரம்.  ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது என்று  நினைத்திருக்கும் உங்களுக்கு  நல்ல செய்தி இல்லம் தேடி வரும்.  தொழில் ரீதியான வெற்றிகள் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பிறகு கிடைக்கும்.  மொத்தத்தில் கும்ப ராசிக்கு இந்த வாரம் சிறப்பான  வாரம்.


 மீன ராசி:


அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  இரண்டாம் அதிபதி  பதினொன்றாம் வீட்டில்  இருப்பதால்.  எதிர்காலம் குறித்த கவலை இருக்கும்.  வாரம் முழுவதும் செவ்வாய் உச்ச பலத்துடன் பதினொன்றாம் வீட்டில் இருப்பதால்  நினைத்த காரியங்கள் நடைபெறும்.  பெரிய மனிதர்களின்  தொடர்புகள் கிடைக்கும்.  உங்களை விட்டு விலகி சென்றவர்கள்  விரும்பி வந்து பேசுவார்கள். நிலம் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும்.  மொத்தத்தில் இந்த வாரம் சிறப்பான வாரம்.