லிங்கத்தூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா.


ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு உலகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இன்று அன்னாபிஷேக விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் ,லிங்கத்தூர் பகுதியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் சுவாமிக்கு ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாற்று, பால் , தயிர் , பஞ்சாமிர்தம், தேன், நெய், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் , அரிசிமாவு,  அபிஷேக்க பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கைலாசநாதரை பச்சை அரிசியால் சிவலிங்கம் முழுவதும் சாற்றப்பட்டு, அன்னாபிஷேக சிறப்பு ஆலாத்தியுடன், மகா தீபாராதனையும் நடைபெற்றது. 




அதைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்காக கைலாசநாதர் அன்னாபிஷேக கோலத்தில் காட்சி அளித்தார்.அதைத் தொடர்ந்து ஸ்ரீ காமாட்சியம்மன் உடனுறை ஸ்ரீ கைலாசநாதருக்கு மீண்டும் அன்னாபிஷேக அலங்காரத்தை கலைத்துவிட்டு சுவாமிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,  நெய், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்  உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.




பின்னர் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி ஆலயத்தில் சிவாச்சாரியார் உதடுகளால் நாமாவளிகள் கூறிய பிறகு கைலாசநாதர் தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு நெய்வேத்தியம் இட்டு பஞ்சகற்பம் மகா தீபாராதனை நடைபெற்று ஐப்பசி மாத பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத பவுர்ணமிபூஜை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். 


நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பல்வேறு சிவாலயங்களில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆண்டான்கோவில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோடங்கிபட்டி அருகே உள்ள வீரபாண்டி ஈஸ்வரர் நெரூர் சதாசிவ பிரம்மேந்திர ஆலயம் 5 ரோடு பகுதியில் உள்ள கோடீஸ்வரன் ஆலயம் உழவர் சந்தை அருகே உள்ள வைத்தீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமியை தரிசிக்க அனுமதி வழங்கினர்.