கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதியில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் சென்னையை சேர்ந்த கண்ணன் ஆடிட்டர் என்பவர் தனது குடும்பத்துடன் தனது குலதெய்வமான கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு சுமார் 5 லட்சம் மதிப்பிலான முத்தங்கி ஆடை ஆபரணங்களுடன் இன்று தனது நேர்த்தி கடனையைச் செய்தார். 




தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயம் பண்டைய காலத்தில் பாறையில் செதுக்கும்போது தானே உருவான பெருமாள் தொன்மையான பெயருமுண்டு. அப்பொழுது இருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்திற்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பல்வேறு பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கை நேர்த்திக் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். இன்னிலையில் சென்னையை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது 4 சகோதரர் மற்றும் ஒரு சகோதரி உடன் குடும்பம் பிரார்த்தனைக்காக கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய உற்சவர் சிலைக்கு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக முத்தங்கி ஆடை வழங்கினார். பின்னர் அவர் மூலவரான கல்யாண வெங்கட்ரமண சுவாமி முத்தங்கி ஆடை அணிவிக்க விருப்பம் இருந்த நிலையில் அதனை இன்று ஆலயத்தில் உள்ள பட்டாச்சாரியார் முன்னிலையில் அதனை ஒப்படைத்தார். சுமார் 5 லட்சம் மதிப்பிலான முத்தங்கி ஆடையை தனது குடும்பத்துடன் தனது குலதெய்வமான கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு வழங்கியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என கண்ணன் தெரிவித்தார்.




கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் இன்று நடைபெற்ற முத்தங்கி ஆடை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு முன்பாக மூலவர் கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு பால், தயிர், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து வண்ண மாலைகள் அணிவித்து அதன்பிறகு முத்தங்கி ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டு ஆலயத்தின் பட்டாச்சாரியார் துளசியால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மகா தீபாராதனை நடைபெற்றது.




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


ஆலயத்தில் பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக முத்தங்கி ஆடை அணிவித்து நிகழ்வைக் காண அப்பகுதி ஆன்மீகப் பெருமக்கள் ஆலய வருகைதந்து கோவிந்தா, கோவிந்தா என்ற கோசத்துடன் சுவாமியை மனமுருகி வழிபட்டனர்.