கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கரூரில் கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையை அருளிய ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவதரித்த தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.




தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி என்றாலே நம் நினைவுக்கு வருவது, குட்டி கிருஷ்ணனும், குட்டி ராதையும் தான். அதோடு, குழந்தைகளுக்கு குட்டி கிருஷ்ணரை போல வேடமிடுவது, அவரை வீட்டுக்கு அழைப்பது போல, பாத சுவடுகள் போடுவது போன்ற நிகழ்வுகள் தான். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்திக்கான கிருஷ்ணரின் சிலைகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கரூர் சுங்ககேட் அருகே வடமாநிலத்தில் இருந்து வந்த ஒரு குடும்பத்தினர், அங்கேயே தங்கி சாக்பீஸ் மாவு மூலம் கிருஷ்ணர் வடிவ சிலைகளை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




இது குறித்து, அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், தலைமுறை தலைமுறையாக நவராத்திரி கொலு பொம்மை, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஐயப்பன் என பல்வேறு வழிபாட்டிற்கான கடவுள் சிலைகள் தயார் செய்து வருகிறோம். கிருஷ்ண ஜெயந்தி யொட்டி தற்போது, அரை அடி உயரத்தில் இருந்து 3 அடி உயரம் வரை பல்வேறு வகையான கிருஷ்ணர் சிலைகள் செய்து வருகிறோம். தற்போது ஆலம் இலை கிருஷ்ணன், பேபி கிருஷ்ணர், பேபி ஆண்டாள், யசோதை கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு வகையான கிருஷ்ணர் சிலைகளை வடிவமைத்துள்ளோம். சிலைகளின் விலை ரூ.50 முதல் தொடங்கி ரூ.500 வரை உயரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்ததும் விநாயகர் சதுர்த்திக்கு சிலை செய்யும் பணியை தீவிரப் படுத்துவோம் என்றனர்.





 


கரூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருவதால், கரூர் சுங்ககேட் அருகே வடமாநிலத்தில் இருந்து வந்த ஒரு குடும்பத்தினர், அங்கேயே தங்கி சாக்பீஸ் மாவு மூலம் கிருஷ்ணர் வடிவ சிலைகளை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் அங்கு சாலை ஓரங்களில் செல்பவர்கள் அந்த கொழு பொம்மைகளை கண்டு களித்து செல்கின்றன. மேலும் சிலர் நவராத்திரி கொலு பொம்மைகள், கிருஷ்ணர் ராதை பொம்மைகள் ஆகியவற்றை விரும்பி வாங்கி செல்கின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண