திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது.  திருவண்ணாமலையின் 2,688 அடி மலை உச்சியில் பிரமாண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்போது, அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற விண்ணை முட்டும் முழக்கத்துடன் பக்தர்கள்  கோஷம் எழுப்பினார்கள். 130 கிலோ எடையுள்ள தீப கொப்பரையில் 3,500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டுள்ளது.


 



கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டவுடன் மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவார்கள். எவ்வளவு மழை பெய்தாலும் தொடர்ந்து 11 நாட்கள் எரியும் வகையில் மகா தீபம்  ஏற்றப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவை முன்னிட்டு உள்ளூரில் 5000 மற்றும் வெளியூர் பக்தர்கள் 15000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


 






திருவண்ணாமலையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 350 லிட்டர் நெய், 150 மீட்டர் துணியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக திருப்பரங்குன்றம் தீப திருவிழா பிரசித்திபெறது என்பதால் பக்தர்கள் வழிபாடு செய்தார்கள். மேலும். பெரம்பலூர் அருகே எளம்பலுரில் உள்ள பிரம்மரிஷி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதேபோல், பழனி முருகன் கோயில் மலையிலும், திருத்தணி கோயில் பச்சரிசி மலையிலும்,  திருச்சி மலைக்கோட்டை, ராஜபாளையம் சஞ்சீவி மலை கோயில்களிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது.


 






 


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண