இந்தியாவில் ஔவையாருக்கு என தனி கோவிலை கொண்ட ஔவையார் அம்மன் கோவிலில் ஆடி முதல் செவ்வாய்கிழமை நாளில் பெண்கள் வித விதமான கொழுகட்டைகள் தயாரித்து தாங்களே அம்மனுக்கு படைக்கும் வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

திருமண தடை தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு பிரசித்துபெற்ற இந்தியாவில் ஔவையார் அம்மனுக்கு என தனி கோவிலை கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் உள்ள ஔவையார் அம்மன் கோவிலில் பெண்கள் வித விதமான கொழுகட்டைகள் தயாரித்து தாங்களே அம்மனுக்கு படைக்கும் வழிபாட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் பெண் பக்தர்கள் திரளாக வருகை தந்தனர். 

 



 

ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பிடித்த பதார்த்தங்களை படைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். அதன்படி ஆடி முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தமிழகம் மற்றும் கேரளா மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற இந்தியாவில் ஔவையாருக்கு என தனி கோவிலை கொண்ட ஔவையார் அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் உள்ளது.

 



 

இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி செவ்வாய் கிழமைகளில் மட்டுமே பெண் பக்தர்கள் வருகை தந்து திருமண தடை தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், தாங்களே வெண் கொளுகட்டைகள், சர்க்கரை கொளுகட்டைகள் தயார் செய்து பூசாரிகள் இல்லாமலே தாங்களே அம்மனுக்கு படைக்கும் வழிபாட்டு விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்தவகையில் இந்த ஆண்டின் முதல் ஆடி செய்வாய் கிழமையை முன்னிட்டு நேற்று குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண் பக்தர்கள் வருகை தந்து வித விதமான கொளுகட்டைகள் படைத்து அம்மனுக்கு வழிபாடு செய்தனர். இதன் மூலம் வேண்டுதல்கள் நிறைவேறி வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர். பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து செண்பகராமன் புதூருக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.