மேஷம் :




மேஷ ராசிக்காரர்களே இந்த மாதம் உங்களுக்கு 10ம் வீட்டில் வக்கிரம் அடைந்த சனியும், 12ம் வீட்டில் வக்கிரம் அடைந்த குருவும் உள்ளனர். வேலை, தொழில் சார்ந்த விஷயங்களில் கவுரவப்படுவீர்கள். நீண்டநாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிக்கக்கூடிய அம்சம் உண்டாகும். சுபகாரியங்கள் மீண்டும் நடக்கக்கூடிய அம்சம் உண்டாகும். திருமணத்தடைகள் நீங்கும். கடனுதவி, பண உதவி கிட்டும். ஏராளமான நல்ல விஷயங்கள் நடக்கும். இந்த மாதம் அமோகமாக உள்ளது. மனதார சந்தோஷமாக இருப்பீர்கள். மனைவிகள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு தாமதமானாலும் காரியம் அருமையாக நடக்கும். முக்கியஸ்தர்கள் சந்திப்பு கிட்டும். மனதிற்கு பிடித்த நபர்களின் சந்திப்பு அமையும். குலதெய்வ வழிபாடு அவசியம். அபார வளர்ச்சி பெறுவீர்கள்.


ரிஷபம் :


ரிஷப ராசிக்காரர்களே 9ம் இடத்தில் வக்கிரம் பெற்ற சனி, 11ம் இடத்தில் வக்கிரம் பெற்ற குரு உள்ளனர். விட்டுச்சென்ற நட்பு மீண்டும் அமையும். பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும். பதவி உயர்வு இந்த மாதம் அமையும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பெற்றோர்களின் அக்கறையில் கூடுதல் கவனம் தேவை. யோகமான காலம் ஆகும். பண உதவி தானாகவே அமையும். கால்முட்டி பிரச்சினை ஏற்படும். நண்பர்கள் போன்று ஏமாற்ற சிலர் வருவார்கள். கவனம் தேவை. இரண்டாம் திருமண யோகம் அமையும். புகழ்பெற்ற கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிட்டும். மகிஷாசூரவர்த்தினி அம்மன் வழிபாடு அவசியம்.


மிதுனம் :


மிதுன ராசிக்காரர்களே அஷ்டமத்தில் சனியும், குரு 11ம் இடத்தில் சஞ்சரிக்கின்றன. நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக அமையும். கணவன் மனைவி பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். மருத்துவ சார்ந்த செலவுகள் கண்டிப்பாக ஏற்படும். வீட்டில் பிறக்கும் குழந்தைகள் உங்கள் முன்னோர்களே மீண்டும் பிறப்பார்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் உதவி செய்வார்கள். மாணவி, மாணவர்களுக்கு யோகமான நாள் ஆகும். வியாபாரிகளுக்கு அதிக கவனம் தேவை. திடீர் உதவிகள் கிட்டும். தடை இருந்தாலும் வெற்றி கிட்டும். வாழ்வில் மாற்றம் உண்டாகும் நாள் இந்த மாதம் உண்டு. பெரிய மகிழ்ச்சிகரமான சம்பவம் இந்த மாதம் உண்டாகும். உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் வழிபாடு பெரியளவில் வெற்றி தரும்.  


கடகம் :




முன்ஜென்மத்தில் தொடர்ந்து இருக்கக்கூடிய பந்தம் உங்கள் மனைவியின் பந்தம். உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் முன்ஜென்மத்தில் தொடர்பு இருந்திருக்கும். கண்டிப்பாக பித்ரு சாந்தி செய்வீர்கள். இடுப்பு, புட்டம், ஆசன வாயில்களில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். நீண்டதூர பயணம் செல்லும் யோகம் உண்டாகும். பணவரவு உண்டாகும். ராவணனைப் போல புஜபல பராக்கிரமசாலியாக உள்ளனர். நல்லவர்கள் ஆதரவு கிட்டும். எல்லாவிதத்திலும் வெற்றி கிட்டும். இந்த மாதத்தின் பிற்பகுதி அருமையாக இருக்கும். அபார வளர்ச்சி உண்டு. மனைவி மூலம் நல்ல தகவல் கிட்டும். புதிய வாய்ப்புகள் கிட்டும். தொழில் விருத்தி உண்டு. ஸ்ரீகுரு ராகவேந்திர சுவாமியை வழிபட வேண்டும்.


சிம்மம் :


சிம்ம ராசிக்காரர்களே 6ம் இடத்தில், 8ம் இடத்தில் கிரகங்களின் வலிமை போராடி வெற்றி பெறவைக்கும். உங்கள் எதிரிகள் உங்களை கண்டு பயப்படுவார்கள். வேலை, தொழில் அந்தஸ்து அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். அதிகளவில் அக்னிபத் திட்டத்தின் கீழ் சிம்ம ராசிக்காரர்கள்தான் பணிக்கு சேர உள்ளனர். நீட் தேர்வில் மிகப்பெரிய வெற்றி பெறுவீர்கள். கடனுதவி அம்சம் உண்டாகும். அரசுப்பணி, அரசு உதவி கிட்டும். எதிர்பாராத அசம்பாவிதம் நடக்கவும் வாய்ப்பு உண்டு. கவனம் தேவை. பொறுப்புகளில் இருந்தாலும் சிக்கல் உண்டாகும். 17-ந் தேதி வரை பெண்களுக்கு கவனம் தேவை. வீட்டில் தேவையற்ற பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. போராட்டத்திற்கு பிறகே வெற்றி கிட்டும். பழைய பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். சிவபெருமான் வழிபாடு மிகப்பெரிய வெற்றி தரும்.


கன்னி :




கன்னி ராசிக்காரர்களே முன்ஜென்ம கர்மா நல்லதாகவோ, கெட்டதாகவோ மாறி வரும். 5,7ம் எண்ணில் உள்ள கிரகங்கள் வீரியமாக வேலை செய்யும். ஹார்மோன் பிரச்சினைகள் சரியாகும். இடுப்பு. புட்டம், அடிவயிறு உள்ளிட்ட பகுதிகளின் பிரச்சினை சரியாகும். இந்த மாதம் கண்டிப்பாக உங்கள் வீட்டில் யாரேனும் ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடக்கும் சூழல் உண்டாகலாம். சுவாசக்கோளாறு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. பெரிய இடங்களில் வேலை கிடைக்கும். ஆனால், விபரீத பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு கூடுதல் கவனம் தேவை. நரசிம்ம சுவாமி ஆலயத்திற்கு சென்று நெய்தீப ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். தடைகள் நீங்கினாலும் கவனம் தேவை. வெற்றிகளை குவிக்க வேண்டிய மாதமாக இருந்தாலும் கவனம் தேவை.


துலாம் :


துலாம் ராசிக்காரர்களே விபரீத ராஜயோகம் உண்டாகும். மனைவிக்கு அரசு வேலை உண்டாகும். கணவருக்கு மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை கிட்டும். வெளிநாடு தொடர்பான தொழில் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். வீடு, வாசல் நன்றாக அமையும் தொழில் பிரச்சினை சரியாகும். பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மனோதிடம் அதிகரிக்கும். அடுத்த ஒரு மாதத்திற்கு ஏகப்பட்ட பலன்கள் உண்டாகும். 4, 6ம் இடங்களில் சனி வக்கிரம் அடைந்துள்ளதால் பழைய கடன் வசூலாகும். தாய் உடல்நிலையில் கவனம் தேவை. கட்டுமான செயல் வெற்றி பெறும். புதிய பொருட்கள் யோகம் உண்டாகும். தாமதம் ஏற்பட்டு வெற்றி கிடைக்கும். வெற்றியை காணும் அவசியம் உண்டாகும். நம்ப முடியாத எதிரி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நன்மை உண்டாகும். யோக நரசிம்மர் வழிபாடு பெரியளவில் வெற்றியைத் தரும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசிக்காரர்களே 3ம் பாகத்தில் வக்கிரமடைந்த சனி, 5ம் பாகத்தில் வக்கிரம் அடைந்த குருவால் பதவி, பணம், உயர்வு தற்போது கிட்டும். மூக்கு, தொண்டை, வாய் பிரச்சினைகள் ஏற்படும். அண்ணன் – தம்பி பிரச்சினைகள் மீண்டும் தோன்றி மறையும். எதிரிகள் யாராக இருந்தாலும் ஜெயிக்க்கூடிய அம்சம் உணடு. பெரிய ஆளாக இருந்தாலும் மாறிடுவீர்கள். நினைக்க முடியாத  அளவிற்கு உத்தியோகம் உண்டு. ஹோட்டல் கட்டும் யோகம் உண்டு. மனோதிடம் நன்றாக இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் கவனம் தேவை, குழப்பம் ஏற்படும்போது விலங்குகளுக்கு உணவு வாங்கித்தாருங்கள். இதனால் பயங்கர நன்மைகள் உண்டாகும். பழைய பகைகள் நிவர்த்தி ஆகும். எழுத்துப்பூர்வ விஷயங்களில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். காமதேனு வழிபாடு பெரியளவில் கைகொடுக்கும்.


தனுசு :


தனுசு ராசிக்காரர்களே பழைய பாக்கிகள் வசூலாகும். பழைய பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். பழைய திட்டங்கள் தற்போது செயல்படுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவி கிடைக்கும். நாட்டிலே உயர்ந்த பதவி தனுசு ராசிக்காரருக்குதான் கிடைக்கும். எதிர்பாராத டுவிஸ்ட் கிடைக்கும். திருமண பந்தகள் பிரச்சினை நிவர்த்தி ஆகும். மதம், மொழி, இனத்தை கடந்து நபர்களின் உதவியால் காதல் திருமணம் கிட்டும். கலையுலகத்தினருக்கு அருமையான மாதம். தனுசுக்கு எல்லா திசையிலும் அமோகமான மாதம். திருமண யோகம் உண்டாகும். பணவரவு உண்டாகும். வாமன ரூபத்திலான நாராயண வழிபாடு பெரிய வெற்றியைத் தரும்.


மகரம் :




மகர ராசிக்காரர்களே லக்னத்தில் சனி வக்கிரம் அடையும். முயற்சி ஸ்தானத்தில் குரு வக்கிரம் அடையும். புதிய முயற்சிகளை தயவுசெய்து கைவிட வேண்டும். பழைய முயற்சிகள் கைகொடுக்கும். ஆவணங்கள் முயற்சி கைகொடுக்கும். பயணங்கள் தடைவிலகும். சகோதர வழி பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். பழைய முயற்சிகள் அனைத்துமே வெற்றி பெறும். உடல்நல பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். கார், வீடு யோகம் உண்டாகும். எதிர்பாராத பல நலன்கள் அமைப்பு கிடைக்கும். ஏராளமான வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு யோகம் உண்டு. திட்டமிடல் வெற்றியைத் தரும். ஆஞ்சநேய வழிபாடு மிகப்பெரிய அளவில் வெற்றி தரும்.


கும்பம் :


கும்ப ராசிக்காரர்களே சனி வக்கிரம் ஆயிற்றது. குரு வக்கிரம் அடைந்து கொண்டிருக்கிறது. முயற்சிகள் எல்லாம் அருமையான வெற்றியை தரும். சூப்பர் பாஸ்டாக முடியும். ஆடிட்டிங், எழுத்துப்பூர்வமான, மீடியா தொடர்பான துறையினருக்கு இந்த மாதம் யோகமான மாதம் ஆகும். கடன் தொகை வசூல் ஆகும். பணப்புழக்கம், பணத்தேவைகள் உடனடியாக நிவர்த்தி ஆகும். பணவரவு கண்டிப்பாக கிடைக்கும்.  தொழில், வியாபாராத்தில் வெற்றி கிட்டும். எதிர்பார்க்காத வெற்றி கிடைக்கும். பேச்சுவார்த்தைகள் தற்போது வெற்றியில் முடியும். இரண்டாம் கை வீடுகள், இரண்டாம் வாகன யோகங்கள் பெரியளவில் கிடைக்கும். பேரும், புகழும் அதிகரிப்பது போலவே கெட்ட பெயர் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. சதயம் நட்சத்திரத்தினருக்கு கூடுதல் கவனம் தேவை. தொலைத்தொடர்பில் கவனம் தேவை. வெற்றிகள் குவியும் மாதம். ஸ்ரீரங்க ரங்கநாதர் வழிபாடு பெரியளவில் வெற்றியைத் தரும்.


மீனம் :


மீன ராசிக்காரர்களே இந்த மாதம் விட்டுப்போன பதவிகள், விட்டுப்போன வேலைவாய்ப்புகள் கிட்டும். லாபம் இந்த மாதத்தில் கிட்டும். எதிரி சரண் அடைவார்கள். நண்பர்கள், உறவினர்கள் மூலமாக வெற்றி கிட்டும். கண்டிப்பாக நடக்கும். குருவின் அம்சத்தால் உடல் உபாதை சரியாகும். சுபகாரியத் தடை நீங்கும். லாபம் முன்னேற்றம் அடைவீர்கள். திடீர் பண உதவிகள் கிடைக்கும். மனோதிடம் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. மூக்கு, தொண்டை, வாய் பிரச்சினை ஏற்படும். பணவரவு உண்டாகும். பெரிய பிரச்சினைகள் நிவர்த்தி ஆகும். வழிபாடு லட்சுமி ஹயக்ரீவர் பெரியளவில் வெற்றியைத் தரும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண