மேஷ ராசி: 


2024 வருட பிறப்பிலேயே  உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது.  உங்களுடைய ராசிக்கு 11ஆம் வீட்டில் சனிபகவான் அமர்ந்து  உங்கள் எண்ணங்களை நிறைவேற்றித் தரப் போகிறார்.  ஜனவரி மாதத்தில்  தேக ஆரோக்கியம் பொலிவு கூடும்.  நினைத்த காரியம் கைகூடி வரும்.  திருமண காரியங்கள் கைகூடும். ஆதாயம் உண்டு.  வீடு, வண்டி, வாகனத்தில் நன்மை உண்டு.  அனைத்தும் சுபமாக முடியும் வாழ்த்துக்கள் வணக்கம். 


 ரிஷப ராசி:


அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே,  உங்களுடைய ராசிக்கு பத்தாம் பாவத்தில்  சனி பகவான் அமர்ந்து தொழில் முன்னேற்றம் தொழிலில் மேன்மை அடைய  செய்யப் போகிறார்.  உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து  நீண்ட தூர பிரயாணம் சுப காரியங்களில் செலவு போன்ற நன்மையான பலன்களை வாரி வழங்குவார்.  திடீர் பயணங்களால்  திக்கு முக்காட போகிறீர்கள்.  பண விரயங்களை பொருத்தவரை  பார்த்து கையாள்வது நல்லது.  இந்த மாதம்  உங்களுக்கு ஒரு அற்புதமான மாதமாக விளங்க போகிறது வாழ்த்துக்கள் வணக்கம். 


மிதுன ராசி :


எனக்கு அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் கேது பகவான் பத்தாம் வீட்டில் ராகுவும் அமர்ந்து  ஜனவரி மாதத்தில் தொழில் முன்னேற்றம் தொழிலில் மேன்மை,  புதிய தொழில் தொடங்குதல்  அல்லது ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கின்ற வேலையை விட்டு வேறு வேலைக்கு செல்லுதல் போன்ற  கலவையான பலன்களை உங்களுக்கு நடக்கப் போகிறது.  வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணத்தோடு இருக்கும் உங்களுக்கு, ஜனவரி மாதம் ஒரு பொற்காலமாகவே அமையும்.


கிரகங்கள் உங்களுக்கு சாதகமான வீடுகளில் பயணிக்கின்றன. குறிப்பாக குரு பகவான் உங்களுடைய வீட்டிற்கு லாப ஸ்தானத்தில் பயணிப்பதால் எதிலும் நன்மையே செய்யப் போகிறார்.  சனிபகவான் உங்களுடைய ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து உங்களுக்கு வர வேண்டிய அத்தனை நல்ல காரியங்களையும் தடைபடாமல் கையில் கொண்டு வந்து சேர்க்கப் போகிறார்.  அனைத்தும் சுபமாக முடியும் வாழ்த்துக்கள் வணக்கம். 


 கடக ராசி :


அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு பத்தாம் பாவத்தில் குரு பகவான் அமர்ந்து  தொழில் மாற்றம் தொழில் மேன்மை அனைத்தையும் செய்து கொடுக்கப் போகிறார்.  எட்டாம் பாவத்தில் அமர்ந்திருக்கும் சனி சிறு, சிறு மன கஷ்டங்களை கொடுத்தாலும் அவ்வளவாக உங்களை பெரிதும் ஒன்றும் பாதிப்பாக செய்யப் போவதில்லை. மூன்றாம் பாவத்தில் அமர்ந்திருக்கும் கேது நிச்சயமாக உங்களுக்கு தொட்டது அனைத்தும் வெற்றியாக முடியும்படி செய்து கொடுப்பார்.  வீடு, மனை  உங்களுக்கு சாதகமாக அமையும்.  நினைத்த காரியம் வெற்றி அடையும் வாழ்த்துக்கள் வணக்கம் .


 சிம்ம ராசி :


அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில் கேது  எட்டாம் இடத்தில் ராகு பகவான்  அமர்ந்து திடீர் அதிர்ஷ்டங்களை கொண்டு வந்து சேர்க்கப் போகிறார்.  உங்களுடைய ராசிக்கு 9 ஆம் பாவமான பாக்கியஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் எதிலும் மேன்மை முன்னேற்றம் போன்ற நல்ல பலன்களை நடைபெற போகிறது.  சிம்ம ராசிக்கு ஜனவரி மாதம் ஏற்றமான காலகட்டமாக இருக்கும்.  வீட்டில் சுப காரிய நிகழ்வுகள் நடைபெறப் போகிறது.  தூரதேச பிரயாணம், ஆன்மீக காரியங்களில் மனம் செல்லுதல்,  தந்தையார் தாயார் வழி சொத்துக்கள் கைக்கு வருதல் போன்ற நல்ல பலன்களை உங்களுக்கு நடைபெறப்போகிறது. வாழ்த்துக்கள் வணக்கம். 


 கன்னி ராசி :


அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே,  உங்களுடைய ராசி கிளையே கேது பகவான் அமர்ந்து  உலக ஞானத்தை உங்களுக்கு கற்றுக் கொடுக்கப் போகிறார்.  எட்டாம் பாவத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் உங்களுடைய தனஸ்தானத்தை பார்ப்பதால் நிச்சயமாக உங்களுக்கு பண வரவு தாராளமாக அமையும்.  யாரிடமும் தேவையில்லாமல் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மே மாதம் மூன்றாம் தேதிக்கு பிறகு அனைத்து சுப காரியங்களையும் வைத்துக் கொள்வது நல்லது.  ஜனவரி மாதத்தில் ஆறாம் பாவத்தில் அமர்ந்திருக்கக்கூடிய சனிபகவான் தொழிற் மேன்மை தொழில் முன்னேற்றம் போன்ற நல்ல காரியங்களை செய்து கொடுக்கப் போகிறார்.  இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக அமையும் வாழ்த்துக்கள் வணக்கம். 


 துலாம் ராசி :


அன்பான துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஆறாம் பாவத்தில் ராகு பகவான் அமர்ந்து மலை அளவு கடன் இருக்கிறது. இது எப்படி அடைக்கப் போகிறேன் என்று எண்ணத்தை கொடுத்து இருக்கலாம்.  அந்த பயம் உங்களுக்கு தேவையில்லை. உங்களுடைய ராசிக்கு ஏழாம் பாவத்தில் ஜனவரி மாதத்தில் அமர போகும் குரு பகவான் உங்களுக்கு தேக ஆரோக்கியம்,  குறைவில்லாத வாழ்க்கை நெறிந்து செல்வம் என்று அனைத்தையும் சாதகமாக கொடுக்கப் போகிறார்.  துலாம் ராசிக்கு ஏழாம் பாவத்தில் குருபகவான் அமர்ந்து எதையும் சாதிக்கும் தன்மை, திருமண காரியங்களில் வெற்றி வீட்டில் சுப காரியங்களை நடைபெறுவது போன்ற நல்ல பலன்களை வாரி வழங்கப் போகிறார்.  ஜனவரி மாதத்தில் நன்மையே நடக்கும் வாழ்த்துக்கள் வணக்கம். 


 விருச்சிக ராசி :


 எனக்கு அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் பாகத்தில் ராகு பகவான் அமர்ந்து உங்களுடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் விரிவுபடுத்தப் போகிறார்.  ஒரே இடத்தில் அமர்ந்திருந்த நீங்கள் தற்போது உலகம் சுற்றும் வாலிபனாக மாறப் போகிறீர்கள்.  வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்றாலும், ஒரு முறைக்கு பலமுறை யோசிக்கும் நீங்கள் தற்போது யோசிக்காமலேயே வெற்றி வாகை சூட போகிறீர்கள்.  


ஆரம்பத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் உங்களுடைய கடன்களை அடைக்கப் போகிற மறைமுக எதிரிகள் உங்களுக்கு இருந்தாலும் அவர்களை சமாளித்து வெற்றி பெறுவதற்கான வழிவகைகளை குருபகவான் ஏற்படுத்திக் கொடுப்பார்.  உடல் உபாதையில் சற்று கவனம் தேவை.  சனிபகவான் ஒரு ராசிக்கு நான்காம் பாவத்தை அமர்ந்து வீடு மனை வாகனத்தில்  சற்று ஏற்ற இறக்கமான பலன்களை கொண்டு வந்தாலும் தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பாக இருக்கிறது.  நண்பர்கள் வகையில் சற்று கவனமாக நடந்து கொள்வது நல்லது.  ஜனவரி மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் வணக்கம். 


 தனுசு ராசி :


 எனக்கு அன்பான தனுசு ராசி வாசகர்களே.  உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் பாவத்தில் ஜனவரி மாதத்தில் குரு பகவான் அமர்ந்து ராசியை பார்ப்பதால் தொட்டது தொடங்கும் என் மீது ஈடேறும்.  வாழ்க்கையில் நீங்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தீர்கள் அல்லவா அந்த சாதனை தற்போது நிகழ்த்தப் போகிறீர்கள்.  ஐந்தாம் பாவத்தில் குரு பகவான் அமர்ந்து போட்டிகளில் வெற்றி போற்றி தேர்வுகளில் வெற்றி அரசு சார்ந்த உத்தியோகங்கள் உங்களை தேடி வரப்போகிறது.  புதுயுகம் கிடைக்கப்போகிறது.  நீண்ட நாட்களாக திருமணமாகாமல் காத்திருந்த  தனுசு ராசி வாசகர்களுக்கு நிச்சயமாக திருமண யோகம் கூடி வரும்.  நங்கபாவத்தில் ராகு பகவான் அமர்ந்து பத்தாம் வகுப்பில் கேது பகவான் இருப்பதால் ஒரு தொழிலுக்கு இரண்டு தொழில் பார்த்து அதில் வெற்றி அடையப் போகிறீர்கள்.  தொட்டது தொடங்கும் எண்ணியது ஈடிலும் வாழ்த்துக்கள் வணக்கம். 


மகர ராசி :


 அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நான்காம் பாவத்தில் குரு பகவான் அமர்ந்து இடம் மாற்றம் தொழில் மாற்றம் வீடு மாற்றம் போன்றவை கொண்டு வரப் போகிறார்.  சுபகாரிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளப் போகிறீர்கள்.  சுபச் செலவுகள் உங்களை தேடி வர போகிறது.  இருக்கும் இடத்தை விட்டு நீண்ட தூரம் அதாவது  சொந்த ஊரை விட்டு வெளி மாநிலம் வெளிநாடு என்று செல்ல தயாராக இருங்கள் .  பயணங்கள் மூலமாக ஆதாயம் கிட்ட போகிறது.  ஏழை சனியின் பாதிப்பில் இருக்கும் உங்களுக்கு சனி பகவான் பெரிதாக ஒன்றும் தீமையை செய்ய மாட்டார் .  ஜனவரி மாதம் முழுவதும் நன்மையான பலன்களை உங்களுக்கு நடைபெறப்போகிறது வாழ்த்துக்கள் வணக்கம். 


 கும்ப ராசி :


 அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய வாழ்க்கையில்  ஜென்ம சனி ஆதிக்கம் இருப்பதாக நினைத்து நீங்கள் பயந்து கொள்ள வேண்டாம்.  உங்களுடைய ராசியின் அதிபதி சனி  பகவானே வருவதால்  ஜென்ம சனி சரியாக இருந்து உங்களை எந்த பாடும் படுத்த மாட்டார்.  மூன்றாம் பாவத்தில் குரு பகவான் அமர்ந்து ஏழாம் பாவத்தை பார்வையிடுவதால், திருமண காரியங்கள் தடைபட்ட திருமணம் போன்றவை சுபமாக முடியும்.  வீடு வண்டி வாசல் விகாரங்களில்  சுபச் செய்திகளை கேட்க போகிறீர்கள்.  நீண்ட நாட்களாக புத்திரர் இல்லாமல் காத்திருந்த உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கப்போகிறது.  ஒரு வேலையை செய்வதற்கு முன்பாக அதை செய்யலாமா? வேண்டாமா? என்று சற்று யோசித்து செய்வது நல்லது. ஜனவரி மாதம் முழுவதும் உங்களுக்கு சிறப்பாக அமையப் போகிறது வாழ்த்துக்கள் வணக்கம். 


 மீன ராசி :


 எனக்கு அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே  லக்னத்தில் ராகு பகவான் அமர்ந்து  பல புரியாத புதிர்களை உங்களுக்கு அவிழ்த்து காட்டப் போகிறார். வாழ்க்கையில் நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ அதை நிச்சயமாக சாதித்து முடிப்பீர்கள். இரண்டாம் இடத்தில் குரு பகவான் அமர்ந்து  பண வரவுகளில் உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கப் போகிறார்.  ஏற்கனவே நீங்கள் சம்பாதித்த பணத்தை விட இரட்டிப்பாக சம்பாதிக்க போகிறீர்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க போகிறது குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவதற்கான  வேலை வந்துவிட்டது.  திடீர் பணம் வரவு திடீர் தொழில் முயற்சி வெற்றி போன்றவை கிட்டும்.  வாழ்க்கையில் நீங்கள் எதை செய்தாலும் அதில் வெற்றி  என்ற ஒற்றை வார்த்தையே மேலோங்கி நிற்கப் போகிறது உங்களுக்கு அனைத்தும் ஜனவரி மாதத்தில் சுபமாக முடியும் வாழ்த்துக்கள் வணக்கம்.