தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.


இந்துஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டார்.


அதன் முக்கிய அறிவிப்புகள்


* அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60% பங்குத்தொகை கொடுக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்புக் கட்டணச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும்.


* ஒருகால பூஜை திட்டத்தில் நிதிவசதியற்ற மேலும் 2000 கோயில்களுக்கு அரசு மானிய திட்டம் விரிவுப்படுத்தப்படும்.


* 27 திருக்கோயில்களில் ரூ.80 கோடியில் புதிய திருமண மண்டபங்கள் அமைக்கப்படும்.






* 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் வள்ளலார்  முப்பெரும் விழா நடத்தப்படும். சேக்கிழாரின் பிறந்த தலமான குன்றத்தூரில் அவரது திருநட்சத்திரத்தையொட்டி 3 நாட்கள் அரசு விழா நடத்தப்படும். கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர் ஆகியோருக்கு இந்தாண்டு விழா எடுக்கப்படும்.


* மயிலாப்பூர், நெல்லை, தஞ்சாவூர், திருவண்ணாமலை கோயில்களில் மகாசிவராத்திரியன்று மாபெரும் விழா நடத்தப்படும். மேலும் 8 கோயில்களில் யானைகளுக்கான குளியல் தொட்டிகள் அமைக்கப்படும்


* திருமணம் செய்யும் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோயில் சார்பில் புத்தாடை வழங்கப்படும்


* தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு ரூ.1 கோடியில் மணி மண்டபம் கட்டப்பட்டு, 3 நாட்கள் அரசு விழா நடத்தப்படும்.


* அதிகளவில் பக்தர்கள் வரும் 10 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாண்டு மேலும் 5 திருக்கோயில்களுக்கு புதிதாக மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.


* தமிழ்நாட்டில் 14 திருக்கோயில்களில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அன்னதான கூடங்கள் கட்டப்படும். ராமேஸ்வரம், மதுரை, திருவண்ணாமலை கோயில்களில் முழுநேர அன்னதான திட்டம் தொடங்கப்படும்.


* பழநியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளில் மாணவருக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண