'குரு தசா' பலன்கள் உங்களுக்கு எப்படி இருக்கும்? குரு புத்தி எப்படி இருக்கிறது..? முழு விவரம் இதோ

ஒருவரின் ஜாதகத்தில் குரு தசா நடக்கும் பொழுது அந்த 16 வருடம் அவருக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி நாங்கள் கூறப்போகிறோம்.

Continues below advertisement

அன்பார்ந்த ABPநாடு வாசகர்களே! குரு தசா வந்தால் என்ன மாதிரியான பலன்கள் உங்களுக்கு ஏற்படும் என்பதை பார்க்கலாம். பொதுவாகவே குரு என்பவர் மிகப்பெரிய சுப கிரகம் அவர் தீமை செய்வாரா என்றால்? செய்வது கடினம்... காரணம்  அவர்  வழிகாட்டி,  ஆசிரியர்,  நல்லவர்,  பண்பாளர்,  ஆச்சரியமிக்க அலாதியானவர்  இப்படி அவரைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டே போகலாம் இப்படி ஒருவரின் ஜாதகத்தில் குரு தசா நடக்கும் பொழுது அந்த 16 வருடம் அவருக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி நாங்கள் கூறப்போகிறோம்.

Continues below advertisement

வாருங்கள் குரு தசாவில், குரு புத்தி எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்!!!

 குரு புத்தி ( 768 நாட்கள்) :

கையில் பண நடமாட்டம் சிறப்பாக இருக்கும் தன தானிய லாபம் ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பெண்களால் மகிழ்ச்சியும் ஆதாயமும் கிட்டும்.

சனி புத்தி ( 912 நாட்கள் ) :

தன தானிய சேர்க்கை உண்டாக்கும்.  முடக்கு வாத நோயால் பாதிப்பு ஏற்படும்.  வீடு நிலம் போன்ற அசையா சொத்துக்களை வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும்.   மனைவிக்கு சில வகை துன்பங்கள் உண்டாகும்.  சில விவகாரங்களால் பொருள் விரயமாகும்.   நல்லவர்களை பகைத்துக் கொள்ள நேரிடும்.

புதன் புத்தி ( 816 நாட்கள் ) :

மகிழ்ச்சியை தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். இசைத் துறையில் ஆர்வம் உண்டாகும். கடவுள் பக்தி அதிகமாகும். மனைவி மக்கள் குதூகலமாக வாழ்வார்கள். புதன் பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் உடல் நலக்குறைவு உண்டாகும். மனைவி மக்களால் சில சிக்கல்கள் உருவாகும்.

கேது புத்தி ( 336 நாட்கள் ) :

நண்பர்களையும் உறவினர்களையும் பகைத்துக் கொள்ள நேரிடும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.   வெளிநாட்டில் சென்று வாழ கூடிய சூழ்நிலை உருவாகும். கேது உடல் சுப கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஓரளவு நன்மையான பலன்கள் நடைபெறும். செல்வம் சேரும்.

சுக்கிர புத்தி ( 960 நாட்கள் ) :

வாகன யோகம் உண்டாகும். நினைக்கும் காரியங்களை உடனுக்குடன் செய்து முடிக்க முடியும்.   சிற்றின்பத்தை தாராளமாக அனுபவிக்க முடியும். சுக்கிரன் 6 8 அல்லது 12 ஆம் வீட்டில் அமர்ந்தால் உறவினரின் பகை உண்டாகும்.

சூரிய புத்தி  ( 288 நாட்கள் ) :

 வருமானம் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். கவுரவம் செல்வம் பெருகும். நெருப்பால் ஆபத்து ஏற்படும் . பாவ காரியங்களை செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

சந்திர புத்தி ( 480 நாட்கள் ) :

வருமானம் பெருகி வீடு நிலம் போன்ற அசையா சொத்துக்களை வாங்க முடியும்.  ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும்.  மற்றவர்கள் பாராட்டக்கூடிய நற்செயல்களை செய்ய முடியும். மனதில் உற்சாகமும் தைரியமும் அதிகமாகும். அரசாங்கத்தால் தொல்லை உண்டாகும். கௌரவ குறைவு ஏற்படும். 

 செவ்வாய் புத்தி ( 336 நாட்கள் ) :

எந்த காரியத்தை தொடங்கினாலும் தடைபட்டு நிற்கும். பெற்றோருக்கு கண்டம் உண்டாகும். நோய்களால் அடிக்கடி பாதிப்பு ஏற்படும். குடும்பத்தைப் பிரிந்து வாழ நேரிடும். செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்தால் ஓரளவு வருமானம் வந்தாலும் எல்லாம் செலவாகிவிடும். 

 ராகு புத்தி ( 864 நாட்கள் ) :

எதிரிகள் அடிக்கடி ஏதாவது விவகாரம் செய்து கொண்டே இருப்பார்கள். கையில் சேரும் பணம் எதுவும் தாங்காது.   எல்லாம் உடனுக்குடன் செலவாகிவிடும். மனைவி மக்களுக்கு உடல்நல குறைவு ஏற்படும். ராகு சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் சில ஆதாயங்கள் கிட்டும். நல்ல நண்பர்களின் தொடர்பு கிட்டும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். செல்வாக்கு அதிகமாகும்..

Continues below advertisement
Sponsored Links by Taboola