உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் ஜாதகம்  எது ? 


இன்று உலக அளவில் ரத்த அழுத்தம் என்பது  தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.  ரத்த அழுத்தத்திற்கான காரணம் என்ன ? நான் மருத்துவ குறிப்பு பேச வரவில்லை. ஜாதகத்தில் ரத்த அழுத்தம் வருவதற்கான காரணங்கள் செவ்வாய் . ரத்தத்திற்கு அதிபதியான செவ்வாய்  உங்களின் ஆற்றலை,கோபத்தை,உஷ்ணத்தை,குறிப்பிடுகிறார்,  ரத்த அழுத்தத்திற்கு கோபம்  நேரடி தொடர்புடையதாக இருக்கிறது . செவ்வாய் ரத்த அழுத்தத்திற்கும் கோபத்திற்கும் அதிபதி . செவ்வாயுடன் தீய கிரகங்களான ராகுவும்  சனியும் சேர்ந்து விட்டால்  உயர் ரத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது . ஒரு மனிதனுக்கு கட்டுக்கடங்காத கோபம் எப்பொழுது வரும் ? ஏதேனும் பிரச்சினையில் சிக்கினால் தானே . ஆனால் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு சிறிய விஷயத்தில் கூட பெரிய அளவிற்கு கோவப்படும் தன்மையுடையவர்களாக இருப்பார்கள் . இந்திய அளவில்  தெருவிற்கு ஒரு ரத்த அழுத்த  நோயாளி இருக்கிறார்கள் என்று சர்வே கூறுகிறது .


ரத்த அழுத்தத்தை பொருத்தவரை மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள் . இருப்பினும் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தை  சிரிப்பின் மூலமாகவே விரட்டி விடலாம் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள் . அப்படி என்றால் ஒரு மனிதன் வாய்விட்டு சிரித்தாலே நோய்விட்டுப் போகும் அல்லவா . கோபத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் உங்கள் ஜாதகத்தின் செவ்வாயை கட்டுப்படுத்த வேண்டும் . காரம் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது, உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது , போன்ற உணவு கட்டுப்பாடுகள் மூலம் நம் ரத்த அழுத்தத்தில் கட்டுக்குள் வைக்க முடியும் .


செவ்வாய் + ராகு = ரத்த  அழுத்தம் :


செவ்வாய் கோபம் என்று எடுத்துக் கொண்டால் ராகு அதை பெரிது படுத்துகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் . ஒரு மனிதனுக்கு மேலும் மேலும் கோபம் அடைய  அவர் அரக்கனாக மாறுகிறார் . ஜாதகத்தில் செவ்வாய் ராகு  தொடர்பு பெற்றவர்கள் கட்டுக்கடங்காத கோபம் உடையவர்களாக இருப்பார்கள் . இந்த இரு கூட்டு கிரகங்களின் விளைவுகளை குரு பார்த்தால் ஓரளவுக்கு கட்டுக்குள் வைக்க முடியும் . 1 5 9 ஆகிய பார்வைகளில் செவ்வாய் ராகு இருந்து விட்டால்  கண்டிப்பாக  செவ்வாய் கட்டுக்குள் வந்துவிடுவார் . செவ்வாய் ராகு  ஜாதகத்தில் ரத்தக் கோளாறுகளையும் ரத்தம் தொடர்பான நோய்களையும் , அதற்கு ஆதாரமாக உயர் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துவார்.  செவ்வாய்  தன்னுடைய சொந்த வீடான நேசம் மற்றும் விருச்சிக ராசியிலிருந்து ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் .


அதேபோல செவ்வாய் தன்னுடைய நீச்ச வீடான கடகத்தில் இருந்தாலும் கட்டுக்குள் வரும் . நீச்சு வீட்டில் இருக்கும் செவ்வாயை குரு பார்த்தால் hypo  pressure எனக் கூடிய குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படும் .  hyper pressure   என்றால் உயிர் ரத்த அழுத்தம் என்று பொருள்.  செவ்வாய் கடகத்தில் இருக்கும் போது  hypo  pressure ஆகவும்,  செவ்வாய் நகரத்தில் இருக்கும் போது  hyper pressure  ஆகவும், செயல்படும்.


செவ்வாய் சனியும் ரத்த அழுத்தமும் :


செவ்வாயும் சனியும் யார் ஜாதகத்தில் இணைந்திருந்தாலும்  ரத்தம் தொடர்பான பிரச்சனைகள் வாழ்நாள் முடியும் வரை இருந்து கொண்டே இருக்கும் . குறிப்பாக  உடலில் இருக்கும் எலும்பு கூட செவ்வாயின் ஆதிக்கம் கொண்டதாகவே இருக்கிறது . செவ்வாயும் சனியும் ஜாதகத்தில் ஒன்று சேரும் காலத்தில் அவர்களின் எலும்பு உடைவதை நாம்  கண்களால்  பார்க்க முடியும். பிறந்த கால  செவ்வாய்  மீது கோச்சார செவ்வாய் போகும் காலத்தில் ரத்த அழுத்தத்தால் ஜாதகம் பாதிக்கப்படுவார் . அந்த செவ்வாயுடன் ராகுவுக்கு ஏதுவோ தொடர்பு பெறும்போது அவர்களின் எலும்பு விபத்துக்கள் மூலமாகவோ அல்லது மேலிருந்து கீழே விழுவதன் மூலமாகவோ உடையும் என்பது தான்  விதி .  ஜாதகத்தில் செவ்வாய் சனி இணைவு பார்வையை எப்படி தீர்க்க முடியும் ? ஒன்பது வாரங்களுக்கு நவகிரகங்களில் இருக்கும் சனி பகவானை சென்று வழிபட்டு வந்தால்  செவ்வாய் மூலமாக ஏற்படும் ரத்த அழுத்தம் எலும்பு முறிவு  அது சம்பந்தமான நோய்களிலிருந்து நிச்சயமாக விடுபடலாம் .


ரத்த அழுத்தமும் அதன் தீர்வுகளும் :


முருகன் கந்தன் கடம்பன் கார்த்திகேயன் சண்முகன் வடிவேலன் சுப்பிரமணியன் . இப்படி முருகனுக்கு பல பெயர்கள் உண்டு. நீங்கள் முருகப்பெருமானை மனம் உருகி தினமும் வேண்டி வர உங்களின் ரத்த அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் போகும் . வாரத்துக்கு இருமுறை கந்த சஷ்டி கவசத்தை படித்தாலும் கூட உங்களின் ரத்த அழுத்தம் காணாமல் போய்விடும் . அருகில் இருக்கும் முருகர் கோவிலுக்கு சென்று செவ்வாய்க்கிழமை தோறும் காலை 6 மணி முதல் 7 மணி வரை நீ தீபம் போட்டு வந்தாலும் உங்களின் ரத்த அழுத்தம் காணாமல் போகும் .  முருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டையோ அல்லது அனைத்து வீடுகளையும் தரிசித்து வந்தாலும் ரத்த அழுத்தத்திலிருந்து முற்றிலுமாக விடுபடலாம் . என்னால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. உடம்பு சரியில்லை என்று கூறுபவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் முருகப்பெருமானின் படத்தை மாற்றி வைத்து அவருக்கு அபிஷேக ஆராதனைகளை செய்து வரலாம் .


இது எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் முருகனை மனதார வணங்கி வர அடுத்த அழுத்தம் குறைந்து  ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.  ஜாதகத்தில் சனி செவ்வாய் இணைவு இருந்து ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் சனிக்கிழமை தோறும் முருகர் கோவிலுக்கு சென்று வழிபட அவை நிவர்த்தி ஆகும்.  செவ்வாய் ராகு இணை விருந்து ரத்த அழுத்தம் உள்ளவர்கள்  துர்க்கை அம்மன் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகு காலத்தில் விளக்கு போட்டு வர  ரத்த அழுத்தம் இல்லாமல் போகும் .