மகாலட்சுமி தாயாருக்குப் பிடித்த பிங்க் நிற குங்குமத்தைத் தினமும் நெற்றியில் வைத்து வந்தால் மன அமைதியையும், நினைத்தக் காரியம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.


குங்குமம் என்பது இந்துக்களின் வாழ்வில் மங்களகரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தெய்வத்தை வழிபட்டு குங்குமத்தை இட்டால் சகலமும் வளம் பெறும். மீனாட்சியம்மனின் தாழம்பு குங்குமத்தை நெற்றில் வைக்கும் போதே நறுமணத்துடன் நல்ல அதிர்வலைகளை நாம் பெற முடியும். இதோடு நம் மனக்கண்களில்  மீனாட்சியே காட்சித்தருவதைப்போன்று உணர்வோம். இதோடு குபேரருக்கு உகந்த பச்சைக்குங்குமத்தை நெற்றில் வைக்கும் போது, அனைத்து செல்வங்களையும் பெறுவோம். இதற்கடுத்து காமக்கிய குங்குமம். ஆரஞ்ச் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய இக்குங்குமம் நம்மை பாதுகாத்து வழிநடத்தும் பராசக்தியும் அம்சம் என்கின்றர். இப்படி குங்குமத்தில் பல வகைகள் உள்ள நிலையில், ஒவ்வொன்றுக்கும் தனிசிறப்புகளும் உள்ளது. அந்தவரிசையில் இன்று நாம் பார்க்கவிருப்பது பிங் நிறக்குங்குமம் மற்றும் அதன் நன்மைகள் பற்றியது தான்.





பிங்க் குங்குமம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:


பிங்க் நிற குங்குமத்தை நெற்றில் வைத்தாலே மாகலட்சுமி தாயாரின் ஆசியைப்பெறுகிறோம்.  இதனை விருப்பத்திற்கு ஏற்ப  நெற்றியில் எங்கே வைத்தாலும், குங்குமத்தைப் பார்த்தாலும் மகாலட்சுமியின் அருளைப் பெறுவதோடு, ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை பெறுகிறோம்.. குறிப்பாக இந்த குங்குமத்தைப்பார்க்கும் போதே நல்ல அதிர்வலைகளை நாம் உணர்வோம். எனவே தினமும் மகாலட்சுமி அம்மனுக்கு பிங் நிற குங்குமத்தை வைத்து வழிபடும் போது, வறுமையின் நிலையைப்போக்கி வளமாக வாழ முடியும் என்று நம்பப்படுகிறது.


தெய்வங்களுக்குப் பிடித்ததை நாம் செய்யும் போது தெய்வங்கள் மகிழ்ச்சி அடைவதோடு, நமக்குத் தேவையான அனைத்து சுப காரியங்களையும் நடத்துவதற்கு உதவி புரிவார்கள். எனவே மனதிற்கு மன அமைதியையும், பேரானந்தத்தையும் தரும் பிங் குங்குமத்தை பெண்கள் தினமும் நெற்றியில் இட்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள். 





இந்த குங்குமத்தை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ள ஏற்றது. பக்கவிளைவுகள்  எதுவும் தராதது எனவும், குழந்தைகளுக்குத் திருஷ்டியை போக்க கூடியதாகவும் இந்த குங்குமம் விளங்குவதாக்கூறப்படுகிறது. இதோடு மகாலட்சுமிக்கு உகந்த குங்குமத்தை வைப்பதன் மூலம் நினைத்தக் காரியம் வெற்றியுடன் நடைபெறும்.  இதோடு வேலைவாய்பு, திருமணத்தடை, தீராத நோய் தீர இந்த குங்குமத்தைப் பயன்படுத்தலாம். மற்ற குங்குமத்தைப்போன்று வழக்கமாக வைக்கும் பொட்டுக்கு மேலே வைப்பது சிறப்பானது . குறிப்பாக இல்லத்தரிகள் இந்த குங்குமத்தை தனியாக வைத்து பயன்படுத்தினால் கூடுதல் சிறப்பானது என ஆன்மீக வாதிகள் கூறுகின்றனர்.  எனவே மங்களத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடிய இந்த பிங்குங்குமத்தை வைத்து வழிபட்டு பயன்பெறுங்கள்.