மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி இடம் பெயர்ந்ததையடுத்து, பல ராசியினருக்கும் வாழ்வில் ஏற்றங்களும், மாற்றங்களும் நடைபெற உள்ளது.
12 ராசிகளுக்கான கோவில் பரிகாரங்கள்
மேஷ ராசி:
மேஷ ராசியை பொறுத்தவரை குரு பெயர்ச்சி நன்றாக உள்ளது. குறிப்பாக ராசிக்கு இரண்டாம் இடத்தில் பெயர்ச்சியாகும் குரு பகவான் உங்களின் பண வரவை உயர்த்தப் போகிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிம்மதி கிடைக்கப் போகிறது. எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
செல்ல வேண்டிய கோயில்:
கஷ்டங்களிலிருந்து விடுபட மகாலட்சுமி வழிபட வேண்டும். குறிப்பாக திருப்பதி அருகாமையில் இருக்கக்கூடிய திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு செல்ல வேண்டியது சிறப்பு.
ரிஷப ராசி:
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே ராசியிலேயே குரு இருப்பதால் வாழ்க்கையில் எல்லாவிதமான வளங்களும் கிடைக்கும். குரு உங்கள் வீட்டிற்கு லாபாதிபதியாக இருப்பதால் ராசிக்கு வரும்போது பல முன்னேற்றங்களைக் கொடுப்பதோடு நல்ல பெயரையும் எடுக்க வைப்பார்.
செல்ல வேண்டிய கோயில்:
உங்கள் வீட்டில் அருகாமையில் இருக்கக்கூடிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆலயத்திற்கு செல்லுங்கள். முடிந்தவரை பகவத் கீதையை படிப்பது நல்லது.
மிதுன ராசி:
மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் குரு பகவான் சஞ்சாரம் செய்கிறார். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வைப்பார் . வாழ்க்கையில் புதிய அனுபவங்களை உங்களுக்கு கொடுக்கப் போகிறார். சுப விரய செலவுகள் அதிகமாக இருக்கலாம்.
செல்ல வேண்டிய கோயில்:
திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் கோயில் செல்லலாம். அப்படி இல்லை என்றால் படுத்த கோலத்தில் இருக்கக்கூடிய பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.
கடக ராசி:
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஜாக்பாட் யோகம் உண்டு . பதினொன்றாம் வீட்டில் குரு பகவான் அமர்கிறார் . எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கையை வருகின்ற ஓராண்டு நகர்த்தி செல்ல இருக்கிறார். கேட்டதும் கிடைக்கும் கேட்காததும் கிடைக்கும்.
செல்ல வேண்டிய கோயில்:
உங்கள் வீட்டில் அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் கோயில் வழிபாடு சிறந்தது.
சிம்ம ராசி:
சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு வருகிறார். இரண்டாம் வீட்டு தனஸ்தானத்தை பார்வையிடுவதால் குடும்ப மேன்மை உண்டாகும். தன வரவு தாராளமாக இருக்கும். வீடு வாகனம் யோகம் உண்டாகும்.
செல்ல வேண்டிய கோயில் :
உங்கள் வீட்டில் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.
கன்னி ராசி:
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே ராசிக்கு ஏழாம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்திருக்கிறார் . ராசியிலே இருக்கும் கேதுவை தற்போது பெயர்ச்சியாகும் குரு பகவான் பார்வையிடுகிறார். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். அயல்நாடு சென்று வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு வரும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
செல்ல வேண்டிய கோயில்:
வீட்டின் அருகில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று வாருங்கள்.
துலாம் ராசி:
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் குரு பகவான் மறைவதால் மனதில் இனம் புரியாத படபடப்பு தோன்றும். கவலை வேண்டாம். இரண்டாம் இடத்தில் பார்ப்பதால் தன வரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத தன வரவு உண்டாகும்.
செல்ல வேண்டிய கோவில்:
சிவன் ஆலயத்தில் இருக்கக்கூடிய குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யலாம்.
விருச்சிக ராசி:
விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் கவனமாக இருக்கவும். அதேசமயம் கேட்டது கிடைக்கும் நேரம் இது. திருமண காரியத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும். மனம் புத்துணர்ச்சி அடையும்.
செல்ல வேண்டிய கோயில்:
வீட்டின் அருகில் இருக்கக்கூடிய முருக பகவான் தரிசனம் செய்யலாம்
தனுசு ராசி:
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களது ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார் . பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தங்க ஆபரணங்களை வாங்கி மகிழுங்கள். வீடு வண்டி வாகனத்தில் யோகம் கிடைக்கும். புதிய உத்தியோகம் அமையும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு.
செல்ல வேண்டிய கோயில்:
உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.
மகர ராசி:
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் பாவத்தில் குரு பகவான் அமர்ந்து மகிழ்ச்சியை கொடுக்கப் போகிறார். பலருக்குத் தெரிந்த முகமாக நீங்கள் மாறுவீர்கள். உங்களின் திறமைகளை கண்டு அடுத்தவர்கள் உங்களை புகழ்வார்கள். எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றி கிடைக்கும். புதிர ஸ்தானத்தில் குரு பகவான் அமர்த்திருப்பதால் குழந்தை பேரு உண்டாகும்.
செல்ல வேண்டிய கோயில்:
உங்கள் வீட்டில் அருகில் இருக்கக்கூடிய விஷ்ணு. துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் நல்லது
கும்ப ராசி:
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு குரு நான்காம் வீட்டில் இருப்பதால் நிச்சயமாக இடமாற்றம் தொழில் மாற்றம் உண்டு. வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ இடம் மாறுதல் ஏற்படலாம். தொழில் ரீதியான முன்னேற்றங்கள் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அனைத்தும் நன்மை ஆகவே முடியும்.
செல்ல வேண்டிய கோயில் :
உங்கள் வீட்டில் அருகில் இருக்கக்கூடிய காளியம்மன் கோயிலுக்கு செல்லலாம்.
மீன ராசி:
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் குரு பகவான் அமர்வதால் எதையும் சாதிக்கக் கூடிய மனப்பக்குவம் உண்டாகும். அடுத்தவர் முன்பாக தலை நிமிர்ந்து நடக்கப் போகிறீர்கள். மற்றவர்கள் யோசனைகளை உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான குரு பெயர்ச்சி.
செல்ல வேண்டிய கோயில்:
உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கால பைரவரை வழிபட்டு வந்தால் நல்லது.