குரு பகவான் ஒருவரின் வாழ்வில் உச்சத்தில் சென்றால் அவரின் வாழ்வில் ஏறுமுகம் ஏற்படும் என்பது நம்பிக்கை ஆகும். குரு பெயர்ச்சி வரும் மே 1ம் தேதி நடக்கப்போகிறது. குரு பெயர்ச்சிக்கு பிறகு எந்த ராசிக்காரர்கள் கடன் தொல்லை குறையப் போகிறது என்று காணலாம்.


மேஷ ராசி :


அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு தனஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பணவரவு தாராளமாக இருக்கும்.  கடந்த காலங்களில் ஏதேனும் ஒரு புதிய தொழில் தொடங்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு சுப காரியங்களுக்காக, சுப நிகழ்ச்சிகளுக்காக நீங்கள் பணத்தை தாராளமாக செலவு செய்திருக்கலாம்.  அதன் மூலமாக நீங்கள் கடன்காரரும் ஆகி இருக்கலாம். 


கடன்கள் என்பது நம்முடைய தேவைக்காக  மற்றவர்களிடத்தில் இருந்து நாம் பெறுவது.  இப்படியான சூழலில் உங்களுடைய  இரண்டாம் இடத்திற்கு குரு வந்த பின்பாக, நீங்கள் சுயமாக உங்கள் முயற்சியில் சம்பாதித்து, அதில் வரும் பணத்தை வைத்து ஏற்கனவே உங்களுக்கு இருக்கின்ற கடன்களை அடைப்பீர்கள்.  வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லை.  நம் அருகில் இருப்பவர்கள் நண்பர்கள் எல்லாம் அபாரமாக வளர்ந்து கொண்டே செல்கிறார்கள், நமக்கு வளர்ச்சியே இல்லை என்று  சிந்தித்துக் கொண்டிருக்கும் மேஷ ராசி அன்பர்களே  குருபகவான் தனஸ்தானத்திற்கு வந்த பின்பாக  பணம் சம்பாதிப்பது பன்மடங்காக உயரும்  இருக்கின்ற கடன்களை அடைப்பது மட்டுமில்லாமல் நீங்கள் 10 பேருக்கு கடன் கொடுக்கின்ற அளவிற்கு உங்களுடைய  வருமானம் சிறப்படையும்.


பரிகாரம் : ஆறுமுகப்பெருமானை வணங்கி வர சங்கடங்கள் தீரும்


கடக ராசி :


அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு பகவான் வருகிறார். அவர் குறிப்பாக இரண்டு வீட்டுக்கு அதிபதியானாலும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியாகிறார்.  நீங்கள் வாங்கும் கடனே உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும்.  அப்படி என்றால் மீண்டும் கடன் வாங்குவோமா?  என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.  இதில் ஒரு ரகசியம் அடங்கியிருக்கிறது. ஆறாம் அதிபதி பதினொன்றாம் வீட்டிற்கு வரும் பொழுது, நீங்கள் ஏற்கனவே கடன் வாங்கி இருந்தாலும் சரி அல்லது புதியதாக கடன் வாங்கப் போகிறீர்கள் என்றாலும் சரி அவை நீங்கள் திருப்பி கட்ட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.  விளக்கமாக கூறுகிறேன். ஏற்கனவே நீங்கள் கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்றால், ஏப்ரல் 30ஆம் தேதி குரு பெயர்ச்சிக்கு பிறகு, கடன் காரர்களே நீங்கள் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டியது இல்லை  மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கொடுங்கள். மீதத்தை உங்களுக்கு எப்பொழுது சௌகரியப்படுகிறதோ அப்பொழுது கொடுங்கள் என்று கூட கூறலாம்.


மற்றொரு விதி நீங்கள்  ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு கடன் வாங்க போகிறீர்கள் என்றால்? அந்தக் கடன்களை நீங்கள் திருப்பி சுலபமாக அடைத்து விடுவீர்கள். அல்லது அந்த கடன்களை வாங்கி நீங்கள் தொழிலில் முதலீடு பண்ணினால் அந்த தொழில் பல மடங்கு உயர்ந்து கடன்களை  சுலபமாக அடைப்பதற்கான வழிவகைகளை  ஏற்படுத்தும்.  எப்படி இருந்தாலும் கடன்கள் என்பது உங்களுக்கு லாபகரமாகத்தான் அமையும்.  குறிப்பாக, கலைத்துறையில் சினிமா துறையில் இருப்பவர்கள் கடன் வாங்கி ஒரு படத்தை எடுக்கிறார்கள் என்றால் அவர் கடக ராசியாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக ஒரு கோடிக்கு படம் எடுத்தால் 10 கோடிக்கு அவருக்கு லாபம் கிடைக்கும்.  இது சினிமாத்துறை மட்டுமல்ல இதே போன்று சிறியதாக கடன் வாங்கி முதலீடு செய்து வியாபாரம் செய்தால் பெரிய தொகை கிடைத்து அவர்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையுமே செட்டிலாக கூடிய அளவுக்கு பண வருவாய் உண்டு.


பரிகாரம் :  குரு தக்ஷிணாமூர்த்தி வழிபாடு


சிம்ம ராசி :


அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு வருகிறார் பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்று ஒரு பழமொழி உண்டல்லவா?  அப்படி ஒன்றும் உங்களுக்கு அசம்பாவிதம் நடந்து விடாது. வேலையில் சிறு மாறுதல்கள் அல்லது வேறு இடங்களுக்கு வேலை மாற்றமோ நீங்களாகவே விரும்பி செல்லக் கூடிய நிலையில் கூட அமையலாம்.  நேரடியாக கடன் பிரச்சனைக்கு வருகிறேன். பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் நேரடியாக பார்ப்பார்.  இப்படியான சூழலில் மலையளவு நீங்கள் கடன் வைத்திருந்தாலும் அவை கடுகளவு குறைந்து தான் போகும்.


கடன்காரர்கள் உங்கள் கழுத்தை நெறித்த காலம் போய்  உங்களிடம் இருக்கும் வருமானத்தை வைத்து கடன்களை அடைத்து விட்டு  அல்லது  உங்களிடம் இருக்கக்கூடிய வேறு ஏதேனும் பொருட்களையும் இடத்தையும் விற்று அதன் மூலம் உங்களுடைய ஒட்டுமொத்த கடன்களையும் அடைப்பீர்கள். சிம்ம ராசிக்கு இரண்டாம் வீட்டில் கேது பகவான் அமர்ந்து சற்று பண வரவு தடையை உண்டாக்கி இருக்கலாம். அந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக குரு பகவான் பத்தாம் வீட்டில் அமர்ந்து, தன்னுடைய ஐந்தாம் பார்வையாக இரண்டாம் வீட்டை பார்ப்பதால் வருமானம் உயரும்.  ஏற்கனவே செய்து வைத்த சம்பாத்தியம் தற்போது உங்களுக்கு உதவியாக இருக்கும். அல்லது ஏற்கனவே நீங்கள் ஒருவருக்கு கை மாற்றாக பணம் கொடுத்திருந்தால் அந்த பணத்தை வாங்கி மற்றொரு சுப காரியங்களுக்கு செலவழிப்பீர்கள் .


பரிகாரம் :  பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்


தனுசு ராசி :


அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு நேரடியாகவே குருபகவான் ஆறாம் வீட்டில் அமர்கிறார் என்ன ஒரு ஆச்சர்யம் பாருங்கள். உங்களுடைய ராசியாதிபதி ஆறாம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கேட்காமலேயே கடன் கிடைக்கும்.  நீங்கள் ஒரு மடங்கு கடன் கேட்டால் பத்து மடங்கு கடன் கொடுக்க மற்றவர்கள் தயாராக இருப்பார்கள்.  தேவைகளை பூர்த்தி செய்வதற்கான காலகட்டம் ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு தானாகவே அமையும். 


ஆறாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருப்பது உங்களுடைய வலிமையை  அதிகப்படுத்தும் எதிரிகள் அழிவார்கள். உங்களுக்கு பின்பாக உங்களைப் பற்றி புறம் பேசிக் கொண்டிருந்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். தன்னம்பிக்கை பிறக்கும், தைரியம் பிறக்கும், எதிரிகளை வெல்லக்கூடிய சக்தி கிடைக்கும்.  ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கக் கூடிய குரு பகவான் உங்களுடைய இரண்டாம் வீட்டை பார்ப்பதால் வருமானம் உயர்ந்தே தீரும். மற்றபடி பத்தாம் வீட்டை பார்ப்பதால் ஒரு வேலைக்கு இரண்டு வேலை பார்த்து அதன் மூலமாக உங்களுடைய வருமானத்தை பெருக்கப் போகிறீர்கள். கிட்டத்தட்ட இந்த குரு பெயர்ச்சி தொழில் மேன்மை தனவரவு கடன் அடைதல் கடன் நீங்கள் கொடுக்கும்படி சூழ்நிலைகள், ஏற்படுதல் போன்ற  சுகமான நிகழ்வுகளை நடக்கப் போகிறது .


பரிகாரம் :  நவகிரகத்தில் இருக்கும் குரு பகவான் வழிபாடு


கும்ப ராசி:


அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரவோ அல்லது வேலை மாற்றத்தை கொடுக்கவோ குருபகவான் தயாராகி விட்டார். ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு நிச்சயமாக உங்களுக்கு இடம் மாற்றம் உண்டு. அந்த இடம் மாற்றம் வீடு தொடர்பாகவோ அல்லது வேலை தொடர்பாகவோ அமையும்.


கும்ப ராசிக்கு நான்காம் வீட்டில்  அமரும்  குரு பகவான்  உங்களுக்கு மிகப்பெரிய கடன்கள் அடைப்பதற்கான யோகத்தை கொண்டு வருவார். எப்படி என்றால்  குரு பகவான் அமர்ந்திருப்பது நான்காம் வீட்டில் நான்காம் வீடு என்பது ஆறாம் வீட்டிற்கு பதினொன்றாம் வீடு சுலபமாக சொல்கிறேன். ஆறாம் வீடு என்பது ரோக, ருண, சத்ரு ஸ்தானம்.  உதாரணத்திற்கு ஆறாம் வீட்டில் கடன் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் தற்போது ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பிறகு பெயர்ச்சியாகும் குருபகவான் ஆறாம் வீட்டிற்கு பதினொன்றாம் வீடான நான்காம் வீட்டில் அமர்கிறார். அப்படி என்றால்  நீங்கள் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். 


ஒருவேளை ஏற்கனவே நீங்கள் கடன் வைத்திருக்கிறீர்கள் என்றால் அந்தக் கடன் அடைவதற்கான வழி வகைகள் திறக்கும்.  தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு. குறிப்பாக நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கக் கூடிய குரு பகவான் உங்களின் பத்தாம் வீட்டை பார்ப்பதால் புதிய தொழில், வேறு வேலை மாற்றம் போன்ற நல்ல பலன்களை நடைபெறும்.  நீங்கள் இருக்கின்ற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம் பெயர்வதன் மூலம் மன நிம்மதியை அடைவீர்கள்.  மலை அளவு கடமிருந்தாலும் கடுகு அளவு குறைந்துபோகும் படி நிச்சயமாக நான்காம் வீட்டு குருபகவான் உங்களுக்கு செய்யப் போகிறார்.


பரிகாரம் :  சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வாருங்கள்