உலகப் பிரசித்தி பெற்ற ஆலங்குடி குரு பகவான் கோயிலில் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உலகப்பிரசித்தி பெற்ற ஆபத்தாகேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் குரு பகவான் சுவாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது. குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். குரு பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பரிகார ராசிகள் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து குரு பகவானை வழிபட்டனர். 


வரும் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மற்றும் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறும். மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.