கொஞ்ச தூரம் நடக்கலாமா? கை புடுச்சு நடக்கலாமா? நிஜமாவே என்ன காதலிக்கறயா என்ற கொஞ்சம் ப்ரியங்களை தாங்கிய கேள்விக்ளை எதிர்கொள்ளதா காதலே இருக்காது. காதலின் கை பிடித்து நடக்கையில் மனதுக்கு மட்டுமல்ல வாழ்வுக்கும் அது ஒரு இதமான காலம். கரங்கள் கோர்ப்பது என்பது ஏதோ விளையாட்டாய் நிகழ்வது கிடையாது. அது உள்ளூற நிகழ்வது. உங்களில் தொடங்கி உங்கள் காதலின் நம்பிக்கையிலோ அல்லது உங்கள் காதலில் தொடங்கி உங்களின் நம்பிக்கையிலோ அது நீளும். எனக்கு நீ இருக்கிறாய், எனும் நம்பிக்கை இருவரிலுமே ஊறி திளைத்து பூக்களை பூக்கச் செய்கிறது. காதல் எப்போதும் ஒரு நந்தவனத்தைப்போல் இருக்க விரும்புவதே இல்லை. 


மாறாக அது ஒரு வறட்சியை கடக்க தயாராகிறது. புயலில் இருந்து மீள தன்னை ஈடுபடுத்த நினைக்கிறது. ஒரு பெரும் பூகம்பத்தின் பிளவில் அகப்படாமல் இருக்க முயல்கிறது. ஓர் ஆழ்கடலின் சுழலில் சிக்கி தவிக்க அது விரும்பவே விரும்பாது. ஆனால் இப்படியான எத்தனை துயரங்களை கடக்கும்போதும் கடந்த பிறகும், காதல் எதிர்பார்ப்பது ஒன்று தான். மீண்டும் அந்த அன்பின் கரங்களை அழுத்தமாக பிடித்துக்கொண்டு உலகையே வலம் வர அது ஆவல் கொள்ளும். இது இயல்பாய் இயற்கையாய் காதலுக்கே உரித்தான ஓர் அழகிய குணம். 


காதல் எந்தவொரு மோசமான சூழலிலும் கரங்களை பிய்த்துக்கொண்டு சென்றுவிட வேண்டும் என நினைப்பதே இல்லை. காதல் கரங்களை இன்னும் இறுகப்பற்றத்தான் நினைக்கிறது. எல்லா காதலிலும் முதல் முறையாக கரங்களை கோர்க்கும் போது ஒரு சிறு தடுமாற்றத்துடன் வெட்கத்துடன் ஒருவித பதற்றத்துடன் தான் பற்றியிருக்கும். அப்படி பற்றிக்கொண்ட கரங்கள் தான், தன் காதலை ஆரத்தழுவிக்கொள்கின்றன. காதலில் கரங்கள் செய்யும் மாயாஜாலம் அளப்பரியது. கண்களில் தொடங்கும்  காதலை கரங்களில் தொடர்வது ஒரு மாயவித்தை. அப்படியான வித்தைகளில் சொதப்பல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நாங்க விரும்புறோம். சொதப்பல் ஏற்படாமல் இருக்க உங்க ராசிக்கான ஜாலியான லவ் ராசி பலன்களை ஜோடியா படிங்க...


மேஷம்


இந்த மாச சம்பளத்துல புரெபஷ்னல் டேக்ஸ் டிடெக்ஷன் புடுச்சிருக்கற மெசேஜ பாத்துட்டு, நாம புரெபஷ்னல் ஜாப்ல தான் இருக்கோம்னு நெனச்சது மட்டும் இல்லாம, மெசேஜ காட்டி உங்க ஆள் வீட்டுல கல்யாணத்தபத்தி பேசலாம்னு யோசிப்பீங்க. அப்பாவியான உங்களுக்கு இன்னைக்கு ஜாலியான நாள். 


ரிஷபம்


நேரடியா விசயத்துக்கு வரமா, மெட்டிஒலி சீரியல பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ணீட்டு இருப்பீங்க. இன்னைக்கு உங்களால உங்களுக்கும் பிரயோஜனம் இல்ல உங்க லவ்வருக்கும் பிரயோஜனம் இல்ல. தயக்கத்துலயே இந்த நாள கடப்பீங்க. 


மிதுனம்


லவ்வுல கமிட் ஆன வரைக்கும் சீரியஸா இருந்த நாம, இப்பெல்லாம் அப்படி இருக்கறதே இல்லைனு யோசிக்கற மாதிரி, உங்க சைடு இருக்குற மிஷ்டேக்ஸ யோசுச்சு ’உச்சு’ கொட்டீட்டு இருப்பீங்க. உங்க லவ் லைஃப்லயே இன்னைக்கு உங்களுக்கு விடியல் வந்த நாள்னு நீங்க சொல்ற அளவுக்கு இருக்கும். 


கடகம்


நீங்க ஆசை ஆசையா ஏதேதோ சொல்லீட்டு இருக்கும் போது, எனக்கு கால் பண்ணுனு உங்க ஆள் சொல்லுவாங்க. நீங்களும் ஏதோ ஸ்பெஷல் ரிங் டோன் வெச்சுருக்காங்கனு யோசுச்சு கால் பண்ணுவீங்க. இவனுக்கு ஒரு சீட்டு எடுத்து பாருங்க ஒரே பொய்யா சொல்லீட்டு இருக்கான்னு வரும். உங்க மொத்த உழைப்பும் டோட்டல் டேமேஜ். சங்கடமான நாள். 


சிம்மம் 
நாலையும் ரெண்டையும் பெருக்குனா பதினேழு வரும்னு நீங்க சொன்னா கூட உங்க லவ்வர் பாராட்டுவாங்க. சூப்பர் ஸ்டார் மாதிரி மிமிக்ரி செய்யறேன்னு நிழல்கள் ரவி வாய்ஸ் பேசுனா கூட உங்களுக்கு கைத்தட்டல் நிச்சயம். உங்களுக்கும் உங்க லவ்வருக்கும் ஒரு மாதிரி மஜாவான நாள். 


கன்னி 
சின்ன சண்டையில நீங்க மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு இருந்தாலும் உங்க ஆளு உங்க சுத்தி சுத்தியே வந்து உங்கள கேர் பண்ணீட்டு இருப்பாங்க. எவ்வளவு பெரிய சண்ட வந்தாலும் எங்கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியாதுனு சொல்ற அளவுக்கு உங்களுக்கு லவ் டார்ச்சர் தருவாங்க. உங்க லவ்வர இன்னும் புருஞ்சுக்க சூப்பரான நாள். 


துலாம்


நம்ம ஆளு தான, எவ்வளவு அடுச்சாலும் தாங்குவாங்கனு உங்க சௌரியத்துக்கு இருக்காதீங்க. ஜஸ்ட் ரெஸ்பெக்ட் யுவர் பார்ட்னர். இல்லனா  டு டே நல்லா போற மாதிரி போயி கண்ணீர்ல முடிய சான்ஸ் அதிகம். சோ பீ கேர் புல். 


விருச்சிகம்


உங்க பார்ட்னர்ட்ட இருந்து உங்களுக்கு ஏகப்பட்ட சப்போர்ட் கிடைக்கும். நீங்க நடு ராத்திரி கால் பண்ணி நான் சினிமாக்கு போலானு இருக்கேன்னு சொன்னா, சன்டே வரைக்கும் டிக்கெட்ஸ் கிடைக்காது. மன்டே வேனா போய்ட்டு வானு சொல்லுவாங்க. ஆனா நீங்க சீரியஸா சினிமால கெரியர் ஸ்டார்ட் பண்றேன் சொன்னாலும் இப்படி தான் ரியாக்ட் பண்ணுவாங்க. 


தனுசு 


நல்லா மழை பெய்யுது கொஞ்சம் நனையலாம் வாயேன்னு உங்க ஆள கூப்ட்டா, சளி புடுச்சுக்கும், அம்மா திட்டுவாங்க, ஐயோ ஊசி போட முடியாதுனு சொல்லுவாங்க. மக்கு பார்டனர வெச்சுக்கிட்டு என்ன செய்யறதுனு முழிப்பீங்க. மக்கா இருந்தாலும் சொக்க தங்கம்னு நீங்களே மனசுல பாராட்டிக்குவீங்க. நம்பிக்கையான நாள்.


மகரம் 


இன்னைக்கு வண்டிய நீங்க ஒரு பக்கம் திருப்புனா அது ஒரு பக்கம் போகும். நெறய திட்டு வாங்கலாம். அடி கூட வாங்கலாம். ஒரு தாக்குதல் முடுஞ்சதுக்கு அப்பறம் சாரினு சொல்லுவாங்க உங்க பார்டனர். சோ பாத்து சூதானமா இருந்துக்காங்க. மண்ட பத்ரம். 


கும்பம்


உங்க லவ்வர் கோவுச்சுகிட்டாங்கனா சமதானம் செய்யனும். ஐ மீன் லவ் பண்ணனும். அத விட்டுட்டு உனக்கென்னப்பா நீ பைத்தியம் டெம்ப்ளேட் யூஸ் பண்ணி மீம் ரெடி பண்ணக்கூடாது. அப்பறம் எனக்கென யாரும் இல்லையேனு பாட வேண்டி வரும். இன்னைக்கு நீங்க செய்ய வேண்டியது லவ் அன்ட் கேர் மட்டும் தான். 


மீனம் 
நேத்து  குஷில அனுப்புன கிஸ் எமோஜிக்கு இன்னைக்கு ரிப்ளே செய்யற உங்க ஆள வெச்சுகிட்டு நீங்க படுற பாடு இருக்கே. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும். உங்க லவ்வுல உங்க அன்டர்ஸ்டேன்டிங் தான் ப்ளஸ்ஸே. ஆல் த பெஸ்ட் ஃபார் ஒன் மோர் குட் டே.