60 வயது கடந்த இரண்டு பேர் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் சந்தித்துக் கொண்டது ஒரு முதியோர் இல்லத்தில். தனது குழந்தைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்த இவர்கள் வாழ்க்கையில் நடந்துள்ள சம்பவம் நமக்கு மட்டும் இல்லை அவர்களுக்கும் ஆச்சர்யம் தான். இந்த காதல் அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. இயற்கை இங்கு யாரையும் தனித்து விடுவதே இல்லை. உங்களையும் தான். இருவருக்குமே தங்களது கடந்த காலத்தில் ஒரு வாழ்க்கை இருந்தது. அவர்களுக்கு துணை இருந்தது, குழந்தைகள் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அவை எல்லாம் இல்லாமல் போனபோது, மனம் இறுகித்தான் போயிருக்குமே தவிர, இவர்கள் மனதை பூட்டிவிடவில்லை. மனதை ஒரு நதிபோல் வைத்துக் கொண்டார்கள். அதனால் தான், மீண்டும் ஒரு காதல் என்பது இவர்கள் வாழ்வில் சாத்தியப்பட்டது. நம் மீது பிரியமாக இருப்பவர்களை நாம் கூடுமானவரை நம்மோடு சேர்த்துக் கொள்வது தான் இயற்கை, காதல். அப்படியான காதலுக்கு எங்கள் பக்கத்தில் இருந்து நாங்கள் தரும் லவ் ராசிபலன்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். சீரியஸான விசயத்த ஜாலியா சொல்றோம் ஹேப்பியா படிங்க... படித்து பயன் பெறுங்கள்.
மேஷம்
எப்பவுமே எதாவது சொதப்பல் செஞ்சு உங்க லவ்வர்ட்ட திட்டு வாங்கற நீங்க இன்னைக்கு பாராட்டு மழையில நனைவீங்க. உங்களுக்கே இது கனவா இல்ல நிஜமானு தோனுற அளவுக்கு இந்த நாள் ரொம்ப சந்தோஷமா அமையும். ஜாலியா இருங்க.
ரிஷபம்
எப்பவுமே ஜாலியா பேசீட்டு இருக்குற நீங்க, இன்னைக்கு உங்க மனச பாதுச்ச எதாவது ஒரு உறவ பத்தி பேசுவீங்க. உங்க லவ்வரும் அத முழுசா கேட்டுட்டு ‘’ கவல படாத பாத்துக்கலாம்’’னு சொல்லுவாங்க. ஒரு எமோஷனலான டே தான் உங்களுக்கு.
மிதுனம்
உலகம் திடீர்னு அழுஞ்சு போனா என்ன செய்யறதுனு நீங்க சும்மா விளையாட்டுக்கு கேக்குற கேள்விக்கு, உங்க லவ்வர் அதுக்குள்ள வீட்டுல பேசி கல்யாணம் செஞ்சுக்கலாமானு சீரியஸா பதில் சொல்லீட்டு இருப்பாரு. ஒரு மாதிரி மஜாவான நாள் தான் உங்களுக்கு.
கடகம்
உங்க ஆள் கூடவே இருந்தாலும் அவங்கள மிஸ் பன்ற மாதிரி தோனீட்டே இருக்கும். ஏங்கி ஏங்கி இந்த நாள கடக்க வேண்டி வரும். உங்க லவ் லைஃப்ல இன்னைக்கு உங்களுக்கு ரொம்பவே முக்கியமான நாளா அமையும். மெமரபுல் டே.
சிம்மம்
உங்க லவ்வர கஷ்டபடுத்தாம இருங்க. அதுதான் நீங்க இன்னைக்கு செய்யவேண்டிய முக்கியமான விசயம். கவனமா பேசுங்க. விளையாட்டுக்கு பேசறனு சொல்லி வம்பு இழுத்துட்டு இருகாதீங்க. உங்க லவ்வர் உங்கள ரொம்பவே மிஸ் பன்றாங்க. சீக்கிரமே மீட் பன்ற வழிய பாருங்க.
கன்னி
ரொம்ப நாளா போலாம்னு யோசுட்டு இருந்த இடத்துக்கு போறதுக்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி போகும்போது சுத்தியும் வேடிக்கை பாக்காம உங்க லவ்வர் கூட பேசீட்டே போங்க, நீங்க லவ்வுல இன்னும் ஸ்ட்ராங் ஆக இன்னைக்கு சூப்பரான நாள்.
துலாம்
கல்யாணத்துக்கும் ஓகே சொல்லமாட்டிங்கிற, நல்ல நல்ல வரன்களையும் வேண்டாம் சொல்லுற யாரயாச்சும் லவ் பன்றயானு வீட்டுல நாசூக்கா கேக்கறாங்கனு உங்க ஆள் வந்து சொல்லும்போது, கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஸ்டோரியும் பொன்னியின் செல்வனும் ஒன்னோனு தோனுதுனு சம்மந்தமே இல்லாம சொல்லி அடி வாங்குவீங்க. கொஞ்சம் சீரியஸா இருங்க.
விருச்சிகம்
மொதல்ல தெரியாம கஷ்ட படுத்தீட்டு அப்பறமா சமாதானபடுத்துறது உங்களுக்கு கை வந்த கலையா இருந்தாலும், இன்னைக்கு இந்த வீர விளையாட்டு வேண்டாம். இத மட்டும் ஃபலோ பன்னுங்க இந்த டே சுமாரா ஸ்டார்ட் ஆகி சூப்பரா முடியும். இல்லையினா சேதாரம் உங்க லவ்வுக்குதான். ஆல் த பெஸ்ட்.
தனுசு
மாச கடைசில என்ன செய்யறதுனு தெரியாம யோசுச்சுட்டு இருக்கும்போது லாட்டரி அடுச்சா எப்படி சந்தோஷமா இருக்குமோ அப்படி இருக்கப்போகுது இந்த நாள். உங்களுக்கான சர்ப்ரைஸ் ஆன் த வே. ரொம்பவே சுவாரஸ்யமான நாள்.
மகரம்
மத்தவங்களால அடிக்கடி சண்ட வருது நாம கோயிலுக்கு போயிட்டு வரலாமானு உங்க ஆள் கேக்கும்போது, முருகர் கோயிலுக்கு போலானு சொல்லுவீங்க. ரெடியா இருங்க. இனி அடிக்கடி கோயில் குளம்னு சுத்த வேண்டி வரும்.
கும்பம்
ஏற்கனவே ஒரு ப்ரேக் அப் பாத்தாச்சு, மறுபடியும் நோ லவ்வுனு இருக்காதீங்க. உங்கள நோக்கி ஒரு லவ் கலக்கலா வந்துட்டு இருக்கு. பேசிப்பாத்து எதுனாலும் முடிவு எடுங்க. முன் முடிவு எடுக்காதீங்க. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
மீனம்
வீட்டுல உங்க லவ்வுக்கு நல்லாவே கிரீன் சிக்னல் கிடைக்கற்துக்கான வாய்ப்புகள் அதிகமாவே இருக்கு. நீங்க கொஞ்சம் க்ளையரா பேசுங்க அதுதான் இம்பார்ட்டண்ட். மனசுக்குள்ள இருக்குற சந்தோஷத்த இப்போதைக்கு வெளிய காட்டம இருங்க.