மை டியர் லவ்வர்ஸ்…. எல்லாருக்கும் வணக்கம். இந்த உலகத்துல எத்தனையோ அற்புதமான அதிசயமான விசயங்கள் இருந்தாலும் அதை எல்லாம் நம்மால் பார்க்க முடியும். காற்றைக் கூட புழுதி கலந்து வரும்போது பார்த்துவிடலாம். ஆனால் இதுவரைக்கும் கண்ணால் பார்க்க முடியாத ஒரே அதிசயம் காதல் தான். உங்களில் ஒரு சிலர் கடவுளையும் பார்த்ததில்லை எனச் சொல்லுவதும் நன்றாகவே கேட்கிறது.  இந்த உலகத்தை ரொம்பவும் அன்பா இயக்குகிற  எதிர்பார்ப்பற்ற நம்முடைய காதல் தான் கடவுள் எனத் தோன்றுகிறது சிலருக்கு. நம்மில் பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும் பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது. ஆனால் நம் எல்லோருக்குமே காதல் மேல பெரிய நம்பிக்கை இருக்கும். இந்த நம்பிக்கை கொடுக்கும் தைரியமும், தெம்பும், ப்ரியமும் காதல் புரிந்திட ஒரு நாளுக்கு 24 மணிநேரம் என்பது மாபெரும் பற்றாக்குறையாகத் தான் இருக்கும்.


ஒரு மலையின் உச்சியில் இருந்து ஊற்றெடுத்து வரக்கூடிய ஜுவ நதியைப்போல தான் காதல். அது மலையைக் கடக்க வேண்டும். பாறைகளைக் கடக்க வேண்டும். பள்ளங்களை நிரப்பி நகர வேண்டும். தன்னைச் சார்ந்த அத்தனை ஜீவராசிகளையும் அது அரவணைக்க வேண்டும். பின்னர் தான் கடலைச் சேர முடியும். அந்த உச்சிமலை நதியைப போலத்தான் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் காதலும்.  காதல் தன் மற்றொரு காதலை கரம் பிடிக்க ஏழு மலை கடக்க வேண்டும் ஏழு கடல் கடக்க வேண்டும்.  காதலைச் சேர்வது என்பது என்ன அவ்வளவு சுலபமா என்ன? அது ஒரு தவம். அந்த தவத்தில் போராட்டம் இருக்கும், ஏமாற்றம் இருக்கும், வெற்றி இருக்கும், தோல்வி இருக்கும், அழுகை இருக்கும் இன்னும் பல இன்னல்கள் இருக்கும். இவற்றைக் கடந்தால் தான் காதல் கை கூடும்.  மிஞ்சியிருக்கும் வாழ்வினை பெரும் ஆசையோடு நீங்கள் வாழ்வதோடு மட்டும் இல்லாமல் இந்த பிரபஞ்சத்தையும் உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறீர்கள். உங்களுக்கான இன்றைய லவ் டிப்ஸ்களை, உங்கள் ராசிக்கு ஏற்றவாறு இந்த தொகுப்பில் பார்க்கலாம். 




மேஷம்


எப்போதும் உங்க காதலரோடு பேசிக்கொண்டே இருக்கனும்னு நினைக்குற நீங்க இன்னைக்கு மட்டும் கொஞ்சம் அளவா பேசுங்க. அப்பறம் வீட்டுல மாட்டீட்டு முழிக்காதீங்க.. மொத்தத்துல இன்னைக்கு கொஞ்சம் சூதானமா நடந்துக்காங்க.


ரிஷபம்


போன மாசம் ரிலீஸ் ஆன படத்துக்கு இன்னைக்கு போலானு ப்ளேன் போட்டிருப்பீங்க. ஆனா உங்க ஆபீஸ்ல லீவ் தரமாட்டாங்க இல்லனா அந்த படத்தயே தியேட்டர்ல இருந்து தூக்கியிருப்பாங்க. இதெல்லாம் சரியா இருந்தாலும் உங்களுக்கு தெருஞ்சவங்களும் தியேட்டருக்கு வந்திருப்பாங்க.  ஒரு பேட் டே தான் உங்களுக்கு.


மிதுனம்


காதல்ல எப்பவுமே ஊறி கிடக்கும் உங்களுக்கு. இன்னைக்கும் ஒரு அதிஷ்ட நாள் தான். ஏதேதோ பொய் சொல்லீட்டு அவுட்டிங் போய்ட்டு இருந்த உங்களுக்கு இனி பொய் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ரொம்ப நாளா மனசுல போட்டு நீங்க யோசுச்சுட்டு இருந்த உங்க லவ் மேட்டர இன்னைக்கு வீட்டுல சொல்லிடுங்க. முதல்ல உங்க அம்மாட்ட சொல்லுங்க. இல்லனா அம்மா ஸ்தானத்துல இருக்கறவஙகிட்ட சொல்லுங்க. அவங்கிட்ட கிரீன் சிக்னல் வாங்குனதுக்கு அப்புறம் எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம். தைரியமா போய் தெளிவா பேசுங்க. 




கடகம்


மூனு நாளா சண்ட போட்டுட்டே இருக்கீங்க. கம்முனு இன்னைக்கு நீங்களே போய் மன்னிப்பு கேட்டுடுங்க. விட்டுக்கொடுத்து போறதுதான் வாழ்க்கைக்கு நல்லது. சும்மா போய் சா...ரினு இழுக்காம ரெண்டு மூனு முத்தங்களையும் சேர்த்து கொடுங்க எல்லாம் சரி ஆகிடும்.  ஆல் த பெஸ்ட்.


சிம்மம்


உங்களுக்கு எதுக்கு இத்தனை கோபம். மொதல்ல உங்க கோபத்த குறைங்க அதுக்கு அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்குற டிஸ்டன்ச குறைக்கலாம். தயவு செய்து ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும்னு மறுபடியும் இருக்காதீங்க. அப்பறம் ரொம்ப கஷ்டம் ஆகிடும். 


கன்னி


நீங்க மனசுல சின்ன கீறல் அளவுக்கு கூட தயக்கம் இல்லாம உங்க காதல சொல்லுங்க. யார் பேச்சையும் கேட்காதீங்க, உங்க மனசு சொல்லுறத மட்டும் இன்னைக்கு கேளுங்க. ஆக்ட்சுவலி டு டே ஈஸ் யுவர் டே.


துலாம்


இன்னைக்கு மட்டும் இல்ல இந்த வாரம் முழுக்க உங்களுக்கு நல்ல வாரம் தான். ஜாலியா இருங்க. முடுஞ்சா இன்னைக்கு ஸ்கை ப்ளூ கலர் டிரை பண்ணுங்க. உங்க ரூட் க்ளையரா இருக்கு. 




விருச்சிகம்


உங்களுக்கு இன்னைக்கு என்ன நாள்னு கண்டு பிடிக்கறதுக்குள்ள எனக்கே போதும் போதும்னு ஆகிடுச்சு. நீங்களா எந்த முடிவும் இன்னைக்கு எடுக்காதீங்க. உங்க லவ்வர் சொல்றத மட்டும் கேளுங்க. உங்க அவுட்டிங் விசயத்த மட்டும் உங்க ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லாம போகாதீங்க. அப்பறம் வீட்டுல கூப்ட்டு கேட்டா மாட்டிக்குவீங்க. கவனம்.


தனுசு


உங்களுக்கு எத்தன தடவதான் சொல்றது. எதுலயும் அவசரபடாம இருங்கனு. பேசாம ஒரு நாளஞ்சு நாளைக்கு உங்க மொபைல் ப்ராப்ளம்னு சொல்லிட்டு வாட்ஸ் அப் இன்ஸ்டானு எதுக்குமே போகாம இருங்க. உங்களோட இப்போதைய பிரச்சனைக்கு இதுதான் தீர்வு. இப்பவும் சொல்றேன் தடுமாறாதீங்க அவசரபடாதீங்க. நிதானமா இருங்க.


கும்பம்


நீங்க சரியா பேசுனாலும் உங்க லவ்வர் கொஞ்சம் கரறா பேசுவாங்க. சோ அதுக்காக நீங்க முகத்த தூக்கி வெச்சுக்க வேண்டாம். அவங்ககிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லுங்க உங்க நிலமைய புருஞ்சுப்பாங்க. எங்காவது அவங்க கூப்டாங்கனா போய்ட்டு வாங்க.


மீனம்


ஒரு இளையராஜா பாடல் மாதிரி போய்ட்டு இருந்த உங்க லவ்வுல, யாரோ கண்ணுபட்ட மாதிரி ஒரே மனஸ்தாபங்களா போய்ட்டு இருக்கு. நீங்களா பேசாத வரைக்கும் அது இப்படியே தான் தொடரும். ஒரு நல்ல லவ் சாங்கா உங்க லவ்வருக்கு அனுப்பிட்டு ஒரு ரோஜா எமோஜியும் சேத்து அனுப்புங்க. மீண்டும் உங்கள் காதல் தீபம் நல்லா பிரகாசமா ஒளிரும். வாழ்த்துகள்.