ஆச்சார்யா சாணக்யா என்பவரின் கொள்கைகளை உள்ளடக்கிய புத்தகமாக இருப்பது சாணக்ய நீதி. இந்த சாணக்ய நீதிக்கு ஒரு தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பும், ஒரு தரப்பினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பும் இருந்து வருகின்றது. சாணக்யா நீதி புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கொள்கைகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது, திருமணம் செய்துகொள்ளும் ஆண், ஏழு வகைப் பெண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனத் ஆச்சார்ய சாணக்யா தெரிவித்துள்ளார். சாணக்யா குறிப்பிட்டுள்ள ஏழுவகைப் பெண்கள் யார் யார் என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம். 



  • குட்டைக் கழுத்துப் பெண்கள்: 
    சாணக்யா நீதியில் குறிப்பிட்டுள்ள கொள்கையின்படி, குட்டையான கழுத்தினைக் கொண்ட பெண்கள் ஒரு முடிவினை தாமாக எடுக்காமல், எப்போதும் மற்றவர்களையே சார்ந்து இருப்பார்களாம்.  இப்படியான பெண்களைக் கண்டால், அவர்களைத் தவிர்க்க வேண்டுமாம்.

  • நீளமான கழுத்து கொண்ட பெண்கள்: 
    நான்கு விரல்களுக்கு மேல் கழுத்து நீளம் கொண்ட பெண்களால், அவர்களின் பரம்பரையே அழிவுக்குள்ளாகுமாம். இதனால் இத்தகைய பெண்களை கூடாதாம். 

  • உள்ளங்கையில் குறி உள்ள பெண்கள்: 
    உள்ளங்கையில் பறவை மற்றும் விலங்குபோன்ற குறிகளைக் கொண்ட தன்னைச் சார்ந்தவர்களுக்கு எப்போதும் துக்கத்தையே ஏற்படுத்திக்கொண்டு இருப்பார்களாம். அத்தகைய பெண்ணிடம் இருந்து இயல்பாகவே விலகி இருப்பது நல்லதாம்.

  • பெரிய பற்கள்:
    இயல்பைவிட பெரிய பற்கள் கொண்ட, தடிமனான பற்கள், நீளமாகவும், அகலமாகவும் வெளிப்புறமாக தெரிவதைப்போல் பற்களைக் கொண்ட பெண்களின் வாழ்க்கை எப்போதும் பிரச்னைக்குரியதாக இருப்பதுடன் சோகங்கள் நிறைந்ததாகவே இருக்குமாம். இவ்வகைப் பெண்களால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாதாம். 

  • காதுகளில் முடி: 
    காதுகளில் முடி இருக்கும் பெண்கள் ஆக்ரோஷமான பெண்களாகத்தான் இருப்பார்களாம், மேலும் இவர்களால் வீட்டில் முரண்பாடுகளும் பிரச்சனைகளும் இருந்துகொண்டே இருக்குமாம். 

  • கன்னத்தில் குழி விழும் பெண்:
    கன்னத்தில் குழி விழும் பெண்களின் குணம் நல்ல குணம் என சாணக்ய நீதியில் சொல்லப்படவில்லை. இப்படி இருக்கும்  பெண் மற்றவர்களின் ஈர்ப்பின் மையமாக இயல்பாகவே இருப்பாராம். இதுவே பிரச்னைக்குரியதாம். 


இப்போது இத்தகைய கருத்துக்களை எவரும் நம்புவதில்லை. Body Positivity என்னும் தத்துவமே அனைத்து இடங்களிலும் பேசப்படுகிறது. சாணக்யரை படிக்க நினைத்தால் இக்கட்டுரை உதவும்