ஆவணி மாதம் 1 To 15 ராசி பலன் :
மேஷம் முதல் கடகம் வரை
எனக்கு அன்பான Abp நாடு வாசகர்களே வருகின்ற ஆவணி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்... சிம்மத்தில் சொந்த வீட்டில் பிரவேசிக்கும் சூரியன் 15 நாட்களுக்கு உங்கள் ராசிக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்...
மேஷ ராசி :
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் ஆட்சி வீட்டில் பிரவேசிக்கிறார் ஏற்கனவே கேது அந்த அமர்ந்திருக்க நல்ல ஞானத்தையும் அறிவையும் மற்றவர்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற போதனையும் கொடுத்த இருப்பார்... முருகப்பெருமானின் அருளை பரிபூரணமாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே புத்திரர்கள் வழியில் நல்ல விசேஷமான தகவல்கள் வரும், அவர்கள் வழியில் பெயர் புகழ் கிடைக்கும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு ஏற்ற காலம்... குலதெய்வ வழிபாடு உங்களுக்கு மிக பெரிய சக்தியை கொண்டு வரும்... அதிகமான கடன் இருப்பவர்களுக்கு அடைய வாய்ப்பு உண்டு . வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்படலாம் கவலை வேண்டாம் கோதுமையை அதிகமாக பயன்படுத்துங்கள்.. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு.. அதிர்ஷ்டமான எண் 1,6,9...
ரிஷப ராசி:
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு நாலாம் இடத்தில் சூரியன் ஒரு சரியான வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பவர்களுக்கு இது ஏற்ற காலம்... தாயாரை பிரிந்து இருப்பவர்கள் அவர்களை புரிந்துகொள்ள ஏற்ற காலம்.... குடும்பத்தோடு நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்புண்டு... வண்டி வாகனங்களில் பழுது ஏற்பட்டால் சரி செய்வீர்கள்... இடம் விட்டு இடம் போவது மனதிற்கு அமைதியை கொண்டு வரும்.... காலையிலிருந்து சூரிய நமஸ்காரம் செய்தால் பிடித்திருக்கின்ற தோஷங்கள் விலகும்.... வீட்டு பூஜை அறையில் விநாயகரை வைத்து வழிபடுங்கள் சங்கடங்களை தீர்த்து வைப்பார்.... தொழில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்... ஆனால் தொழில் ரீதியாக புதிய இடங்கள், கடைகள் போன்றவை உங்களுக்கு சாதகமாக அமையும்... அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை... அதிர்ஷ்டமான எண்கள் 2,6,9..
மிதுன ராசி:
அன்பார்ந்த மிதுன ராசி அன்பர்களே தைரியமாக பேசக்கூடிய காலம் வந்துவிட்டது... மற்றவர்களுக்கெல்லாம் சிறப்பாக நடக்கிறது எனக்கு மட்டும் ஏன்?இப்படி என்று சிந்திக்கும் காலம் விரைவில் போகும்.. உங்கள் பேச்சு எல்லா இடத்திலும் மதிப்பை கொண்டு வரும்.. சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்... பின் வாங்கிய காரியங்களில் வெற்றி உண்டாகும் பத்தாம் இடத்தில் இருந்த சனி வக்கிரம் பெற்றதால், புதிய வேலைகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு... வேலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்... எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு சாதிப்பது வெகு தொலைவில் இல்லை.... திருமண பேச்சுக்கான நேரம் தான் இது... பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி போட்ட காரியங்கள் வரைந்து முடிக்கலாம் என்று புறப்படுவீர்கள்...
கடக ராசி :
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே இரண்டாம் வீட்டில் சூரியன் அமர்ந்து பேச்சில் ஒளி கொடுக்கிறார்.... நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த நண்பர்களை சந்திக்க வாய்ப்புண்டு.... குடும்பத்தைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள் கூட தற்பொழுது அவர்களுடன் நேரத்தை செலவிடுவார்கள்.. ரத்த சம்பந்தமான உறவுகள் உங்களை தேடி வரும் அல்லது நீங்கள் தேடிப் போவீர்கள்... இத்தனை நாட்களாக தனிமையில் இருந்த உங்களுக்கு இத்தனை பேர் என்னுடன் இருக்கிறார்களா என்ற சூழ்நிலையை உருவாக்கும் இரண்டாம் இட சூரியன்... சனி வக்கிரம் அடைந்து அஷ்டமத்தில் வருவதால் பயப்படத் தேவையில்லை . நீண்ட தூரம் பிரயாணங்களை மேற்கொள்வதன் மூலம் சனி கொடுக்கக்கூடிய தொல்லையிலிருந்தும் 12ஆம் இடத்தில் இருக்கக்கூடிய குருவின் ஆதிக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.... இயற்கையாகவே உங்களுக்கு பயணங்கள் அமைந்து விட்டதென்றால் பரவாயில்லை... பிடித்த அம்மனை வழிபடுங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெறுங்கள் அனுகூலமான நிறம் மஞ்சள் அதிர்ஷ்டமான எண்கள் 1,2,5....