ஒவ்வொருவருடைய ஜாதகமும் தனித்துவம் வாய்ந்தது. பலவிதமான யோகங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் காணப்பட்டாலும்  அவை தசா புத்தியாக வருகின்ற வரை அந்த யோகங்கள் பெரிதாக வேலை செய்யாது என்பதை உண்மை. இது மாதிரியான சந்தர்ப்பங்களில் கர்மா என்ற ஒன்றைத் தவிர வேறு எதையும் நாம் குறிப்பிட்டு கூற முடியாது  கடவுளின் அருளால் நமக்கு இருக்கும் யோகங்கள் தசா புத்திகளாக வேலை செய்து நமக்கு அவை பலிக்க வேண்டும். சரி சூரியனோடு மற்ற கிரகங்கள் சேரும்போது என்ன மாதிரியான யோகங்களை கொண்டு வருகிறது என்பதை பார்க்கலாம்.


சூரியன்- புதன் :
  


ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருந்தால் அவர் அறிவாற்றல் நிறைந்தவராகவும்   எளிதில் தீவிரமாக பேசுபவராகவும் வலிமை பொருந்தியவராகவும்  உடல் வலிமை பெற்றவராகவும் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமை பெற்றவராகவும்,  தீர்க்காயுளை உடையவராகவும் இருப்பார்.லக்னத்திற்கு நான்கில் சூரியனும் புதனும் சேர்ந்திருந்தால் அவர் ஒரு அரசனைப் போல வாழ்பவர் ஆகவும் செல்வாக்கு புகழும் கொண்டவராகவும், காவியங்களை கற்றவர் ஆகவும் ஏராளமான செல்வங்கள் படைத்தவராகவும்  எப்போதும் உண்மை பேசுபவராகவும் இருப்பார்.


சூரியன் சந்திரன் :


ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்திருந்தால் அவர் மூர்கத்தனமான குணங்களை பெற்றவராகவும்,  எவருக்கும் உதவி செய்யாதவராகவும்   எதிரிகளை வெல்பவர் ஆகவும்,     மற்றவர்களை கேலி செய்வதில் மகிழ்ச்சி அடைப்பவராகவும் இருப்பார்.  சூரியன் சந்திரன் ஒன்றாக இருக்கும் பட்சத்தில்  தாயார் வர்க்கத்தின் மூலமாக மேன்மையும்  அந்த ஜாதகரின் பெண் வர்க்கத்தார்  அரசு ஊழியர் ஆகவோ அல்லது  அரசு தொடர்பான சன்மானங்களை பெறுபவராகவோ இருப்பார்  அரசு அதிகார பதவிகளில் கூட அவர்கள் இருக்க வாய்ப்புண்டு.


சூரியன் குரு :


 ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் சூரியனும் குருவும் அமர்ந்திருந்தால் அவர் நற்குணங்களை பெற்றவராகவும் பலருக்கு நல்ல யோசனைகளை சொல்பவராகவும் வலிமை நிறைந்தவராகவும் பல வித்தைகளை கற்றவராகவும் திரண்ட செல்வத்துடன் சுகபோக வாழ்க்கை வாழ்பவர் ஆகவும் இருப்பார்.  மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனும் குருவும் எந்த ஸ்தானத்தில் சேர்ந்திருந்தாலும் அவர் எல்லோரிடமும் அன்பாக பழகுபவராகவும் மற்றவர்களுக்கு நல்ல யோசனைகளை சொல்பவர் ஆகவும் சாஸ்திரங்களை கற்றவர் ஆகவும் பூர்வீக சொத்துக்களை அனுபவிப்பவர் ஆகவும் இருப்பார்.


சூரியன் சுக்கிரன் சேர்க்கை :


 ஒருவருடைய ஜாதகத்தில் எந்த ஸ்தானத்திலும் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் அவர் இசைக்கருவிகளை வாசிக்க தெரிந்தவர் ஆகவும் அறிவாற்றல் நிறைந்தவராகவும் கண் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர் ஆகவும் பெண்களுடன் நட்பு கொண்டு நெருங்கி பழகுபவராகவும் இருப்பார்  ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் அவர் நண்பர்களை பகைத்துக் கொள்பவர் ஆகவும்  அடிக்கடி துன்பங்களை சந்திப்பவராகவும் இருப்பார் சில சமயங்களில் மனைவியைப் பிரிந்து வாழ்பவர் ஆகவும் கூட இருக்கக்கூடும்  அதேபோல லக்னத்திற்கு எட்டு அல்லது ஒன்பதாம் இடத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் அவருக்கு செல்வமும் செல்வாக்கும் புகழும் நிறைந்த வாழ்க்கையும் அமையும்.  லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் அவர் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பவராகவும் நிறைந்த செல்வம் கொண்டவராகவும் நல்ல யோசனைகளை சொல்பவர் ஆகவும் சாஸ்திரங்களை கற்றவர் ஆகவும் வாகன யோகம் கொண்டவராகவும் இருப்பார்.


சூரியன் செவ்வாய் சேர்க்கை :


 பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் எந்த ஸ்தானத்திலும் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் அவர் மிகுந்த செல்வாக்கும் புகழும் கொண்டவராகவும்,   தாராளமாக பொய் பேசுபவராகவும்,  வலிமை நிறைந்தவராகவும்,  தைரியமும் துணிச்சலும் நிறைந்தவராகவும்,  மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்க தயங்காதவர் ஆகவும் தந்திரமாக நடந்து கொள்பவர் ஆகவும் இருப்பார்.  மேலும்  சில ஜோதிட நூல்கள் ஒருவருடைய ஜாதகத்தில் எந்த ஸ்தானத்திலும் செவ்வாயும்  சந்திரனும் சேர்ந்து இருந்தால் அவர் சண்டை போடுவதில் வல்லவராகவும் துணிச்சல் ஆகவும் தைரியமாகவும் செயல்படுபவராகவும் ரத்த சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர் ஆகவும் தான தர்மம் செய்ய மனம் இல்லாதவராகவும் சிற்பக்கலையில் வல்லவராகவும் இருப்பார்.


 சூரியன் சனி சேர்க்கை :


ஒருவருடைய ஜாதகத்தில் எந்த ஸ்தானத்திலும் சூரியனும் சனியும் சேர்ந்திருந்தால் அவர் பல வகையான பொருள்களை தயாரிப்பதில் வல்லவராகவும்,  தாராளமாக தான தர்மங்களை செய்பவராகவும்,   நற்குணங்களை கொண்டவராகவும்,   மகிழ்ச்சியுடன் வாழும் மனைவி மக்களை பெற்றவராகவும் ஒழுக்கத்தை பற்றி அதிகமாக கவலை படாதவராகவும் இருப்பார். 


 இப்படி ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனின் ஆதிக்கம் கொண்டு சூரியனுடன் மற்ற கிரகங்கள் இணையும் சமயத்தில் அவை யோகங்களை கொண்டு வரும் நல்ல கிரகமானால் நிச்சயமாக ஜாதகருக்கு வலிமையான பலன்களையும் தீமையான கிரகமானால் ஜாதகருக்கு மேன்மை இல்லாத பலன்களையும் கொடுக்கும்.   சூரியன் ஒளி பொருந்திய கிரகம் அதனுடன் மற்ற கிரகங்களின் இயல்புகள் சேரும் போது அந்த ஒளி மற்ற கிரகங்களின் ஒளியை கிரகித்து ஜாதகருக்கு வழங்கும் உதாரணமாக புதன் பேச்சாற்றல் என்றால் புதனும் சூரியனும் சேர்ந்த ஜாதகர்கள் பேச்சில் வல்லவர்களாக பேச்சாளையே அவர்கள் உயர் பவராக இருப்பார். 


 சுக்கிரன் கலைத்துறையை சார்ந்த கிரகம் என்று வைத்துக்கொண்டால் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்த ஜாதகங்கள் நிச்சயமாக கலையில் வல்லவர்களாக அவர்களை திகழ வைக்கும்  ஒருவேளை சுக்கிரன் மேஷம் அல்லது விருச்சகம் போன்ற ராசியில் இருக்குமானால் அதனுடன் சூரியன் சேருமானால்  சுக்கிரன் சூரியன் இணைவு மேசத்திலோ அல்லது விருச்சகத்திலோ இருந்தால்  இசைக்கருவியில் மிருதங்கம் தபேலா போன்ற தோல் கருவிகளை வாசிக்கக்கூடிய சிறந்த கலைஞனாக விளங்க வாய்ப்பு உண்டு.