ஜூன் மாதம்  14 நாட்களுக்கு சூரியன் ரிஷபத்திலும்  மீதி இருக்கும் 16 நாட்களுக்கு  மிதுனத்திலும்  சூரியன் வாசம் செய்யப் போகிறார். இந்த காலகட்டத்தில்  12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பது  பற்றி தெளிவான ஒரு அலசலை பார்ப்போம் .


மேஷ ராசி


அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு  இரண்டாம் வீட்டிலும் மூன்றாம் வீட்டிலும் சூரியன் வாசம் செய்வது மிக சிறப்பான முன்னேற்றங்களை கொண்டு வரும் குறிப்பாக  குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிட்டும், முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்வீர்கள்  தன வரவு தாராளமாக இருக்கும் . உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கிடைக்கும் .


ரிஷப ராசி 


அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு சூரியன் லக்னத்திலும்  இரண்டாம் வீட்டிலும் மாறி மாறி வாசம் செய்யப் போகிறார் ஏற்கனவே சுக்கிரன் ராசியில் ஆட்சி பெறுவது மிகப்பெரிய தன்னம்பிக்கையும் தைரியத்தையும் உங்களுக்கு கொண்டு வரவும் . மற்றவர்களால் புகழப்படுவீர்கள் மதிக்கப்படுவீர்கள் எதிரியை வெல்லக்கூடிய சக்தி கிடைக்கும் புதிய இடம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிட்டும் பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனமாக மாற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும் .


மிதுன ராசி 


அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே, ஜூன் மாத பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்வது தைரியத்தை கொண்டு வரும் . பூர்வீக சொத்து தொடர்பான வில்லங்கங்கள் அகலம் வாழ்க்கையில் ஏற்றமான பாதை தென்படும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் தொழில் வியாபாரத்தில் வெற்றி உண்டாகும் மற்றவர்களின் முன்பாக உங்களுக்கு கவுரவம் உயரும் . எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் போன்ற சாதனங்கள் மூலமாக  லாபம் உண்டு . ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான எதிர்காலம் உண்டு .


கடக ராசி


அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு நல்ல காலம் பிறந்து விட்டது சூரியன் பதினொன்றாம் வீட்டிலும் ஜூன் மாத பிற்பகுதியில் பனிரெண்டாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதாக குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவீர்கள். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். பூர்வீக சொத்து தொடர்பான வில்லங்கங்கள் அகலும்.  கலைத்துறையினருக்கு  ஏற்றமான காலகட்டம் சினிமா நாடகம் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல உகந்த காலகட்டம். புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். சற்று கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.  


சிம்ம ராசி


அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு 11 ஆம் வீட்டில் ஜூன் மாத பிற்பகுதியில் சூரியன் பிரவேசிக்கப் போகிறார். ராசியின் 11ல் சூரியன் வருவதால் நிச்சயமாக உங்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் வியாபாரம் மூலம் அனுகூலம் உண்டு.எதிரிகளின் தொல்லைகள் இருந்தாலும் அவற்றை முறியடிக்க வாய்ப்பு உண்டு.  சூரியன் பதினொன்றாம் வீட்டில் இருப்பது தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொண்டுவரும். தொழில் ரீதியான சில சிக்கல்கள் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நீங்கள் முன்னேறுவீர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.


 கன்னி ராசி


அன்பார்ந்த கன்னி ராசி  வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டிலும் பத்தாம் வீட்டிலும் சூரியன் பிரவேசிக்க போகிறார். ஆன்மீக சுற்றுலா சென்று வர வாய்ப்பு உண்டு. வெளிநாடு வெள்ளி தேசம் போன்றவை சாதகமாக  அமையும். உங்களை மற்றவர்கள் குறை கூறினாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் முன்னோக்கி செல்வீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் . மாதத்தின் முதல் பகுதியில் சற்று இறக்கமான பலன்களை சந்தித்தாலும் மாதத்தின் பிற்பகுதியில் ஏற்றமான பலன்களை நடைபெறும் . தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது .


 துலாம் ராசி


அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே, உங்களுடைய  ராசிக்கு பல ஏற்றமான முன்னேற்றமான காலகட்டம். இது எட்டாம் பாவத்தின் குரு அமர்ந்து இருந்தாலும் உங்களுக்கு எட்டாம் பாவத்தில் இருக்கும் சூரியன் நன்மையே கொண்டு  வருவார். காரணம் பதினோராம் அதிபதி எட்டாம் பாவத்தில் மறைவதால் அங்கு இருக்கும் குற்றங்கள் இன்றி உங்களுக்கு நன்மையே பிறக்கும் . குரு பெயர்ச்சி அஸ்தம குருவாக இருப்பதால் மனது சற்று தடுமாற்றமாக இருக்கும்.  எதை செய்தாலும் அது சற்று  தாமதமாக இருப்பது போல தோன்றினாலும்  சூரியனின்  பெயர்ச்சி  உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.


விருச்சக ராசி 


 அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஏழாம் பாவத்தில் சூரியனும் மாதத்தின் பிற்பகுதியில் எட்டாம் ராசிக்கும் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார். பத்தாம் அதிபதி ஏழாம் வீட்டில் இருப்பதால் அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டு. போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். ஏழாம் பாவத்தில் இருக்கும் குரு பகவான் புதிய பொலிவையும் திருமண வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்  கொடுப்பார் . உங்களைப் பற்றி குறை கூறியவர்கள் எல்லாம் உங்களுடைய திறமையை மதித்து உங்களைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். 


 தனுசு ராசி 


அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே, ஆறாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருப்பது சற்று கடினமான காரியங்களை ஏற்படுத்தினாலும்  அதற்கான தீர்வை கூறிய பெயர்ச்சியின் மூலமாக உனக்கு கிடைக்கப் போகின்றது. கடன் நீங்கள் வாங்கியிருக்கலாம். அந்த கடனை அடைப்பதற்கான வழி வகைகள் திறக்கும். அதே போல எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். தாங்களாகவே முன்வந்து உங்களுக்கு எதிரிகளை நன்மை செய்யக்கூடிய காலமாக இந்த காலகட்டம் அமையும் . வேலையில் இரட்டிப்பு லாபம் உண்டு. தன வருவாய் உயரும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் .


 மகர ராசி


அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே, ஏற்கனவே குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் பாவத்தில் அமர்ந்து நல்ல ஞானத்தையும் அறிவையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். அதேபோல சூரியனும் ஜூன் மாதம் ஆரம்பத்தில் உங்களுக்கு ஐந்தாம் பாவத்தில் அமர  நீங்கள் இருக்கும் இடத்தில் புகழடைவீர்கள். உங்களுடைய எண்ணத்தைக் கேட்டு அடுத்தவர்கள் நடக்கும்படி இருக்கும். அதேபோல ஆறாம் வீட்டில்  பிரவேசிக்கும் சூரியன் உங்களுக்கு போட்டி தேர்வுகளில் வெற்றியையும் அரசாங்க பதவி அரசாங்க ஆதாயம் போன்றவற்றைக் கொடுப்பார். இந்த மாதம் உங்களுக்கு பொற்காலமாக அமையும்.


 கும்ப ராசி 


அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு  நான்காம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால்  பாண்டவர்கள் நாளிலே வனவாசம் போனதும் என்ற பாடலின் அடிப்படையில் இருந்த இடத்திலிருந்து நீங்கள் பெயர்ச்சியாக்கி வேறு இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இடம் மாற்றம் தொழில்  மாற்றத்தில்  சற்று கவனமாக இருங்கள். தொழிலில் புதிய லாபங்கள் கிடைக்கும். தொழிலில்  இரட்டிப்பு  லாபம்  உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் சூரியன் உங்கள் வீட்டில் ஐந்தாம் பாவத்தின் பிரவேசிப்பதால் நிச்சயமாக நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும். அடுத்தவர்களை புரிந்து கொள்வதில் ஒரு வலுவான  தன்மை ஏற்படும் .


மீன ராசி  


அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு  மாதத்தின் முன்பகுதியில் மூன்றாம் வீட்டிலும் மாதத்தின் பின்பகுதியில் நான்காம் வீட்டிலும் சூரியன் பிரவேசிக்க போகிறார். மீன ராசிக்கு ஆறாம் அதிபதி மூன்றாம் வீட்டில் பிரவேசிப்பது தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் . புகழ்,கௌரவம்,  உயரும் . புதிதாக இடம் வாங்கி அதில் வீடு கட்ட ஆரம்பிக்கலாம் . வங்கி கணக்கில் சேமிப்பு உண்டாகும் . எதிரிகளைக் கண்டு அஞ்சாமல் அவர்களை எதிர்த்து நின்று வெற்றி கொள்வீர்கள் . கலைத்துறையினருக்கு இது ஒரு ஏற்றமான காலகட்டம். புதிய வாய்ப்புகள் முயற்சிகளில் வெற்றி போன்றவை நடக்கும் . சனிக்கிழமை இது ஒரு ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வர சங்கடங்கள் விலகும் .