Aavani Month Rasipalan: ரிஷப ராசிக்காரர்களே, ஆவணி மாதம் என்ன பலனை கொடுக்கும் தெரியுமா?

Aavani Month Rasipalan: அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே, இந்த ஆவணி மாதம் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.

Continues below advertisement

ரிஷப ராசி - ஆவணி மாத ராசி பலன்:

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே, இந்த ஆவணி மாதம் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.  சூரியன்  உங்கள் ராசியில் இருந்து  நான்காவது வீடு  நான்கில்  சூரியன்  ஆட்சி  பெற்று  உங்கள்  எதிர்காலத்தை எப்படி சிறப்பாக போகிறார்  என்பதை தெரிந்து கொள்வோம்...

Continues below advertisement

 ரிஷப ராசி பொருத்தவரை அதிகப்படியான புத்திசாலி நீங்கள். உங்களைக் கேட்டு மற்றவர்கள் முடிவு எடுப்பார்.  நிச்சயமாக அவர்கள் செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.  சூரியன் உங்கள் இருப்பிடத்தை தேடி வரும். இந்த ஆவணி மாதத்தில்  முதலில் கடன்கள் அடைப்பதற்கான வழி வகைகள் ஏற்படும். ஆறாம் அதிபதி  சுக்கிரன் ராசி துலாம்  அதற்கு பதினோராம் அதிபதி  சூரியன்  ஆறாம் வீட்டிற்கு பதினோராம் வீட்டில் ஆட்சி பெறுவது  முழுவதுமான கடன்களை அடைக்கும்.  சிலருக்கு  அடுத்தது என்ன செய்வதென்றே தெரியாத அளவிற்கு பிரச்சனைகள் இருக்கும் அல்லவா அப்படியான சூழ்நிலையிலும் சூரியன் உங்களை காப்பாற்றுவார். 

சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது

 காலையில் எழுந்தவுடன்  வெளியில் சென்று சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. முறைப்படியான நமஸ்காரம் செய்ய தெரியவில்லை என்றாலும்  கண்களை மூடிக்கொண்டு  சூரியன் இருக்கும் திசையை நோக்கி உங்கள் முகத்தை வைத்து மனதார பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். நாலாம் இடம் சிறப்பாக அமையும். நண்பர்கள் மத்தியில் நீங்கள் பிரபலமாக விளங்குவீர்கள். நிலம் வீடு மனை தொடர்பாக   ரிஷப ராசியினர் யாரேனும் வழக்குகள் இருந்தால்  அதில் வெற்றி பெறுவீர்கள்.

உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் விலகி நன்மை பெருகும் காலகட்டம். உற்றார் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். நீண்ட நாட்களாக  உங்கள் வாழ்க்கை துணைக்கு வேலை சரியாக அமையவில்லை என்று ஏக்கமாக இருப்பவர்களுக்கு  தற்போது ஆவணி மாதம் சிறந்த மாதம். உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியன் ஆட்சி  அரசு தொடர்பான வேலை கூட  நன்றாக அமையலாம்.   கவலைகள் விலகி சந்தோஷங்கள் பெருகும். 

இரட்டிப்பு வருமானம் வரலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும்.   ஏற்கனவே வீடு கட்டி இருப்பவர்கள்  மேலும் கட்டிடங்களை எழுப்ப வேண்டும் அல்லது புதியதாக தளம் போட வேண்டும். புதிய அறை கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இது ஏற்றமான காலகட்டம்.  மொத்தத்தில் நான்காம் இடத்து சூரியன் உங்களுக்கு சவுகரியங்களையும் சுகங்களையும் அளித்தரப் போகிறார். தாயாரின் உடல் நிலையும் சீராகும் வாழ்த்துக்கள் வணக்கம்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola