மகர ராசி - ஆவணி மாத ராசி பலன்:
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே, உங்களுக்கு இந்த ஆவணி மாத ராசி பலன் எப்படி இருக்க போகிறது. மகரத்திற்கு அஷ்டமத்தில் அதாவது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சூரியன் இருக்கிறார். இவ்வளவு நாள் உங்களைப் பற்றி யார் என்ன பேசுகிறார்கள்? உங்களுக்கு பின்பாக என்ன நடைபெறுகிறது என்ன சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்றெல்லாம் தெரியாமல் இருந்தது அல்லவா தற்போது நீங்கள் வேலைக்கு சென்றாலே போதும் அனைத்தும் உங்களுக்கு பிடிமானமாக கைக்கு வரும். எட்டாம் இடம் என்பது பத்தாம் இடத்திற்கு பதினோராம் இடம் அப்படி என்றால் புதிய வேலை அமையும். பழைய வேலையில் பெரிய திருப்தி இல்லாதவர்கள் கூட புதிய வேலையில் சிறப்பாய் இருக்கப் போகிறார்கள்.
சனியின் வீடு மகரம். ஓய்வறியாமல் உழைப்பவர் நீங்கள். ஆகையால் ஒரு நிமிடம் உங்களால் தரையில் அமர முடியாது காலில் சக்கரம் கட்டிக் கொண்டதைப் போல ஓடிக்கொண்டே இருப்பீர். இப்படி நீங்கள் செல்லும் சமயத்தில் உடல் நிலையிலும் அக்கறை தேவை அல்லவா அப்படி என்றால் சற்று ஓய்வெடுங்கள். உடல் நிலையில் அக்கறை செலுத்துங்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறக்கூடிய காலகட்டம்.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை முன்பு விட அதிகமாக இருக்கும்:
வரவு செலவு செம்மையாக இருக்கிறது. கேட்கின்ற பணம் பெரிதாக கிடைக்கவில்லை என்று ஏக்கத்தோடு இருப்பீர்கள் ஆனால் வியாபாரத்தில் இருந்தால் அடுத்தவர்கள் மூலம் அதிகப்படியான பணம் வரும். கடைக்கு நிறைய வாடிக்கையாளர் வருவார்கள் ஏழாம் இடத்திற்கு இரண்டாம் இடம் தானே எட்டாம் இடம் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்களிடத்தில் கொடுத்து விட்டுப் போவார்கள். கடைக்கு வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகமாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நீங்கள் ஏதேனும் பொருளை தயாரித்து அதை விற்பனை செய்ய முயன்றால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை முன்பு விட அதிகமாக இருக்கும். எட்டாம் இடம் என்பது யாருக்குமே தெரியாத ஒரு இடம். ஆயுள் எந்த மனிதனுக்கும் தான் இப்போது இறக்கப் போகிறோம் என்பது தெரியாது. அதே லெட்டாகூடம் என்பது அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத ஒரு இடம். அங்கே சூரியன் அமர்ந்திருக்கும் போது நீங்கள் ஒரு தீர்க்கதரிசியாகவே கூட மாறிவிடுவீர்கள்.
சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள்:
அடுத்து உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது? யார் உங்களைப் பற்றி என்ன பேசுகிறார்கள்? அடுத்து உங்களுக்கு வேலையில் ப்ரொமோஷன் கிடைக்கப் போகிறதா? இல்லையா? என்றெல்லாம் உங்களுக்கு நடப்பதை கணிக்க கூடிய சக்தி ஏற்பட்டவர் திடீரென்று துவார்த்து உறவினர் ஒருவர் நிலத்தை விற்றேன். பணம் வந்தது இந்த அமைத்துக் கொள் என்றெல்லாம் கொடுத்து விட்டு செல்ல வாய்ப்பு உண்டு இப்படியாக அடுத்தவர்களில் பணம் தாராளமாக கையில் கிடைப்பதால் செலவும் அதிகமாகும். சுபச் செலவுகள் அதிகமாகும் பட்சத்தில் அதை கட்டுப்படுத்துவதற்கான நியாயமான சிந்தனையில் ஈடுபடுங்கள்.
வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் அதிகப்படியான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்று நீண்ட நாட்களாக இருப்பவர்களுக்கு தற்போது விசா கிடைக்கக்கூடிய காலகட்டம். நீங்கள் தூர தேச பிரயாணம் மேற்கொள்வதற்கான சிறந்த நேரம் எது அப்படி போகும் பட்சத்தில் உங்களுக்கு தேவையான அனைத்தும் நன்மையாகவே நடைபெறும்... நீங்கள் சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள் கஷ்டங்கள் விலகி சந்தோஷம் கிடைக்கும்.