நாம் வசிக்கும் வீட்டில் எப்பொழுதும் பாசிட்டிவ் என்ர்ஜியுடன் இருக்க வேண்டும் என்றால், வீட்டைச்சுத்தமாக வைத்திருப்பது, காற்றோட்டத்தை அதிகப்படுத்துவது, நமக்கு பிடித்தச் சிலைகளை வைப்பது போன்ற 7 குறிப்புகளைப் பின்பற்றினாலே போதும் என நம்பப்படுகிறது


நமக்கென்று ஒரு வீடு நிச்சயம் இருக்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருக்கும். ஆனால் வீட்டின் சூழல் ஒருவரின் ஆரோக்கியமான மனதுக்கும், உடலுக்கு ஒரு அடித்தளத்தினை உருவாக்க உதவுகிறது. இதற்காகத்தான் இந்தியாவின் வேத அமைப்புகளில் ஒன்றான வாஸ்து சாஸ்திரத்தினை பின்பற்றி அனைவரும் வீட்டினைக் கட்டுவார்கள். சமஸ்கிருதத்தில் வாஸ்து என்ற சொல்லுக்கு 'குடியிருப்பு' என்று பொருள். அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செல்வம் பெற, ஒருவர் தங்கள் வீடுகளை கட்டும் போது வாஸ்துவின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் நல்லது என்று நம்பப்படுகிறது.



எனவே வீடுகளைக்கட்டுவதற்கு முன்பாக அல்லது கட்டிய பிறகு வாஸ்து சாஸ்திரத்தினை நிச்சயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நாம் என்னென்ன முறைகளை பின்பற்றினால் எப்பொழுதும் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும் என நம்பி பலரும் ஃபாலோ செய்துவருகிறார்கள். 


 வீட்டினை தூய்மையாக வைத்தல்:  வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜிகளை வெளியேற்றுவதற்கு வீட்டின் வாசல் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். நம் வீட்டிற்கு நுழையும்பொழுது பாசிட்டிவ் எனர்ஜியுடன் செல்வதற்கு உங்களது வீட்டின் வாசலை அடிக்கடி சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.


காற்றோடத்தினை உறுதிப்படுத்துவது: நம்முடைய வீடு நான்கு புறமும் நல்ல காற்றோடத்துடன் இருக்க வேண்டும். இதற்காகத் தான் நாம் வீடு கட்டும் பொழுதே வாஸ்து முறைப்படி எந்தெந்த இடங்களில் ஜன்னல்கள் வைப்பது என்பது முடிவு செய்வார்கள். எனவே எதிர்மறை உணர்வினை வெளிப்படுத்துவதற்கு நல்ல காற்றோட்டம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


உப்பினை பயன்படுத்துதல்: ஒவ்வொருவரின் வீட்டிலும் வழக்கமாக திருஷ்டிக்காக தினமும் இரவில் தண்ணீரில் உப்பினைப்போட்டு வைத்து அதனை காலையில் வெளியில் ஊற்றுவார்கள். இதே போன்று பாசிட்டிவ் எனர்ஜி கிடைப்பதற்கு வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு கிண்ணத்தில் கடல் உப்பினை வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுவதை சிலர் நம்பிக்கையுடன் பின்பற்றி வருகிறார்கள்.


சிலைகளை வைப்பது: வீட்டில் நமக்குப்பிடித்த மத சிலைகள், படங்கள் மற்றும் சின்னங்கள் வைத்திருந்தால் அதனைப்பார்க்கும் பொழுது பாசிடிவ் எனர்ஜி ஏற்படுவதாக பலரும் நம்புகிறார்கள்


எலுமிச்சை உபயோகித்தல்: தண்ணீரில் எலுமிச்சையை போட்டு வைக்கவேண்டும். இதோடு இதனை வாரத்தில் ஏதாவது ஒரு நாள் அல்லது சனிக்கிழமைகளில் தண்ணீரினை மாற்றியும் பயன்படுத்தி நம்பிக்கை கொள்கிறார்கள்.


விளக்கு ஏற்றுதல் : நம்முடைய வீட்டில் தினமும் விளக்கு ஏற்றுவது நிச்சயம் மனதில் ஒரு நிம்மதியினைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. எனவே தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் நல்ல வாசனைத்தரக்கூடிய ஊதிப்பத்திகள், மண் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியினை ஏற்றி வைக்கிறார்கள். இவை வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி பாசிட்டிவ் வைப்ரேசனை நமக்கு அளிக்கும் என நம்பப்படுகிறது



மேலும் நம் வீட்டு வாசலின் வெளிப்புறத்தினை எதிர்க்கொள்ளும் முகப்பில் ஒரு கண்ணாடியினை வைப்பதும் நல்ல பலனளிக்கும் என நம்பப்படுகிறது.