அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே கர்ஜனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த 2025 என்ன மாதிரியான பலன்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை பார்க்கலாம். கடந்த காலங்களில் வேலையில் மாற்றம், தொழிலில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை, சிலருக்கு வேலை தொடர்பான சிக்கல்கள் கூட ஏற்பட்டு இருக்கலாம். அதே சமயத்தில் குடும்பத்தோடு நேரம் செலவிடுவது, உறவினரோடு ஒரு இணக்கமான போக்கு போன்றவையும் தடைபட்டு இருக்க வாய்ப்புண்டு.
குரு பெயர்ச்சி:
குருபகவான் பிப்ரவரி 7ம் தேதி வரை உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டில் பயணிக்கிறார். நல்ல இடம் என்றாலும் பிப்ரவரி ஏழுக்கு பிறகு உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம்... ஏற்கனவே அப்படியான சூழ்நிலையிலும் நீங்கள் இருக்கலாம். கவலை வேண்டாம் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பெரிய வாய்ப்புகளும். மற்றவர்களிடத்திலிருந்து பாராட்டுகளும் கிடைக்கப் போகிறது.
புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நீங்கள் புதிய காரியங்களில் ஈடுபட்டால், அது நிச்சயமாக வெற்றியை கொடுக்கும். சிம்ம ராசிக்கு தற்போது தேவை எல்லாம் நல்ல வருமானம் மட்டுமே. மே மாதத்திற்கு பிறகு பெயர்ச்சியாகும் குரு பகவான் உங்களுக்கு மிக சிறந்த யோகத்தையும் வருமானத்தையும் கொண்டு வந்து சேர்க்க போகிறார். லாப ஸ்தானத்தில் அமரும் குரு உங்களுக்கு கேட்டதையும் கொடுப்பார், கேட்காததையும் கொடுப்பார். பண வரவினால் உங்களுடைய சேமிப்பு நிச்சயமாக உயரும். உங்களை குறித்து ஏளனமாக பேசியவர்கள் கூட உங்களுடைய சாதனைகளை கண்டு நிச்சியம் பிரமிப்பார்கள். புதியதொரு காரியங்களை தொடங்கி அதன் மூலம் நீங்கள் யார் என்பதை வெளி உலகத்திற்கு காட்டுவீர்கள். ஐந்தாம் அதிபதி 11ஆம் வீட்டில் அமர்வது புத்தி கூர்மையை பயன்படுத்தி மிகப்பெரிய சாதனைகளை செய்வது காட்டும்..
எட்டாம் அதிபதியும் 11 ஆம் வீட்டிற்கு வருவது திடீர் அதிர்ஷ்டத்தையும் தன வரவையும் உண்டாக்கும். யாரோ சம்பாதித்து சேர்த்து வைத்தது எல்லாம் ஒருவரின் கைக்கு வரும் அல்லவா? அப்படிப்பட்ட இடம்தான் எட்டு பதினொன்றாம் அதிபதிகளில் தொடர்பு. விபரீதமான ராஜயோகத்தை கொடுக்க கூடிய இப்படி ஒரு தொடர்பின் மூலம் கமிஷன் பெற்றுக்கொண்டு லாபம் பார்க்க விரும்புவர்களுக்கு இது ஒரு நல்ல காலம் தான்.
உங்களின் மூன்றாம் வீட்டை குரு பார்ப்பதால் எடுக்கின்ற காரியங்களில் ஜெயம் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளோடு இணக்கமான சூழல் உருவாகும். ஏழாம் நாட்டை குரு பார்ப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். ஏழாம் பார்வையாக ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் குழந்தை பேரு உண்டாகும்... நீண்ட நாள் காத்திருக்கின்ற சுப காரியங்களும் நடந்திரும்.
ராகு கேது பெயர்ச்சி:
சிம்ம ராசியை பொறுத்தவரை கேது இரண்டாம் இடத்திலும் ராகு எட்டாம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார். இது பெரிய வலுவான அமைப்பு இல்லை என்றாலும், குடும்பம் தொடர்பான சில ஏற்றத்தாழ்வுகளை கொடுத்து பின்னர் சரி செய்திருப்பார். தற்போது ராகு கேது எங்கே பெயர்ச்சியாகுகிறார்கள், உங்களுடைய ராசிக்கு லக்னத்தில் மற்றும் ஏழாம் இடத்தில் வாழ்க்கை துணை தொடர்பான சிறு சங்கடங்களை கொடுத்தாலும் பெரிய அளவிற்கு பாதிப்பை உண்டாக்க மாட்டார்.
ஆன்மீகத்தில் மனம் சென்றால் அதை அப்படியே விட்டு விடுங்கள். காரணம் பக்தி உங்களை சர்வ பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்ற போகிறது. உடல் ரீதியான பிரச்சனைகளிலிருந்து மருத்துவத்தின் மூலம் தீர்வு ஏற்படக்கூடிய காலகட்டம். உடலில் என்ன சிக்கல் இருக்கிறது என்று தெரியவில்லை என்று எண்ணியிருப்பவர்களுக்கு ராகு கேதுக்கள் அறுவை சிகிச்சை மூலமாக நல்ல தீர்வுகளை கொடுப்பார்கள்.
செவ்வாயின் பலம்:
செவ்வாய் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் அமர்ந்து நீச்சகதியில் நல்ல ராஜயோகத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். வருடத்தின் பாதி வரை செவ்வாய் 12ஆம் வீட்டில் அமர்ந்து கஷ்டங்களைக் கொண்டு வந்தாலும், வருடத்தின் பிற்பகுதியில் ராசியிலேயே அமர்ந்து பெரிய மாற்றத்தையும் நல்ல சக்தியையும் கொடுக்கப் போகிறார். எதிர்பார்த்து இருந்த நல்ல வேலை உங்களுக்கு அமையும். வீடு மனை வாகனம் போன்றவை உங்களுக்கு சாதகமாக முடியும்.. எதிலும் வெற்றி பெறுவீர்கள்.