Rasipalan Today: மிதுனத்துக்கு பாராட்டு..மீனத்துக்கு ஆதாயம்: உங்களுக்கான ராசிபலன் இங்கே!

Rasi Palan Today (28-02-2025): இன்று மாசி மாதம் 16 ஆம் நாள், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

Continues below advertisement

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today Februray 28, 2025: 

Continues below advertisement

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்...

மேஷம்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தேடி வந்தவர்களுக்கு நன்மைகளை செய்வீர்கள். பழைய பிரச்சனையொன்று முடிவுக்கு வரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தாமதம் மறையும் நாள.

ரிஷபம்

சகோதரரால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களின் சந்திப்புகள் ஏற்படும். பாதியில் நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். திடீர் வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பணவரவு திருப்தியை அளிக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.

மிதுனம்

எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உயர்கல்வியில் இருந்துவந்த தடைகள் குறையும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபார பணிகளில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். பாராட்டு கிடைக்கும் நாள்.

கடகம்

திட்டமிட்ட பணிகளில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோக ரீதியான மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயல்படவும். வெளியூர் பயணங்களில் விவேகம் வேண்டும். கனிவு வேண்டிய நாள்.

சிம்மம்

மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புகழ் மேம்படும் நாள்.

கன்னி

எடுத்துச் செல்லும் உடமைகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் வசதிகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். சமூக பணிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி லாபத்தை மேம்படுத்துவீர்கள். பணிவு வேண்டிய நாள்.

துலாம்

சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உறவு வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வாகனம் மீதான ஆர்வங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் அனுபவம் மேம்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் சுப காரியம் கைகூடும். வெற்றி நிறைந்த நாள்.

விருச்சிகம்

உயர்கல்வியில் தெளிவுகள் உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுபகாரியம் கைகூடுவதற்கான சூழல்கள் தோன்றும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். தூரதேச பயணம் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நன்மை தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

தனுசு

கடன் விஷயத்தில் சிந்தித்துச் செயல்படவும். தள்ளிப் போன காரியங்கள் சில முடியும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சவாலான செயலை செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். பயம் விலகும் நாள்.

மகரம்

எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழலை எதிர்கொள்ள வேண்டிவரும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். கவலை விலகும் நாள்.

கும்பம்

முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படவும். வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கிய சிந்தனை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே பொறுமை அவசியம். லாபம் நிறைந்த நாள். 

மீனம்

பணிகளில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். தொழில் நிமித்தமான நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். உலக நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைபோக்கில் சில மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.


 

Continues below advertisement