மேஷ ராசியினருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2025ம் ஆண்டுக்கான ராசிபலன்களை கீழே விரிவாக காணலாம். 


முன் சுருக்கமாக:


1.   திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகும்.
2.   நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பணம் கைக்கு வரும்.
3.   நீங்கள் ஆசைப்பட்டது எதுவும் அது நடைபெறும்.
4.   முதல் திருமணம் விவாகரத்து ஆனவர்களுக்கு,  இரண்டாம் திருமணம் வாய்ப்பு உண்டு.
5.  வெளிநாட்டு  வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல நேரம்.
6.   பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும்.
7.   கோர்ட் கேஸ்  வழக்குகள் சுமூகமாக முடியும்.
8.  பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவீர்கள்.
9.  நல்ல அரசு வேலை அமையும்.  
10.  புகழ் வெளிச்சம் உங்கள் மீது எப்பொழுதும் உண்டு.


அன்பார்ந்த ABP Nadu  வாசகர்களே  திடகாத்திரமான உடல் மட்டுமல்லாமல் மனவலிமையும் கொண்டவர் நீங்கள்.  எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும்  'அட  பாத்துக்கலாம்'  என்றவாறு  சாதாரணமாக கடந்து செல்வீர்கள்.  தெய்வத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்ட உங்களுக்கு  பல இன்னல்கள் கடந்த காலங்களில் வந்து போயிருக்கும். குறிப்பாக பொருளாதார ரீதியான சிக்கல்களை சந்தித்து இருப்பீர்கள்.  'போனால் போகட்டும் போடா'   என்று எவ்வளவு பெரிய இழப்பு வந்தாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் உங்களுக்கு,  2025 மிகப்பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும், பொருளாதார மேன்மையும் கொடுக்கப் போகிறது.   வாருங்கள். பொறுமையாக வருகின்ற வருடத்தில் என்னென்ன பெயர்ச்சி நடைபெறப்போகிறது? என்பதை பார்க்கலாம்.  


குரு பெயர்ச்சி:


பிப்ரவரி  ஏழாம் தேதி வரை குரு இரண்டாம் இடத்தில் இருந்து ராசியை நோக்கி பயணிக்கிறார். மூன்று காரியங்களில் பிப்ரவரி ஏழு வரை  பரிபூரணமாக நடைபெறும்  ஒன்று  காதல் காரியங்களில் வெற்றி பெறுதல்  'லவ் சக்சஸ்' என்று சொல்லுவார்களே ஆங்கிலத்தில், அது போல  காதலில் வெற்றி பெறுதல் அல்லது காதலில் திளைத்தல்,  ஆண் பெண் இருவர் காதலிப்பார். திருமணமானவர்களுக்கு தங்கள் மனைவியின் மீது காதல் வரும்.


மற்ற எல்லா காரியங்களை விடவும் அவரை அதிகமாக நேசிக்கக்கூடும். திருமணமாகாமல் இருக்கும் ஆண் பெண் இருவருக்கும் காதல் வெற்றி பெறும்.  ஜோதிடத்தில் காதல்  அல்லது ஆசை அல்லது பாசம் அல்லது அன்பு என்று எப்படி வேண்டுமென்றாலும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் விரும்புவென்ற ஒரு காரியம் நிறைவேறும் அல்லது நீங்கள் விரும்புகின்ற நபர் உங்களை மீண்டும் விரும்புவார் என்பது தான் அதன் அர்த்தம்.


 குழந்தை பிறப்பு:


திருமணமான தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு ஏற்படும். குறிப்பாக நீண்ட நாட்களாக  குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்போது அப்படி ஒரு பாக்கியம் உருவாகும்.  காதல் திருமணம்  செய்ய ஆசைப்பட்டால் இது ஒரு ஏற்ற காலம். அப்படி செய்பவர்களுக்கு உடனடியாக குழந்தை பெறும் உண்டாகும். குறிப்பாக, ஐந்து வருடம் திருமணம் ஆகி குழந்தை இல்லை அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் ஆகிறது என்று ஏக்கத்தோடு இருப்பவர்களுக்கு எல்லாம் 2025 ஒரு சிறப்பான வருடம்.


பிப்ரவரி  முதல்  மே மாதம் வரை  ராசிக்கு  2-ம் இடத்தில் குரு:


பணக்கஷ்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட உங்களுக்கு  விடியும் காலம் தான் இந்த இரண்டாம் இடத்தில் குரு.  பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய நான்கு மாதங்களில் செலவுகள் கட்டுக்குள் வரும். குறிப்பாக  வரவேண்டிய பணம் கைக்கு வராமல் தாமதப்பட்டிருந்தால் அவை நிவர்த்தி ஆகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். யாரிடத்திலும் நீங்கள் கடன் கேட்டிருந்தால் அந்த கடனை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அதிகப்படியான சம்பாத்தியத்தை சம்பாதிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தோடு நேரம் செலவிடுவீர்கள். தூர தேசப் பிரயாணத்தை மேற்கொள்வீர்கள். நீங்கள் பேசுகின்ற வார்த்தை அதிகாரத்தோடு மற்றவர்களுக்கு பயன் உள்ளதாய் அமையும். இயல் இசை நாடகத் துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.


ரிஷபம் -   மிதுனம்  குரு  பெயர்ச்சி:  2025    


அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த குரு பெயர்ச்சி மே மாதத்தில் நடக்கப் போகிறது. எதிரிகளாக இருந்தவர்கள் அனைவரும் காலில் வந்து சரண்டராக போகிறார்கள்.  சுலபமாக உங்களுக்கு புரியும் படி 2025 குரு பெயர்ச்சி பற்றி நான் கூறுகிறேன்.


1.   திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகும்.
2.   நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பணம் கைக்கு வரும்.
3.   நீங்கள் ஆசைப்பட்டது எதுவோ அது நடைபெறும்.
4.   முதல் திருமணம் விவாகரத்து ஆனவர்களுக்கு,  இரண்டாம் திருமணம் வாய்ப்பு உண்டு.
5.  வெளிநாட்டு  வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல நேரம்.
6.   பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும்.
7.   கோர்ட் கேஸ்  வழக்குகள் சுமூகமாக முடியும்.
8.  பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவீர்கள்.
9.  நல்ல அரசு வேலை அமையும்.  
10.  புகழ் வெளிச்சம் உங்கள் மீது எப்பொழுதும் உண்டு.


ராகு கேது பெயர்ச்சி:


2025  ராகு கேது பெயர்ச்சியினால் உங்களுக்கு ஏற்பட போகும் சிறப்பான மாற்றங்கள் என்ன? மற்ற எல்லா ராசியினரை விட  உங்கள் ராசிக்கு தான் ராகு கேது சிறப்புகளை சேர்க்கப் போகிறார். அதையும்  நீங்கள் எதிர்பார்க்கின்ற அளவிற்கு மேலே செய்யப் போகிறார். உதாரணத்திற்கு தொழில் நுட்ப ரீதியான வெற்றிகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பார். ஒருவேளை நீங்கள் மணமகன், மணமகள் தேடுகின்ற நபராக இருந்தால் ஆன்லைன் வாயிலாக அந்த வெற்றி உங்களை வந்து சேரும்.


புதியதாக தொழில் தொடங்கியிருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய தொழிலை விரிவுபடுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு சமூக வலைதள மூலமாக  நீங்கள் மார்க்கெட்டிங் செய்யும்பொழுது உங்களுக்கு பெரிதான லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக அயல் நாட்டிற்கு செல்ல வேண்டும். நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம் தான்.


ஐந்தில் இருக்கும் கேது உங்களை  ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்திச் செல்லுவார்.  உள்ளூரில் இருப்பவர்கள் வெளியூர் சென்று படிக்கவும் அல்லது வேலை செய்யவோ ஏற்பாடுகள் நடைபெறும். விநாயகர் வழிபாடு ராகு கேதுகளால் பிரச்சனை ஏற்பட்டால் தீர்வை உண்டாக்குவார்.  முதல் திருமணம் விவாகரத்து ஆகி இரண்டாம் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு  ஒரு நல்ல வரன்  வீடு தேடி வர வைப்பார்.