அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசியில் ராகு பகவானை பார்த்து பலர் பயப்பட்டு இருக்கலாம். ஆனால், சிலருக்கு அவர் நன்மையை வாரி வழங்கி இருப்பார். நான் சொல்லப் போகின்ற கருத்துக்கள்,  கோச்சாரத்தின் அடிப்படையில் இருக்கும். மேற்கொண்டு அவரது சொந்த ஜாதகங்கள் அடிப்படையில் 65%  பலன்கள் நடைபெறும். வாருங்கள் சுருக்கமாக மீன ராசிக்கு 2025 எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.  


2024 பொறுத்தவரை  சற்று கடினமான பாதை என்று சொல்லலாம். காரணம் சுலபமாக கிடைக்கக்கூடிய காரியங்கள்  கடினமாகவும், இது நடக்கவே நடக்காது என்று இருந்த காரியங்கள் சுலபமாகவும் கிடைத்திருக்கும்.  உதாரணத்திற்கு ராகு சம்பந்தப்பட்ட காரியங்கள் உங்களுக்கு எளிதாக கிடைக்கும். தொழில்நுட்பம், போக்குவரத்து துறை, மீடியாத்துறை, சமூக வளைதளத்தை பயன்படுத்துவோர் போன்ற சில துறைகள் ராகுவின் பிடியில் இருப்பதால் மீன ராசியில் அமர்ந்திருக்கும், ராகுவால் பல எண்ணற்ற நன்மைகள் நடத்திருக்கும். அதே சமயத்தில் ஏழில் கேது அமர்ந்திருக்கிறார். அவர் திருமண காரியத்தில் சிக்கல்களைக் கொண்டு வந்திருப்பார்.  அல்லது சில சங்கடங்களையாவது கொண்டு வந்திருப்பார். கவலை வேண்டாம் அடுத்து வரக்கூடிய 2025 உங்களுக்கு சிறப்பான ஆண்டாக தான் அமையப் போகிறது.


 குரு பெயர்ச்சி:


அன்பார்ந்த வாசகர்களே மீன ராசிக்கு பிப்ரவரி 7ஆம் தேதி வரை, மூன்றாம் வீட்டில் ரிஷபத்தில் இருக்கும் குரு இரண்டாம் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அப்படியானால் உற்றார் உறவினர்களோடு, நண்பர்களோடு மகிழ்ச்சிகரமான காலத்தை செலவிடுவதற்கான நேரம். புதிய உறவுகள் உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆவார்கள். தொழில் ரீதியான முன்னேற்றங்களும்,  புதிய பொறுப்புகளும் உங்களை வந்து சேர்ந்திருக்கும்.


காரணம் இரண்டாம் வீட்டில் இருக்கும் குரு பத்தாம் வீடான தொழிற் ஸ்தானத்தை பார்வையிடுகிறார். பிப்ரவரி 7ஆம் தேதி மே மாதத்திற்குள் மூன்றாம் வீட்டில் பயணிக்கப் போகிறார்.  அந்த காலகட்டத்தில் எதிரிகள் நண்பர்களாகவும், நண்பர்கள் எதிரிகளாகவும் மாறக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆகையால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

100 சதவீத நன்மை:


மே மாதத்திற்கு பிறகு குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை கொண்டு வரும். காரணம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் குரு அமர போகிறார்.  நான்கில் குரு வந்தால்  வீடு மாற்றம் இடமாற்றம் நிச்சயம் உண்டு. தொழிலில் 100% நன்மை உண்டு. நான்காம் வீட்டில் இருக்கும் குரு ஏழாம் பார்வையாக பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தை பார்வையிடுவார். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சில சங்கடங்களால் நீங்கள் ஊரை விட்டு வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அல்லது  புது வாய்ப்புகளுக்காகவும் நீங்கள் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்ளலாம். ஆக மொத்தம் நீங்கள் இடம் மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.


பன்னிரண்டாம் வீட்டில் பதிவாகும் குரு பகவானின் பார்வை, உங்களை பிரயாணங்களையும் மேற்கொள்ள வைக்கும். குறிப்பாக அது சிறு தூர பயணமாகவும் இருக்கலாம் அல்லது நெடுந்தூர பயணமாகவும் இருக்கலாம்.  திருமண காரியங்கள் நல்லபடியாக முடியும். வீட்டில் சுப காரிய நிகழ்வுகள் நடந்திட வாய்ப்புண்டு. பணவரவு தாராளமாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.


 ராகு கேது பெயர்ச்சி:


அன்பார்ந்த வாசகர்களே இதனால் வரையில் ராசியிலேயே ராகு பகவான் அமர்ந்து புதிய பாடத்தை உங்களுக்கு கற்றுக் கொடுத்திருப்பார். அடுத்தவர்கள் உங்களிடத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்? நீங்கள் அடுத்தவர்களிடத்தில் என்னை எதிர்பார்க்கிறீர்கள்? போன்ற  அலாதியான அனுபவத்தை கொடுத்திருப்பார்....  தற்போது மே மாதத்திற்கு பிறகு ராகு கேது பெயர்ச்சியில்  உங்களின் ராசிக்கு 12 ஆம் வீட்டில் ராகுவும் ஆறாம் வீட்டில் எதுவும் வந்து அமர்கிறார்கள்...  வேலை நிமித்தமாக.  அலைச்சலும் ஆதாயமும் உண்டு..  


கடன் இருந்தால் அப்படியே பாதியாக குறைந்து விடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். சர்ப்பங்கள் ஆறு, பன்னிரண்டாம் இடத்தில் இருந்தால் சிறப்பு என்று மூல நூல்கள் கூறுகிறது. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற அடிப்படையில் சர்ப்பங்கள் விரய ஸ்தானத்தில் இருக்கும்போது, விரயத்தை கட்டுக்குள் கொண்டு வரும். ஓரிடத்தில் இருக்காமல் உங்களை ஓடிக்கொண்டே இரு என்று உத்வேகப்படுத்தும். அதேபோன்று  சம்பாதிக்கக்கூடிய பணத்தை கட்டுக்கடங்காமல் செலவுகளையும் செய்ய வைக்கும். அதையும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது..  குடும்பத்தாரோடு நேரம் செலவிடுவதற்கான காலகட்டம்.


செவ்வாய் பெயர்ச்சி:


மீன ராசிக்கு ஐந்தாம் இடத்தில் செவ்வாய் நீச்சத்தில் அமர்ந்திருக்க, வருடத்தின் ஐந்து மாதங்கள் உங்களுக்கு சுமாரான பலன்களை கொண்டு வரும். குடும்பத்தாரோடு வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள். இந்த காலகட்டத்தில் காதல் திருமணம் சற்று தாமதம் ஆகலாம். தந்தையாரின் உடல் நிலையில் அக்கறை தேவை.    வருடத்தின் பிற்பகுதியில் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் வருவதால் அரசு சார்ந்த வேலைகள் உங்களுக்கு கிடைக்கும். அதிகாரம் உள்ள பதவிகளில் அமர்வீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும். வாழ்த்துக்கள் வணக்கம்.