பெரியார், கோவிலாறு, குல்லூர்சந்தை மற்றும் இருக்கண்குடி ஆகிய 4-நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகை உரிமைக்கு  ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன - என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தகவல்.

Continues below advertisement

மீன்பாசி குத்தகை உரிமை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியார், கோவிலாறு, குல்லூர்சந்தை மற்றும் இருக்கண்குடி ஆகிய 4-நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகை உரிமைகளை 5-ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்ச குத்தகைத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் 05.01.2026-அன்று நடைபெறவுள்ள மேற்படி 4 நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை குத்தகைக்கு எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொடர்புடைய விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Continues below advertisement

மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்

மேலும், விவரங்களுக்கு, உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அறை எண்: 228, இரண்டாம் தளம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், கூரைக்குண்டு, விருதுநகர் – 626002 என்ற அலுவலக முகவரியிலோ அல்லது 04562-244707 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது adfisheriesvnr@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, அவர்கள் தெரிவித்துள்ளார்.