விழுப்புரம் : உர கிடங்குகளில் வேளாண்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு பதுக்களில் ஈடுபட்டாலோ அதிக விலைக்கு விற்றாலோ கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்
விழுப்புரம் மாவட்டத்தில் 15 க்கும் மேற்பட்ட மொத்த உர வியாபாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள 545 சில்லறை வணிக விற்பனை கடைகளுக்கு விவசாய பயன்பாட்டிற்கு தேவையான யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் டிஏபி பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் குறுவை சம்பா சாகுபடி ஆரம்பித்துள்ள நிலையில் உரத்தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வேளாண்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உரக்கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் அடுத்த அயனம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் உரக்கிடங்கில் வேளாண்துறை தரக் கட்டுப்பாட்டு துணை இயக்குனர் விஜயகுமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்
இந்த ஆய்வில் போதுமான அளவு உரம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதா தரமான உரங்கள் அரசு நிர்ணயித்த விலைகளில் விநியோகம் செய்யப்படுகிறதா உள்ளிட்டவை உறுதி செய்யப்பட்டது இதனை எடுத்து கோலியனூர் மற்றும் கண்டமங்கலம் பகுதியில் இயங்கி வரும் ஐந்து சில்லறை விற்பனை கடைகளில் தரம் இல்லாத உரங்கள் விற்பனை செய்யப்பட்டதினை உறுதி செய்த வேளாண்துறை அதிகாரிகள் கடைகளுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து தரமற்ற உரங்கள் விற்பனை செய்தல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் உரம் பதுக்களில் ஈடுபடுவது போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் இது குறித்து புகார் அளிக்க மாவட்ட வட்டார அலுவலகங்களில் உள்ள வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.