மயிலாடுதுறையில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற டிராக்டர் பேரணியில் பல்வேறு விவசாய சங்கங்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக கண்டனம் தெரிவித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையேற்று, கொடியசைத்து துவங்கி வைத்தார். காவிரி நகரில் துவங்கிய பேரணியில், விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் பங்கேற்றனர்.
50 -க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் உடன் விவசாயிகள் பேரணியாக சென்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திரவாதம் செய்ய வேண்டும், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் (C2+50சதவீதம்) விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் உத்தரவாக படுத்த வேண்டும், சிறுகுறி நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தில் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை வெளியேற்றி விவசாயிகள் பயன்படும் வகையில் மாற்றி அமைத்திட வேண்டும்.
லக்கிம்பூர்கேரி விவசாயிகள் படுகொலைக்க காரணமான இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேரணையானது மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.