கிராம வளர்ச்சி குழு இந்த பட்ஜெட்டில் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 


திருவாரூர் மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம் குறிப்பாக மாவட்டத்தில் 90 சதவீதம் நெல் பயிர் சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் மூலமாக விவசாயிகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்துள்ளனர். தமிழ்நாடு அரசு இரண்டாம் முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த வேளாண் பட்ஜெட்டில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆகவே மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 2023 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது ஆகவே தமிழகத்தில் வறட்சியாக இருக்கக்கூடிய பகுதிகளில் சிறுதானிய உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு அதிக அளவில் உள்ளது மத்திய அரசு செரிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது அதனை தடுத்து நிறுத்த வேண்டும் அதற்கு பதிலாக எல்லா வகையான சத்துக்கள் உடைய காய்கறிகள் சிறுதானியங்கள் என தமிழகத்தில் நிறைய இருக்கிறது அதனை அங்காடி மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று இடுபொருள்களின் விலை மிக உயர்வாக உயர்ந்து கொண்டிருக்கிறது ஆகவே நெல் குவிண்டாலுக்கு 2500 வழங்க வேண்டும் கரும்பு டன் ஒன்றுக்கு நான்காயிரம் வழங்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.



 

இயற்கை இடர்பாடுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாக காப்பீடு வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு உரிய முறையில் காப்பீடு கிடைக்க பெறுவதில்லை ஆகவே தமிழ்நாடு அரசு நெல் பயிருக்கு மட்டும் காப்பிட்டு திட்டத்தை தனியாக அறிவிக்க வேண்டும், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் முன்கூட்டியே அணை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது ஆகவே மே மாத இறுதிக்குள் டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணியை முழுமையாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம வேளாண்மை வளர்ச்சி குழு என்கிற குழு அமைக்க வேண்டும் விவசாயிகள் வருவாய்த்துறை வேளாண் துறை பொதுப்பணித்துறை அலுவலர்களை நியமித்து குழு மூலமாக பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு இடுபொருள்கள் எந்திரங்கள் ஆகியவற்றை அந்த குழு பரிந்துரை செய்வதன் அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகவே கிராம வளர்ச்சி குழு இந்த பட்ஜெட்டில் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும்.

 

பருத்தி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், அடுத்த கட்டமாக குறுவை சாகுபடியில் ஈடுபட உள்ள விவசாயிகளுக்கு உரம் இடுபொருள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் சிறுகுறு விவசாயிகளுக்கு மண்வெட்டி பாறை தார்பாய் உள்ளிட்ட பொருள்களை மானிய விலையில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இந்த அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.